ராதையின் கண்ணன் இவன்-17

Advertisement

E.Ruthra

Well-Known Member
மறுநாள் வழக்கம் போல கல்லூரி வர அதே மரத்தடியில் பொன்னிற மேனியன், நேற்றைய கோவத்தை விடாமல் ராதிகா அமைதியாய் சென்று அவன் அருகில் அமர, அவனோ உற்சாகமாய்,

"குட் மார்னிங் ராதா", இவன் பேசுவதே காதில் விழாத பாவனையில் அவள் இருக்க,

"என்ன ராதா இன்னும் கோவமா இருக்கியா, இது எல்லாம் அநியாயம் சொல்லிட்டேன், அவன் கிட்ட மட்டும் பேசிட்ட, ரெண்டு பேரும் வெளிய போய் எல்லாம் சாப்பிட்டு இருக்கீங்க, இப்போ என் கிட்ட மட்டும் பேச மாட்டற, இது எந்த ஊரு நியாயம்" என திடிர் நீதிபதி ஆகி நியாயதர்மத்தை பொளந்து கட்ட, அவன் பேச்சில் சிரிப்பு வந்தாலும், அமைதியாக ,

"இது எங்க ஊரு நியாயம்,சரி நா ஒன்னு கேட்குறேன் அதுக்கு உண்மையை சொன்னா நா பேசுறேன்", என பொன்னிற மேனியன் ஏகத்துக்கும் அலர்ட் ஆகி,

"என்ன"

"நேத்து நாங்க வெளிய போய் சாப்பிட வரைக்கும் தெரிஞ்சி இருக்கு, உனக்கும், கிறிஸ்க்கும் நடுவுல என்ன, சொல்லு சொல்லு", ஆர்வமே உருவாய் கேட்க,

"நீ பேசுறத யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க, எனக்கும் அவனுக்கும் நடவுல என்னவாம், அவன் என் காதலி பாரு, உன்னை" என பல்லை கடிக்க,

"இல்ல உங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்னமோ இருக்கு, ரெண்டு பக்கியும் என் கிட்ட சொல்ல மாற்றிங்க"என குறை பட, "ஆமா, மச்சான்களுக்கு நடுவுல ஆயிரம் இருக்கும், அதை எல்லாம் உன்கிட்ட சொல்ல முடியுமா" என கேட்க நினைத்தாலும் அதற்கு விளக்கம் கேட்டால் சொல்லி மாளாது என,

"நீ தான் பெரிய துப்பறியும் சாம்பு ஆச்சே, நீயே கண்டுபிடி, இப்போ கிளாஸ்க்கு நேரம் ஆச்சி, கிறிஸ் அப்போவே வந்துட்டான், வா" இவளை இழுத்து கொண்டு செல்ல, சிரிப்புடனே அவனுடன் ராதிகா செல்ல எதிரில் ரஞ்சன் வந்தான். எப்போதும் ராதிகாவை பார்த்தால் ஒரு புன்னைகையை சிந்துபவன் இன்று ஒரு கேவலமான பார்வையோடு கடந்து செல்ல ராதிகா அவனை யோசனையோடு பார்க்க, பொன்னிற மேனியனும் இதை கவனித்தான். ஏனோ அந்த பார்வையை பொறுக்க முடியாமல் அவனின் கார்மேகத்திடம், "நீ கிளாஸ்க்கு போ ராதா, எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு வந்துடுறேன்" என அவளின் பதிலுக்காக காத்திருக்காமல் ரஞ்சன் சென்ற திசையை நோக்கி சென்றான். அவனின் பார்வை உறுத்த, இப்போது ராகவ் அவசரமாக சென்றது எல்லாம் சேர்ந்து மனசு அபாய மணி அடிக்க, எதும் பிரச்னை ஆக கூடாது என்ற வேண்டுதலோடு வகுப்பறைக்கு செல்வதை தவிர வேறு வழி இருக்க வில்லை பொன்னிற மேனியனின் கார்மேகத்திற்கு.

