அல்வா பேமஸ் திருநெல்வேலி

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
கல்லிடைகுறிச்சி அப்பளம் famous in tirunelveli district..

அத்தால நல்லூர்னு ஒரு ஊர் இருக்கு on the way from tirunelveli to papanasam..இங்க இருக்கற கோவில் தாமிரபரணிக் கரைல இருக்கு..just நடந்து போயி ஆற்று கரைல கால வைச்சுக்கலாம்..கஜேந்திர மோக்‌ஷம் கிடைச்ச இடம்.

காரையாறுல குளிப்பது தனி அனுபவம்..மூலிகை கலந்த தண்ணிங்கறதுனால சருமத்திற்கு நல்லது..
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
தாமிரபரணி கரைல இருக்கற நவதிருப்பதியும் தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள்..ஒரு நாள்லப் பார்த்துவிடலாமுனு நினைக்கறேன்..ஆனா வைணவ ஸ்தல்ங்கள் timings are strict.
 
Amrutha SSG

New Member
திருமலை கோவில், சங்கரன் கோவில் காசி விஸ்வநாதர் கோவில்,பாபநாசம், மணிமுத்தாறு, ,அகஸ்தியர் அருவி ,காரை யார், மாசொலை, குற்றால சாரல், கோடை தெரியாத அளவிற்கு காற்று, பாசமிகு ஆண்கள், வாயடி பெண்கள் ,அவர்களிடம் பேசி வெற்றி பெற முடியாது !
சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
En friends, colleagues niraya per nellai. Indha baashai thannee patta paadu. Pillaigalai Makkale nu thaan koopidaradhe .
Soru podu nnu solla maattanga. Vaiyinnu azhaga irukum.

Sekkali nnu thaan intro kudupaanga. Thamizh azhagu.. makkal veyil adhigam giradhunaala, konjam karuppa irupaanga.. aana manasu vellai. Nambi edhuvum seyyalaam.
 
Suvitha

Well-Known Member
நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்கப்பட்ட பொண்ணு.

திருநெல்வேலி ன்னு சொன்னாலே முதலில் அல்வா.. அப்புறம் ..."ஜோ"சொன்னது. ஆனால் எனக்கு தெரிந்து அப்படி ஒன்றும் இல்லை. நல்லா வெள்ளந்தியான மக்கள். தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட்டாம் பாளையங்கோட்டை திருநெல்வேலி க்கு மிக அருகில் தான் இருக்கிறது. எனக்கு தெரிந்து தாமிரபரணி தான் இரண்டு நகரங்களையும் பிரிக்கிறது. திருநெல்வேலி யும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படும்.

திருநெல்வேலி யில் ஜம்முன்னு கம்பீரமாக வீற்றிருக்கும் நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில் நகரின் சிறப்பு.

மணிமுத்தாறு அணை இங்கே தான் இருக்கிறது. கோரை பாய்க்கு புகழ்பெற்ற பத்தமடையும் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.

மாவட்டத்தின் சுற்றுலா தளமென்று பார்த்தால் குற்றாலமே முதலிடம் வகிக்கிறது. சீசனில் இங்கு பெய்யும் மழையில் நனைந்து கொண்டே அருவிகளில் குளிப்பது அலாதி இன்பம்.

அதேபோல பாபநாசமும் பெயர் பெற்ற ஸ்தலமே...
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் காண கண் கோடி வேண்டும்.. கோவில் கோபுரத்திற்கு நேர்கீழே உட்கார்ந்து இருந்தால் அடிக்கும் காற்று...ஸ்பெஷல் தான்...
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் திருநெல்வேலி மாவட்டத்தின் பெருமைகளை...
அதே போல வெயிலையும் தாங்க முடியாது...செம ஹாட் மச்சி....
 
Suvitha

Well-Known Member
En friends, colleagues niraya per nellai. Indha baashai thannee patta paadu. Pillaigalai Makkale nu thaan koopidaradhe .
Soru podu nnu solla maattanga. Vaiyinnu azhaga irukum.

Sekkali nnu thaan intro kudupaanga. Thamizh azhagu.. makkal veyil adhigam giradhunaala, konjam karuppa irupaanga.. aana manasu vellai. Nambi edhuvum seyyalaam.
மக்ளே ன்னு mostly கூப்பிடுறது கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் தான் ஆதிமா. may be கன்னியாகுமரி மாவட்டத்து பார்டரில் இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்து மக்கள் அப்படி கூப்பிடலாம். திருநெல்வேலி ன்னு சொன்னாலே "லேய் " தான். இதில் என்ன ஆச்சரியம் னா பெண்பிள்ளைகளையும் "லேய்...இங்க வா ல" ன்னு தான் கூப்பிடுவாங்க...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சங்கரன் கோவில்ல கோமதி அம்பளோட "ஆடித் தபஸு " கண் கொள்ளா காட்சி. அங்க கோவில்ல புத்துலேர்ந்து மண் எடுத்து வந்து வீட்ல வைச்சுகிட்டு..பூச்சி கடிக்கு தடவிகிட்டா விஷத்தை எடுத்திடுமுனு சொல்லுவாங்க.

ஆமா அந்த புத்து மண்ணு ரொம்ப நல்லது சொல்வாங்க...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மக்ளே ன்னு mostly கூப்பிடுறது கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் தான் ஆதிமா. may be கன்னியாகுமரி மாவட்டத்து பார்டரில் இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்து மக்கள் அப்படி கூப்பிடலாம். திருநெல்வேலி ன்னு சொன்னாலே "லேய் " தான். இதில் என்ன ஆச்சரியம் னா பெண்பிள்ளைகளையும் "லேய்...இங்க வா ல" ன்னு தான் கூப்பிடுவாங்க...

ஆமாபா மக்களேன்னு நாகர்கோவில், கன்னியாகுமரில இருக்கவங்க தான் அப்படி கூப்பிடுவாங்க...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top