தூரம் போகாதே என் மழை மேகமே!! - 30

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



படகிலிருந்த சாக்கு பையினையும் இன்னும் சில உபயோகமுள்ள பொருட்களையும் ஒன்றாக சேர்த்துக் கட்டிக்கொண்டு இருவரும் படகிலிருந்து எடுத்துக் கொண்டு அந்தக் கடற்கரையிலிருந்த 1 கிலோ மீட்டருக்கு தூரத்திலிருந்த ஒரு மரத்தின் அடியில் சென்று அமர்ந்தனர்.


“ஆதிரை.. ஏதேனும் வழி கிடைக்கிறதா என்று தேடி பார்ப்போம். கிளம்பு” என்றான் அர்ஜூன்.


“ஆமா அர்ஜுன் சார்.. இங்க பாருங்க.. ஒரு சிறிய குன்றினைப் போன்று இருக்கு. அதற்கு மிக அருகிலே கடலின் மேற்பரப்பு இருப்பது போல தெரிகிறது. அதன் மூலமாக நாம் வெளியில் செல்ல முடியுமா என்று பார்க்கலாம் சார்" என்று அருகில் தெரிந்த சிறிய மலையினை காண்பித்தாள். அவ்வாறு காண்பித்துக் கொண்டிருந்த போதே கோவை பழத்தினை ஊட்டிய அதே அணில் எங்கிருந்தோ ஓடி வந்து அவளது தோட்பட்டையின் மீது அமர்ந்தது.


அதனைப் பார்த்த இருவரும், “இந்த அணில் மிகவும் அழகாக இருக்குல்ல” என்ற லயித்தனர்.


அணில் ஏதோ சைகையில் புரியாத மொழியில் ஆதிரையிடம் பேசியது. அதன் செயலை கண்டு ஆதிரைக்கு அதனை ரசிக்கத்தான் தோன்றியது. மாறாக அதனை புரிந்து கொள்ள அவள் முயற்சிக்கவிலை.


“அர்ஜூன் சார். இந்த அணில் அந்த ஆற்றின் கரையில் ,எனக்குக் கோவை பழம் ஊட்டிவிட்டது தெரியுங்களா!” என்றாள்.


“ம்ம். விசித்திரமாக இருக்கிறதே!.. இந்தா இந்த ரொட்டி துண்டுகளை அதற்குக் கொடு” ஆதிரையிடம் ரொட்டியினை நீட்டினான். அவளிடமிருந்து அந்த அணில் ஆர்வத்துடன் வாங்கி கொறித்தது.


அதன் பின் அந்த அணில் ஆதிரையை விட்டு நகரவே இல்லை. அவளுக்கும் அதனை மிகவும் பிடித்துவிட்டது.


“அர்ஜூன் சார். போகும் போது இந்த அணிலினையும் உடன் அழைத்துச் செல்வோமா?” என்று சிறுபிள்ளையை போல ஆதிரை கேட்பதை பார்த்த அர்ஜூனிற்கு ஆதிரையினை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சட்டென விழியினை வேறுபுறம் திருப்பியவன். “அது சரி மகாராணி. உங்கள் ஆணைபைடியே செய்வோம். இப்போது கிளம்ப ஏற்பாடு செய்வோமா” என்றுவிட்டு எழுந்தான் அர்ஜூன்.


“ஹய்யா! அணில் குட்டி நீயும் என் கூடவே வரப் போர! Jolly … jolly “ என்று எழுந்து நின்று குதித்தாள். அவளது இந்தச் சைகை இதுவரை அவன் கண்டிராத ஆதிரையை அர்ஜூன் கண்டான்.


அங்கிருந்த காளியான தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களையும் , தார் பையின் ஒரு ஓரத்தையும் கொண்டு ஆதிரை அவளுக்காக 30 நிமிடத்தில் ஒரு செருப்பினை தயார் செய்தாள். அதனைச் சணல் கயிற்றினைக் கொண்டு இருக்கமாக தன் காலில் கட்டினாள்.


“காட்டு வழிப் பாதையில் எப்படிச் செருப்பில்லாமல் உன்னை அழைத்துச் செல்வது” என்று அர்ஜூன் கேட்ட உடனே ஆதிரையின் கண நேரத்தில் உதித்த idea –ல் உருவான அவசர boot –ஏ இந்த பிளாஸ்டிக் boot.


அவளையே வியப்பாக பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன், “ஏய் இதெல்லாம் நீ எங்கு கற்றுக் கொண்டாய். எதைக் கொண்டும் ஏதாவது தயாரித்து விடுகிறாய்.” என்று சணல் கோணிப்பையில் சில பொருட்களைப் போட்டுக் கொண்டு எழுந்தான்.


அவனுக்குப் பதிலாக புன்னகித்த ஆதிரை அவளும் மீதியிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு அர்ஜூனுடன் சேர்ந்து நடந்தாள்.