வகுப்பு தொடங்குவற்கான மணி அடித்த பின்பும், கிறிஸ் உள்ளே வந்து தனது உரையை தொடங்கிய பத்து நிமிடம் ஆன பின்பும் பொன்னிற மேனியன் வந்தபாடு இல்லை. கிறிஸ் உம் ராதிகாவிடம் மற்றவர் கவனத்தை கவராத வகையில் "அவன் எங்கே" என என்று சைகையில் கேட்க, அவளும் தெரியவில்லை என அதே சைகையிலே தெரிவித்தவளின் கண்கள் முழுதும் வாயிற்படியிலே அவனின் வரவை எதிர்நோக்கி. அடுத்த ஐந்து நிமிடத்தில் வாசலில் கோபத்தில் முகம் சிவக்க, சட்டை கசங்கி வந்து நின்றவனை பார்த்து கிறிஸ் ஏதும் கேட்காமல் உள்ளே அனுமதிக்க, வகுப்பில் உள்ள அனைவரும் அவனையே அதிர்ச்சியாய் பார்ப்பதை சிறிதும் சட்டை செய்யாமல் சென்று தனது கார்மேகத்தின் அருகில் அமர்ந்தான்.

அவளின் அருகாமையே ஏதோ ஒரு அமைதியை மனதில் பரப்ப சற்று தனிந்த கோவத்தை முற்றிலும் தனிக்கும் விதமாக அவனின் கார்மேகம் தண்ணீரை எடுத்து நீட்ட, எதும் பேசாமல் வாங்கி குடித்தான். அதன் பிறகே அவனால் கிறிஸ் பேசுவதை கவனிக்க முடிந்தது. ஒரு வழியாக கிறிஸ் அன்றைய நாளுக்கான தன் உரையை முடித்து வெளியேரும் முன் ராதிகாவை வகுப்பிலேயே காத்திருக்குமாறு சொல்லிவிட்டு, தன்னுடன் பொன்னிற மேனியனையும் அழைத்து கொண்டு சென்றான். வகுப்பிற்கு வெளியே சற்று தள்ளி கிறிஸ் உம் பொன்னிற மேனியனும் தீவிர வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருப்பது இங்கிருந்தே தெரிய ராதிகா தான் என்ன பிரச்சனை என தெரியாமல் இங்கு தவியாய் தவித்தாள்.

கிறிஸ் உடன் பேசிமுடித்த பொன்னிற மேனியன் சாதாரணமாக உள்ளே வந்து,

"வா ராதா, சாப்பிட போலாம்" என அழைக்க,

"என்ன பிரச்சனை ராகி" அமைதியாய் கேட்க,

"பிரச்சினை தான், ஆனா நீ தலையிட்டு தான் சரி பண்ண முடியும்னு சொல்ற அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லை, சோ இதை எங்க கிட்ட விட்டுடு ராதா" என விளையாட்டு போலவே சொன்னாலும் குரலில் இருந்த அழுத்தம் அதை பற்றி மேலும் கேட்க விடாமல் செய்ய, அமைதியுடனே அவன் உடன் உணவுக்கு சென்றாள்.

அதன் பிறகான நாட்களில் இருவருமே அப்படி ஒரு பிரச்சனை நடந்ததாக காட்டிக்கொள்ளாமல் ராதிகாவுடன் ஒவ்வொரு நாளையும் வெகு மகிழ்ச்சியாகவே கொண்டாடினர். கல்லூரியில் கிறிஸ் வகுப்புகள், அவர்களின் கட்டுரைகள் அது முடிந்ததும் எங்கேயாவது மூவரும் வெளியே செல்வது என முடிந்த வரை ஒன்றாகவே சுற்றி திரிந்தனர். அன்று கடைசி நாள் கிறிஸ் வகுப்பு முடிந்ததும், மதிய உணவிற்கு பிறகு தன் நேரத்தை மாணவர்களுக்காக ஒதுக்கிய கிறிஸ்கு நன்றி சொல்லி, கவுரவிக்கும் விதமாக சிறிய அளவில் விழா ஒன்றினை ஏற்பாடு செய்து இருந்தனர் கல்லூரி நிர்வாகத்தினர். இறுதி ஆண்டு மாணவர்கள் அந்த விழாவுக்கு பொறுப்பேற்று இருந்தனர். அவர்களில் ரஞ்சனும் ஒருவன்.

