AMP - final epi

Advertisement

Sharmiseetha

Well-Known Member
Hiii... Frds & SIS's... AMP final epi pottachchu... Padithuvittu comments koduka marakkadhinga... Happy Reading...:):):):):)

எனது கற்பனைக்கு எழுத்தின் மூலம் உயிர் கொடுக்க... இத்தளத்தில் திரி ஏற்படுத்திக்கொடுத்த மல்லிகாமணிவண்ணன் அவர்களுக்கும்... கதை வாசகர்களுக்கும் எனது நன்றிகள்... அடுத்து அழகான கதையுடன் விரைவில் வருகிறேன்...:):):):):):):)
கடைசி எபி ஆதலால் சைலண்ட் வாசகர்களும் கமெண்ட் கொடுத்தால் நன்றாக இருக்கும் டியர்ஸ்:):)....






அத்தியாயம் - 21

எங்கே உனை கூட்டிசெல்ல...
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல...
என் பெண்மையும் இளைப்பாறவே...
உன் மார்பிலே இடம் போதுமே...
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே...
மெதுவாக இதயங்கள் இணைகிறதே...
உன் கைவிரல் என் கைவிரல்...
கேட்கின்றதே...

இளா ஹாஸ்பிட்டலில் இருந்து வந்து இரண்டு நாட்களானது.. ஆதி இளாவின் உடல்நிலை காரணமாக ஊட்டிக்கு சென்று வரலாம்... என்று முடிவெடுத்தான்... இன்று இரவு கிளம்புவதாக இருக்க... குடும்பத்தினர் அனைவரும் வழியனுப்ப வந்திருக்க.. ரோஹித் "மச்சான்... ஹனிமூன் போற இடத்துல என் கல்யாணத்த மறந்துடாதிங்க.." என்று ஆதியின் காதில் கிசுகிசுக்க... "வரமுடிஞ்சா வர்றோம்.. இல்லனா நீயும் கல்யாணம் முடிஞ்சி அங்க வந்துபாரு... ஓகே மச்சான்..." என்று ஆதியும் சொல்ல... விஷ்வா "டேய்.. இப்போ ரெண்டு பேரும் பேசறத நிறுத்தப்போறீங்களா.. இல்லையா..." என்று கத்த... "இவன் ஏண்டா இவ்ளோ டென்ஷனாகுறான்..." என்று ரோஹித் கேட்க.. ஆதி சிரித்துக்கொண்டே "அதுவா.. வைஷு ஒரு வருஷம் கழிச்சிதான் கல்யாணம்னு ஸ்ட்ரிக்டா ஆர்டர்... அதான் ஐயாக்கு இவ்ளோ டென்ஷன்.." என்று ஆதி சொல்ல ரோஹித்தும் சிரிக்கதொடங்க... "ம்ம்ம்.. சிரிங்கடா எனக்கும் ஒரு காலம் வரும்.. அப்போ வச்சிக்கிறேன்..." என்று சொன்னான்..

இரவும் நெருங்க... ஆதியும் இளாவும் கிளம்பிவர.. பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு காரில் புறப்பட்டனர்.. காரில் ஆதியின் பேச்சுக்கெல்லாம் மௌனத்தை மட்டுமே பதிலாக தந்துக்கொண்டிருந்தாள் இளா... பொறுமை இழந்த ஆதி "ஏய்.. என்னடி நான் மட்டும் லூசு மாதிரி பேசிட்டுவரேன்.. இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..." என்று வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கேட்க... இளா "அம்மாவும் அத்தையும் போற இடத்துல நீங்க என்ன சொன்னாலும் அமைதியா நடந்துக்கனுமாம்... அதான்ங்க இங்க இருந்தே அத மெயின்டென் பன்றேன்..." என்று பாவம்போல் சொன்னவளை... கண்டு ரசித்தவன்... "அப்போ.. நான் என்ன பன்னாலும் அமைதியா இருப்பியா..." என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தவனை தள்ளிவிட்டவள்... "என்ன.. ஆது.. இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல..." என்று சிணுங்கியவளை.. "நீதான்டி சொன்ன.. நான் என்ன பன்னாலும் அமைதியா இருப்பேன்னு... ம்ம்ம்.. சரி ஊட்டிக்கு போய் உன்ன வச்சிக்கிறேன்..." என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்தான்.. இருவரும் சந்தோஷமாக.. பேசிக்கொண்டே காலையில் ஊட்டி வந்தடைந்தனர்...