“என்ன பதிலே இல்லை. தென்னஓலையில் ஆடை .. தண்ணீர் பாட்டிலில் செருப்பு! எங்கு இதையெல்லாம் கற்றாய்!” என்றான் அர்ஜூன்.


“அது… “ என்று மீண்டும் புன்னகித்த ஆதிரை தொடர்ந்தாள் , “சார்… idea என் அண்ணி சொல்லி கொடுத்தது. என் அண்ணி Fashion technology படித்தவர்கள். அவுங்க எப்போதும் சொல்வாங்க எந்த பொருளினைக்கொண்டும் உடையும் அணிகலங்களையும் design செய்ய முடியும் தெரியுமா என்று.. அதனோடு பொருட்களை கையாள்வது தனியே இருந்த இந்த இரண்டு வருட தனிமை சொல்லிக் கொடுத்தது.” என்று முடித்தாள்.


“அண்ணியா!! உனக்கு அண்ணாவும் அண்ணியும் இருக்கிறார்கள் என்று சேகர் அங்கிள் சொல்லவில்லையே. நீ யாருமற்ற பெண் மற்றும் ஒரு குழந்தையுடன் இருபதாகத்தானே.. என்று மட்டும்தானே சொன்னார்” என அவளைப் பற்றி அறிந்திடும் ஆர்வத்தில் சொன்னான் அர்ஜூன்.


“ம்ம்… ஆமாம். அண்ணனும் அண்ணியும் இருக்கிறார்கள். எங்கோ இருக்கிறார்கள். நான்தான் என் அங்கிளிடம் யாரிடமும் சொல்ல வேண்டாமென்றேன். அதனால் இருக்கும்” என்று விரக்தியாகப் பேசினாள் ஆதிரை.


“மன்னித்துவிடு ஆதிரை. உன் வேதனையை நினைவு படுத்தியிருந்தால்” என்றான் அர்ஜூன்.


“இல்ல சார். பரவல்ல. எனக்கும் அவர்களைப் பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்ற தோன்றல் சிலகாலமாக இருந்து கொண்டிருந்தது.” என்றாள் ஆதிரை.


“ஓ… அப்போ சரி. உனக்குப் பேச வேண்டுமென்றால் சொல். அவுங்க எங்க இருக்காங்க. எப்படி இருக்காங்க. ஏன் உன்னைத் தனியே விட்டுவிட்டுச் சென்றார்கள். ராஜாவினாலா?” என்று கேட்டான் அர்ஜுன்.


சில நிமிடங்கள் அங்கே மௌனம் நிலவியது. அர்ஜூன் அவளுக்கு மேலும் அழுத்தம் கொடுத்துக் கேட்டு அவளை வேதனைக்குள்ளாக விரும்பாமல் மௌனமாக நடக்கலானான்.


பின் ஆதிரை, ஒரு நீண்ட நெடிய மூச்சுக்குப் பின் தொடங்கினாள். “அர்ஜூன் சார். நா இப்போ உங்கட்ட சொல்றது எக்காரணம் கொண்டும் என் ராஜாவிற்கு எந்தக் காலத்திலும் தெரியக் கூடாது. “ என்று ஒரு பீடிகையுடன் தொடங்கினாள் ஆதிரை.


“ம்ம்… சொல்… அவனிடம் நான் எதுவும் சொல்ல போகிறதில்லை” என்றான் அர்ஜூன்.


“சார். ராஜா என் வயிற்றில் பிறந்த என் மகன் அல்ல. சொல்லப் போனால் எனக்கு எந்தக் காதலனும் இருந்ததில்லை. நெருங்கிய நண்பர்களுமில்லை” என்றாள் ஆதிரை.


அர்ஜூனின் கண்ணில் ஒரு மின்னல் ஏற்பட்டு அவளைத் திரும்பி பார்த்தான். “என்ன!!” என்று அதிர்ந்தான். அவனுள் அவனையும் அறியாமல் ஏதோ ஒரு குதுகலம் பரவுவதை அவனால் தடுக்கமுடியவில்லை.


ஆனால் ஆதிரை, அமர்ந்த குரலில் தொடர்ந்தாள். “ ஆமாம் சார்.. அவன் என் அண்ணனின் மகன். என் மகன் இல்லை. ராஜாவை வேண்டாம் என்றோ, எனக்கு வாழ்வதற்குப் பிடிமானமாக ராஜா இருக்கக் கூடுமென்றோ எண்ணி ,என் அண்ணனும் அண்ணியும் அவனை என்னிடம் விட்டுவிட்டு சுமார் இரண்டு வருடத்திற்குமுன் லண்டன் சென்றனர். இன்னும் திரும்பவில்லை.” என்று கண்கள் ஈரமாவதை ஆதிரையால் தடுக்க முயன்றாள்.


அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூன் லண்டன் என்றதும் “என்ன லண்டனுக்கா!” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.


“ம்ம். ஆமாம் சார். “ என்று ஆரம்பித்து ராஜாவைப் பற்றியும் ரிதிகா, அரவிந்தை பற்றியும் அர்ஜூனிடம் கூறினாள் ஆதிரை. ஆனால் அவன், ரிதிகாவின் தம்பி அவளிடம் பேசிய வரம்பு மீறிய பேச்சினையும் ஏன் ராஜாவை அவள் தன் மகனாக வளர்க்க வேண்டுமென்று கேட்டதையும் மட்டும் சொல்லவில்லை.


எல்லாவற்றையும் சொல்லி முடித்ததும் ஏதோ பாரம் குறைந்தது போல அவள் தோட்பட்டையின் மீதிருந்த அணிலினை தடவிக் கொடுத்து “இதுதான் என் கதை சார். எனக்கு அப்பா, அம்மா இல்லன்னு என்றுமே கவலையிருந்தது இல்ல. ஏன்னா என் விவரம் தெரிஞ்சு நா அவங்கள் பார்த்தது இல்ல. ஆனால் என் அண்ணா! அவன்தான் எனக்கு எல்லாமேவா இருந்தான். எனக்கு ஏனோ யாரும் close friend-அ தொடர்ந்தது இல்ல. ஆனால் என் அண்ணி ,என்னோடு best friend . life –ல யாருக்கும் கிடைக்க முடியாத friend. ரெண்டு பேரும் ஒரே நேரத்துல கூட இல்ல. அதனோடு அவர்கள பற்றி தகவலுமில்லனா, நா என்ன செய்ய முடியும் சார். எங்கோ அவர்கள் நலமாக இருந்தால் சரி. என்று நானும் விட்டுவிட்டேன்” என்று முடித்தாள்.


“என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஆதிரை.” என்றவனுக்கு அவள் யாரென்று இப்போது தெளிவாக புரிந்துவிட்டது. என் அக்காவின் கணவர் தங்கை. ‘இவளிடம் என் அக்காவும் மாமாவும் விமான விபத்தில் இறந்ததைச் சொல்லலாமா! வேண்டாமா! எங்கோ அவர்கள் நிம்மதியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் இவள் நிம்மதியை ஏன் கெடுக்க வேண்டும்’ என்று பின் சொல்லாமல் விட்டுவிட்டான்.


பின், “ஆனால் ஏன் ராஜாவை அவர்களிடம் மீண்டும் விட்டுவிடாமல் உன்னுடன் வைத்துக் கொண்டாய். என்னதான் இருந்தாலும் தாயின் அரவணைப்பு போல எந்த அன்பும் ஈடாகாதே!” ஏதோ தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்டான் அர்ஜூன்.


“செய்தேனே. என் ராஜாவைப் பல முறை அவர்களிடம் சேர்ப்பித்துவிட முயன்றேனே!. ஆனால் என் முயற்சி தோல்வி அடைந்தது. அதனோடு என் ராஜாவுக்கு அவனை வேண்டாமென்று அவனது பெற்றோர்கள் விட்டுச் சென்றனர் என்று பிற்காலத்தில் தெரிந்தால் அவன் வேதனைப் படக்கூடுமென்றுதான் கடைசியில் இந்த முடிவெடுத்தேன். என்னை என் அண்ணா அண்ணியிடம் பேசுவதை தடுக்கத்தான் நந்தி போல என் அண்ணியின் தம்பி இருந்தானே.” என்று அன்றைய நினைப்பில் கோபம் சிறிது முகத்தில் கனல சொன்னாள் ஆதிரை.


ஆதிரையின் கோபம் ஏன் என்று புரியாமல் அவளுக்கு, “ம்ம்ம் சரி… சரி… விடு… நடந்தது நடந்துவிட்டது. இதுவும் கடந்து போகும். ஊர் சென்றதும் அதற்கு என்னால் முடிந்த ஏற்பாடு செய்கிறேன்” என்றான் அந்தத் தம்பியே அவன்தான் என்பதை மறைத்து.


“ஆ…. அதெல்லாம் இப்போது வேண்டாம் சார். அது முடிந்து 2 வருடம் முடிந்துவிட்டது. இப்போது என் ராஜாதான் எனக்கு எல்லாமே. அவன் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது. இப்போதுமே அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று எனக்குக் கவலையாக இருக்கிறது” என்று தாய்மையின் பதட்டத்துடன் கூறினாள்.


அவளை விசித்திரமாகப் பார்த்த அர்ஜூன் ,” சரி சரி.. உன் விருப்பம்.” என்றான்
 

Saroja

Well-Known Member
அருமை
ஆதிரை யார்னு தெரியுது
இவன் தான் அந்த தம்பினு
தெரியும் போது ஆதிரை
என்ன செய்வா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top