விழாவும் தொடங்க அனைவரும் பேசி முடித்த பின் கிறிஸ்யை பேச அழைத்தனர். அவனோ வழக்கமான அமெரிக்கா ஆங்கிலத்தில் பேசாமல், அழகிய தமிழில் பேச தொடங்கினான். இந்த கல்லூரியில் அவனுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டவன் கடைசியாக,

"இந்த மாதிரி காலேஜ்க்கு வந்து கிளாஸ் எடுக்குறது இது தான் பர்ஸ்ட் டைம், நா அல்ரெடி இந்தியா வர பிளான்ல தான் இருந்தேன், அப்போ தான் இங்க வந்து கிளாஸ் எடுக்க என்ன அப்ரோச் பண்ணாங்க, நா உடனே அக்ஸ்ப்ட் பண்ண முக்கியமான காரணமே என்னோட தங்கச்சி தான், அவங்களும் இதே காலேஜ்ல தான் படிக்கிறாங்க" என அந்த இடம் முழுக்க ஒரே சலப்பு, யாராக இருக்கும் என, ராதிகாவோ "இதை எல்லாம் எதுக்கு சொல்லி கிட்டு இருக்கான் ராகி" என பொன்னிற மேனியனிடம் கேட்க, சொல்ல சொன்னதே இவன் தானே அதனால் பதில் ஏதும் சொல்லாமல் அவளை பார்க்க, "அப்போ அன்னைக்கு இதை தான் பேசுனிங்களா" என சரியாக கணித்து கேட்க, இவனோ ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் தன் பார்வையை கிறிஸ் இடமே திருப்ப, தொடர்ந்த கிறிஸ்,

"யாரா இருக்கும்னு ஏதாவது கெஸ் இருக்கா" கூட்டத்தை பார்த்து கேட்க ஆசிரியர்கள் உள்பட எல்லாருமே அமைதியாய் இருக்க, ரஞ்சனோ தீவிர சிந்தனையில் இருக்க, கிறிஸ் தொடர்ந்து,

"நான் கிளாஸ் எடுத்த டீபார்ட்மெண்ட் தான், ராதிகா, அது மட்டும் இல்ல அவங்க எங்க கம்பெனில ஷர் ஹோல்டரும் கூட" என சொல்ல, எல்லாருக்கும் அதிர்ச்சியில் மயக்கம் வாரதது ஒன்று தான் குறை, கிறிஸ் கம்பெனியின் மதிப்பு எல்லாருமே அறிந்த ஒன்று, அதில் இவளுக்கும் பங்கு என்றால் அதே பல கோடிகளை தாண்டும், இந்த பெண் இன்னும் எத்தனை ரகசியங்களை தான் உள்ளடக்கி உள்ளாள் என அதிர்ச்சியாக பார்க்க, ராதிகாவோ கிறிஸ்யை முறைத்து கொண்டு இருந்தாள், "இது எல்லாம் இப்போ தேவையா எனும் விதமாக", டாலியின் பாச பார்வையை பார்த்த கிறிஸ் போதும் என நினைத்தானோ என்னவோ சொல்ல வேண்டியதை சொல்லி விட்டதால் இதையும் அதையும் பேசி ஒரு வழியாய் உரையை முடித்து கீழே இறங்கி வர விழாவும் ஒரு வழியாக முடிந்தது. பொன்னிற மேனியனிடம் பேச வந்த ரஞ்சனை அவன் ஒரு கேவலமான பார்வையுடன் கவனமாக தவிர்த்து விட்டு அவனின் கார்மேகம் மற்றும் கிறிஸ் உடன் வெளியேறி கார் இருக்கும் இடம் வந்தான்.