ஆதி ஒரு பெரிய ஹோட்டலின் முன்பு வண்டியை நிறுத்தியவன் "லாலீபாப்.. நீ உள்ள போய்.. ரிசப்ஷன்ல வெயிட் பன்னு.. நான் வண்டிய பார்க்ப்பன்னிட்டு வந்தர்றேன்..." என்று சொல்லிவிட்டு செல்ல.. இளாவும் அப்படியே செய்தாள்.. இருவரும் ரூம் புக் செய்து.. தங்களது அறைக்கு சென்றனர்... "கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு... வெளிய போலாம்..." என்று சொல்லி ஆதி இளாவை படுக்கையில் தள்ளியவன் அவளை கட்டிக்கொண்டு படுத்துவிட்டான்... அவளும் நன்றாக உறங்கினாள்...

மதியம் இரண்டு மணியளவில் கண்விழித்த இளாவுக்கு பசியெடுக்க.. ஆதியை தேடினாள்.. பாத்ரூமில் தண்ணீர் இறையும் சத்தம் கேட்க... "குளிக்கிறார் போலருக்கே..." என்று யோசித்துக்கொண்டே அமர்ந்திருக்க... வெளியே வந்த ஆதி "ஏய்.. என்னடி ட்ரீம்ல இருக்கியா.." என்று கேட்க.. "இல்லங்க.. பசிக்குது..." என்று இளா சொல்ல... "ம்ம்ம்.. இன்னும் பைவ் மினிட்ஸ்ல வந்துரும்.. நீ போய் ப்ரெஷ்ஷாகிட்டு வா... சாப்ட்டு சுத்திபாக்க போகலாம்..." என்று சொன்னான்...

இருவரும் உண்டுவிட்டு வெளியே சென்று... இரவு ஏழு மணிக்கு ஹோட்டல் திரும்புகையில் இளாவுக்கு ஏனென்றே தெரியாமல் படபடப்பாக உணர்ந்தாள்... ஆதியும் அதை கவனித்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்தான்... தங்களது அறைக்கு வந்ததும் இளா பாத்ரூமில் நுழைந்துவிட்டாள்... ஆதி சிரித்துக்கொண்டான்... அரைமணி நேரம் கழித்து வெளியே வந்தவளை பார்த்துக்கொண்டே பாத்ரூமிற்குள் நுழைந்தான்...

வெளியே வந்த ஆதி இளாவை தேட.. அவள் பால்கனியில் நின்று நிலவை ரசித்துக்கொண்டிருந்தாள்.. அவளின் அருகில் சென்று பின்னோடு அணைத்து... காதருகில் "லாலீபாப்.. ஐ லவ் யூ... ஐ வான்ட் யூடி..." என்று கிசுகிசுக்க.. அவளும் அவனின் அணைப்பில் கிறங்க.. அப்படியே அவளை தூக்கியவன் மஞ்சத்தில் கிடத்தி களவாட ஆரம்பித்தான்...

இருவரும் தங்களின் ஹனிமூனை முடித்துவிட்டு சென்னை திரும்பினர்... ரோஹித் மற்றும் ரேஷ்மியின் கல்யாணம் சிறப்பாக நடந்து முடிய... ஹரிஷ் மற்றும் நந்துவின் நிச்சயதார்த்தம் நாளை நடக்கவிருப்பதால் இளா மருமகளாக ஓடிஆடி வேலை செய்ய... ஆதி அவளைதான் பார்த்துக்கொண்டிருந்தான்... திடீரென்று அவள் மயங்குவதுபோல் தோன்ற... கீழே விழும் முன்னே தாங்கிபிடித்தவன்... அவளை தூக்கி ஷோபாவில் கிடத்தினான்... தனது அம்மாவை கூப்பிட்டு சொல்லியவன்.. டாக்டருக்கு போன் செய்தான்... தனம் தண்ணீர்தெளித்து இளாவை விழிக்க செய்ய... டாக்டர்வந்து பார்த்துவிட்டு "இளா கன்சிவ்வாக இருக்கிறாள்..." என்று சொல்ல மொத்த குடும்பத்திற்குமஎ சந்தோஷம் தாங்கமுடியவில்லை... இதே சந்தோஷத்துடன் நந்துவின் நிச்சயம் நன்றாக முடிந்தது.....

.........................................

எட்டு வருடத்திற்கு பிறகு.....

விஷ்வா தனது வீட்டில் காய்கறி கட் செய்துகொண்டிருக்க... "அப்ப்பா... அம்மா உங்கள வரசொன்னாங்க..." என்று சொல்ல.. "எதுக்கு குட்டி..." என்று திருப்பியவன்... "அதான பார்த்தேன்... இந்த குட்டிமாவும் அம்மா மாதிரி தான இருப்பா... இப்படி சொல்லிட்டு அப்படி ஓடிப்போகறது..." என்று சலித்துக்கொண்டே கிச்சன் சென்றவன்... அங்கே மும்முரமாக சமையல் செய்து கொண்டிருந்தவளை அணைக்க... "விடுடா... நிகி பாப்பா வந்துடப்போறா..." என்று ஷாலி சொல்ல... "அவ அப்பவே ஷ்ரவன்கூட விளையாட ஆதி வீட்டுக்கு போயிட்டா..." என்று சொல்லிக்கொண்டே அவளின் இதழை சுவைக்க... இருவரும் தங்களின் உலகை மறந்தனர்....

இங்கே நந்துவிடம் மாட்டிக்கொண்டு
முழித்துக்கொண்டிருந்தான் ஹரிஷ்... "சித்து பொறந்து.. அஞ்சு வருஷம் ஆச்சு... ஆனாலும் நான் என்ன சொன்னேன்னு உங்களுக்கு ஞாபகம் வரல.. இதுலவேற பெரிய டாக்டர்.. ம்ம்ம்.. மறதி டாக்டர்..." என்று அவனை திட்டிக்கொண்டிருந்தாள்... அவள் சொல்வதையெல்லாம் கேட்டு ஒன்னும் சொல்லாமல் பழங்களை கட் செய்து தட்டில் அடுக்கியவன்... "என் செல்லம்ல இத மட்டும் சாப்டுவீங்களாம்..." என்று அவளுக்கு நீட்ட... வாங்கிக்கொண்டவள். "இவ்ளோ திட்றனே உனக்கு கோவம் வரலயாட..." என்று கேட்டு அவன் கழுத்தை சுற்றிகைப்போட... "ம்ம்ம்.. வராது... நீ இப்படி என்ன கட்டிப்பிடிச்சேன்னா... பாப்பாக்கு வலிக்கும்.. என்று அவளின் பெரிய வயிற்றின் மேல் கை வைத்து ஹரிஷ் சொல்ல... "ம்ம்ம்.. அப்போ நீ என்ன சைடா கட்டிப்பிடிச்சா..." என்று கேட்க.. "உன்கிட்ட என்னால முடியாதுடி..." என்று அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தவன்.. "ஏய்.. கேர்புல்லா இரு.. சித்தும் நீயும் இளாவீட்டுக்கு போயிடுங்க.. நான் வர லேட்டாகும்..." என்று சொல்லிவிட்டு ட்யூட்டிக்கு சென்றான்...