"இப்போ எதுக்கு கிறிஸ் ஸ்டேஜ்ல அப்படி பேசுன"

"அவசியம்னு தோணுச்சி" என நறுக்கு தரித்தார் போல கிறிஸ்யை கேட்ட கேள்விக்கு பொன்னிற மேனியன் பதில் தர, அவனை ஒரு பார்வை பார்த்த ராதிகா,

"சரி இன்னைக்கு எங்க போறோம்" என பொதுவாக கேட்க, கிறிஸ்

"நீ இன்னைக்கு வீட்டுக்கு போடா டாலி, எனக்கும் ஆர்.கேகும் வெளிய கொஞ்சம் வாங்க வேண்டியது இருக்கு, நாளைக்கு ஏர்போர்ட்ல பார்க்கலாம்" என அவர்கள் தனியே செல்ல போவதை நாசுக்காக அறிவிக்க, இவர்களின் கூட்டு களவாணி தனம் இந்த ஐந்து நாட்களில் பழகி இருந்ததால் அதை பற்றி ஏதும் கேட்காமல்,

"ஹ்ம்ம், நீ தில்லை, சிவாவை பார்க்க ஊருக்கு போகலையா" என கேட்க, அவனோ,

"இல்லடா, இந்த தடவை டைம் இல்ல நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்" என மழுப்பலானா பதிலையே தந்தான். ராதிகாவுக்கு தெரியும், தன்னை தெய்வா வீட்டில் தங்க வைத்ததில் இவனுக்கு அவர் மேல் கோவம் அதனால் தான் பார்க்க செல்லவில்லை என, இப்போ சொன்னாலும் கேட்க மாட்டான், பிறகு பேசி கொள்ளலாம் என இருவருக்கும் பொதுவாக தலை அசைத்து விடை பெற்று முத்து அண்ணாவுடன் தன் காரில் கிளம்பினாள்.

ஏனோ இறுக்கமாக இருந்த பொன்னிற மேனியனின் முதுகில் ஒரு தட்டு தட்டிய கிறிஸ் தங்களுக்காக காத்திருந்த காரில் ஏற, ராகவும் உடன் ஏற ராகவின் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

"ஏன்டா இன்னும் அப்படியே இருக்க" கிறிஸ், பொன்னிற மேனியனின் மவுனத்தை உடைக்கும் விதமாக கேட்க,