ரேஷ்மி தனது உப்பு காஃபியை மறக்காமல் இன்றுவரை அதை பாலோ செய்கிறாள்.. அவன் எதாவது சண்டைபிடித்தால்.. அதற்கு பதிலாக உப்பு காஃபியை அவனுக்கு கொடுத்துவிடுவாள்.. இவளின் தொல்லை தாங்க முடியாமல் சீதாவிடம் கேட்க.. அவரும் தனது மருமகளுடன் சேர்ந்துகொண்டு அதையே செய்தார்... ஆனாலும் இன்றுவரை அதையே குடித்து உயிர் வாழ்கிறான் ரோஹித்... இவனுக்கு சப்போர்ட்டாக இருப்பது செல்ல மகள் கேஷிகா தான்... இவர்களின் காதலும் காஃபியை போல் மாறாமல் இருக்கிறது...

ஆதியின் வீட்டில்... "அப்ப்பா..." என்றும் "ஆது..." என்றும் கோரசாக குரல் கேட்க... நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தவன்... அறையில் இருந்து வேகமாக ஓடிவந்த ஷ்ரவனையும்,நிகி குட்டியையும் கண்டவன்.. "என்னடா உள்ள சத்தம்..." என்று கேட்க... "அப்பா நிலாகுட்டியும் அம்மாவும் சண்ட போட்டுக்கறாங்கப்பா..." என்று ஷ்ரவன் சொல்ல... வேகமாக உள்ளே சென்று பார்த்தவன் தலையிலேயே அடித்துக்கொண்டான்.. பின்ன படுக்கையின் ஒருபுறம் ஆதி இளாவின் ஐந்து வயது செல்ல மகளும் மறுமுனையில் இளாவும் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.. நடுவில் ஒரு லாலீபாப் சாக்லேட்...

தனது மகளிடம் சென்று "என்னாச்சி... என் செல்லத்துக்கு..." என்று ஆதி கேட்க... "ம்ம்ம்... அப்பா லாலீபாப் எனக்கு தான வாங்கிட்டு வந்தீங்க... ஆனா.. அம்மா திருடி வச்சிக்கிட்டா... என்னோடது தான்னு கேட்டா... சண்டபோர்றாப்பா..." என்று நிலா அழவும்.. "சரிங்க நிலாம்மா.. அம்மாகிட்ட இருந்து வாங்கிடலாம்..." என்று லாலீபாப்பை எடுத்து மகளின் கையில் கொடுத்து... "இப்ப ஒகே வா.." என்று கேட்க.. "ம்ம்ம்..." என்று சொல்லிவிட்டு தன் அம்மாவிடம் பழுப்புகாட்டிவிட்டு.. தனது அண்ணனுடன் விளையாட ஓடிவிட்டாள் நிலா...

"ஏய்.. குழந்தைகிட்ட போய் இப்படியா சண்ட போடுவ... அதுவும் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்..." என்று பொய்யாக திட்ட... "எனக்கு தெரியும் குழந்தைகிட்ட எப்படி நடந்துக்கனும்னு... நீங்க தான் பாப்பாகிட்ட பொய்சொல்லி இருக்கீங்க.. யாருக்கு லாலீபாப் வாங்கிட்டு வந்தீங்க... எனக்குதான..
அப்புறம் ஏன் நிலாகுட்டிக்குன்னு பொய் சொன்னீங்க..." என்று கத்தியவளை.. "ஏய்...நிறுத்துடி.. எதுக்கு இப்படி கத்தற... பாப்பா காதுல விழுந்துடப்போகுது..." என்று ஆதி சொல்ல... "சரி விடுங்க... எனக்கு இப்போ லாலீபாப் வேணும்..." என்று சொன்னவளின் இதழை சிறைப்பிடித்தான் ஆதி... இவர்கள் வாழ்வு என்றும் இனிமையாக, சந்தோஷமாக இருக்க வேண்டும்... என வாழ்த்தி அனைவரும் விடைபெறுவோம்...

...........முற்றும்...........
Very nice story
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top