"எனக்கு மனசே ஆற மாட்டுது கிறிஸ், ஒரு பொண்ணு மேல எவ்ளோ ஈசி அஹ பழி போடுறாங்க, எதையுமே விசாரிக்கமா, எது உண்மைன்னு தெரியாமா, முதல்ல ராதாவை ஜட்ஜ் பண்ண அவன் யாரு, என் கிட்டவே சொல்றான், ஒரே நாள்ல ராதிகா ஒரு வெள்ளைகாரனை புடிச்சிட்டா, அவ மூஞ்சிக்கு நீயே அதிகம் இதுல இன்னொரு ஆளு, அப்போ அழகா இருந்தா ஒரே நேரத்துல ரெண்டு பேரோட சுத்துனா தப்பு இல்லையா, என்னமோ நா ராதிகாவை லவ் பண்றது தியாகம் மாதிரியும், அவ எனக்கு நன்றி கடன் பட்ட மாதிரியும் என்ன பேச்சு இது எல்லாம், அவளை மாதிரி ஒரு பொண்ணு என்ன லவ் பண்ணா அது தான் பெரிய விசயம் அது புரியாம, என்ன மாதிரியான ஆட்கள் இவங்க எல்லாம், எண்ணம், புத்தி எல்லாம் எவ்ளோ அழுக்கா இருக்கு, ஆனா வெளியா டீசஸ்ன்ட் அஹ சுத்துறாங்க, நாளு வருஷமா அவனை பத்தி தெரியாம அவன் கிட்ட பழகி இருக்கேன் பாரு என்ன சொல்லணும், ரொம்ப தப்பா பேசிட்டான் கிறிஸ், அவனை கொல்லணும்னு வெறியே வந்துச்சு, ஆனா தேவையில்லாம இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா ராதாக்கு தான் கெட்ட பேரு, அதான் அடியோட விட்டுட்டேன்" என குமுற, நான்கு நாட்களாக இவன் இதையே தான் பேசுவதால் கிறிஸ் அமைதியாக கேட்டுக்கொண்டான். அவன் கோபத்தில் இருந்த உண்மை புரியாமல் இல்லை. இவனுக்கும் கொலை வெறி வந்தது தான்,ஆனால் பின்விளைவுகளை பற்றி யோசித்து, செய்ய வேண்டியதை செய்தாயிற்று எனினும் மனது பொறுக்கவில்லை.

நடந்தது இது தான், முதல் நாள் கிறிஸ் உம் ராதிகாவும், உணவு உண்ண நட்சத்திர விடுதிக்கு செல்ல அங்கு ரஞ்சனும், தன் நண்பர்களுடன் வந்து இருந்தான். இவர்களை ஒன்றாக பார்த்த ரஞ்சன் ராதிகாவை தவறாக நினைத்து, மறுநாள் கல்லூரியில் பார்க்கும் போது கேவலமாக பார்த்து வைக்க, ஏன் என கேட்க போன பொன்னிற மேனியனிடம் மேலே சொன்ன படி பேசி வைக்க இருவருக்கும் கைகலப்பானதால் தான் ராகவ் வகுப்பிற்கு தாமதமாக வந்தது.ரஞ்சன் நண்பர்கள் ஒரு கருத்தரங்குக்கு சென்று இருக்க, பொன்னிற மேனியனிடம் அடி வாங்கிய ரஞ்சனும் வீட்டிற்கு சென்று விட, ரஞ்சன் நண்பர்கள் மீண்டும் கல்லூரி வர போவது திங்கள் அன்று தான், அவர்களும் வந்தால் நிச்சயம், கிறிஸ்உம், ராதிகாவும் விடுதிக்கு வந்தது கண், காது வைத்து கல்லூரியில் பரவ வாய்ப்புகள் அதிகம் என்பதால் தான் கடைசி நாளானா இன்று ராதிகாவுக்கும் கிறிஸ்க்கும் ஆன உறவை எல்லோரும் அறியும்படி மேடையில் சொல்ல சொன்னான் பொன்னிற மேனியன். ரஞ்சனும் திங்கள் அன்று தான் வருவான் என எதிர்பார்க்க அவனோ இன்றே வந்து இருந்தான். கிறிஸ் பேசி பேசியே பொன்னிற மேனியனை சமாதான படுத்த, அவனும் ஓர் அளவுக்கு இயல்புக்கு திரும்பினான்.

ஒருவாறாக இவர்கள் இருவரும் வீட்டை அடைய ராஜமாதா இவர்களை வரவேற்க காத்து இருந்தார். காரில் இருந்து இறங்கிய கிறிஸ் அவரை பார்த்ததும் அவர் தான் ராகவின் அம்மா என புரிந்து,

"என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கமா" என அவர் பாதம் பணிய, உச்சி குளிர்ந்து போன ராஜமாதாவோ,

"நல்லா இருப்பா, பிள்ளைனா இப்படி இருக்கணும் எனக்கும் ஒன்னு வந்து பொறந்து இருக்கு பாரு" என ராகவை திட்ட அவனோ,

"எனக்கு அது எல்லாம் யாரும் சொல்லி கொடுக்களையே, ஏனா என்னோட அம்மாவுக்கே இது எல்லாம் தெரியாது" என வழக்கம் போல அவரை கலாய்க்க, கிறிஸ் இருவர் பேசுவதையும் ஆர்வமாக பார்த்தான்.

இருவரும் உள்ளே வந்து உட்கார, பானம் கொடுத்து அவர்களை உபசரித்தார் ராஜமாதா. அப்படியே மூவரும் அமர்ந்து பேசி கொண்டு இருக்க, மணி ஏழு ஆகவும் எழுந்த ராஜமாதா,

"உனக்கு இறால் ரொம்ப பிடிக்கும்னு ராகவ் சொன்னான் கிறிஸ், அதான் இறால் தொக்கு, சப்பாத்தி, இறால் நூடுல்ஸ் எல்லாம் பண்ண சொல்லி இருக்கேன், வேற ஏதும் வேணுமா, கூச்ச படமா சொல்லுப்பா" என பாசமாக கேட்க,

"இல்லமா இதுவே அதிகம், சாப்பிட்டு மறுபடியும் அவ்ளோ தூரம் ட்ராவல் வேற பண்ணனும் இல்ல" என கூற, ராகவிடம் திரும்பிய ராஜமாதா,

"உனக்கு இட்லியா, இல்ல தோசையாடா"

"இட்லி பண்ண சொல்லுங்கமா"

"இல்ல டா அந்த மாவுல இட்லி செஞ்சா கல்லு மாதிரி இருக்கும், அதனால நீ தோசையே சாப்பிடு என்ன" என, ராகவ் பல்லை கடித்து கொண்டே சரி என, கிறிஸ் வந்த சிரிப்பை வாயிலே புதைக்க, அடுத்த கேள்வியை கேட்டார் ராஜமாதா,

"எத்தனை மணிக்கு இங்க இருந்து கிளம்பனும், எத்தனை மணிக்கு சாப்டுவிங்க, சொன்னா அதுக்கு ஏற்ற மாதிரி சமைக்க சொல்லிடுவேன்"

"ஒன்பது மணிக்கு கிளம்பனும் ராஜமாதா, ஒரு எட்டறைக்கு சாப்பிடறோம், உனக்கு ஓக்கே தானே கிறிஸ்" என அவனிடம் கேட்க, அவன் பதில் சொல்லும் முன் முந்திய ராஜமாதா,

"ஒன்பது மணிக்கு கிளம்பனும்னா, எட்டு மணிக்கு சாப்பிட்டா தான் கரெக்ட் அஹ இருக்கும், அப்போவே சாப்பிடுங்க" என ஏகத்துக்கும் கடுப்பான பொன்னிற மேனியன்,

"நீங்களே எல்லாத்தையும் ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிட்டு எதுக்கு சும்மா என் கிட்ட கேட்குறீங்க"

"நீயும் நா முடிவு பண்ணதையே சொன்ன,என் புள்ள பேச்சை நா மீறவே மாட்டேன்னு பில்ட் அப் பண்ணலாம்னு பார்த்தேன், எங்க இந்த தடி மாடு ஒழுங்காவே கோ ஆப்புரேட் பண்ண மாட்டுதே, எனக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்" என சோக கீதம் வசிக்க,

"அம்மா……." என பொன்னிற மேனியனின் பற்கள் மீண்டும் அறைப்படவும்,

"அவ்ளோ தான் இவனுக்கு வெறி வந்துடுச்சி, இதுக்கு மேல இங்க இருந்தா ஆபத்து கிறிஸ், மீ எஸ்கேப்" என அதுக்கும் கவுண்டர் கொடுத்தவாறே சமையலறையை நோக்கி செல்ல, கிறிஸ் அடக்கமாட்டாமல் சிரித்தான்.

"உண்மையா ஆர்.கே பெரிய பாரம்பரியமான குடும்பம், பணம், புகழ், வசதி இதை எல்லாத்தையும் தாண்டி உன்னையும், அம்மா மாதிரியான ஆட்கள் கூட தான் என்னோடு டாலி இருக்க போறான்னு நினைக்கும் போது நிம்மதியா இருக்கு, அவ கண்டிப்பா சந்தோஷமா இருப்பா" என கிறிஸ் சொல்ல, பொன்னிற மேனியனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இத்தனை மாதம் பேசி நண்பர்கள் ஆகி இருந்தாலும், இருவருமே ராதிகாவை பற்றி பேசுவதை கவனமாக தவிர்த்து விடுவர். இவனும் தன் எண்ணத்தை சொன்னது இல்ல, அவனும் இப்படி ஒரு எண்ணம் இருக்கா என கேட்டது இல்லை, இன்று எதிர் பார்க்காத நேரத்தில் கிறிஸ் தன் சம்மதத்தை தெரிவிக்க தன் மகிழ்ச்சியை தன் இறுகிய அணைப்பின் மூலம் பொன்னிற மேனியன் தெரிவிக்க சற்று நெகிழ்ச்சியான தருணம் தான் அது. பிறகு ராஜமாதா வர நேரம் கேலியும், கிண்டலுமாக கழிய, மீண்டும் ஒரு முறை ராஜமாதா விடம் ஆசிபெற்று கிறிஸ்உம், பொன்னிற மேனியனும் தங்கள் இருப்பிடம் நோக்கி பயணத்தை தொடங்கினர்.

இவன் ராதையின் கண்ணன்…………..
 

banumathi jayaraman

Well-Known Member
என்னாஆஆஆஆது?
ராதிகாவும் கிறிஸ்டோபர் ஸ்மித்தின் கம்பெனியில் ஷேர் ஹோல்டரா?
ஐயோ எனக்கு மயக்கம் மயக்கமா
வருதே
யாராச்சும் ஒரு ஜோடா வாங்கிட்டு
வாங்கப்பா
இல்லை ஹார்லிக்ஸ் வாங்கினாலும் சரிதான்

எனக்கே இப்படி இருந்தால் அந்த ஸ்வேதாவுக்கு எப்படி இருக்கும்?
நம்ம தெய்வாவின் காதல் கணவர் தெய்வத்தின் தெய்வம் சண்முகம்
எப்படி ஃபீலு பண்ணுவாரு?

அந்த ரஞ்சனின் கோண வாயை நீ
பஞ்சர் பண்ணாமல் விட்டது மஹா
தப்பு, ஆர் கே
இதிலே உனக்கு அந்த கிறிஸ் வேற
கேட் போட்டுட்டான்
வாடி வா ரஞ்சன்
இன்னொரு சந்தர்ப்பத்தில் ராகவ்
கிட்ட நீ மாட்டாமையா போவே

ராஜமாதா ஆனாலும் பொன்னிற மேனியனை நீங்க ரொம்பவும் டேமேஜ் பண்ணுறீங்க, ராஜமாதா
இதெல்லாம் நல்லாயில்லே,
ராஜி செல்லம்

"கண்டுபுடிச்சான் கண்டுபுடிச்சான் ராகவ்வின் காதல் நோயை கிறிஸ் கண்டுபுடிச்சான் சிஷ்யா சிஷ்யா
சரியா சரியா..........."

ஏண்டாப்பா ராகவ் அம்பி
சம்பந்தப்பட்ட ராதிகாவிடம் உன்னோட லவ்வை சொல்லாமல் கிறிஸ் மச்சான்காரன் இப்படி கண்டுபுடிக்கிற மாதிரியா இருப்பாய்?
போற போக்கைப் பார்த்தால் தில்லை சிவாவிடம் ராஜமாதாவே நேரடியாக சம்பந்தம் பேசிடுவாங்க போலவே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top