நேசம் மறவா நெஞ்சம்-31Nesam Marava Nenjam(Final)

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ்..... என்னோட முதல் கதை நேசம் மறவா நெஞ்சத்தை இன்றுடன் நிறைவு செய்கிறேன்....... இவ்வளவுநாள் எனக்கு ஊக்கம் கொடுத்த எல்லாருக்கும் என்னோட நன்றி..... ஒரு குடும்ப தலைவியா இருந்த எனக்கு இந்த தளத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த மல்லிகா மேம்க்குதான் முதல்ல நன்றிய சொல்லனும்.... எனக்கு கமெண்ட்ஸ் போட்ட எல்லா ப்ரண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி...... நீங்க போட்ட கமெண்ட்ஸ்தான் நான் இன்னும் எழுத ஊக்கம் கொடுத்துச்சு..... போன பதிவுக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லா ப்ரண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றிப்பா....



 

Keerthi elango

Well-Known Member
Hey sema ending chlm...super super... Last L0
muthuku mani adichuruchu...ore veetlaye elarayum crct panitanunga pa kannan brothers.... So sweet....kannan kayal vera level...i m going to miss them...but sema ending...chlm Seekiram adutha story oda kalakala vanga...ena rmba kaaka veikatheenga....
 

laksh14

Well-Known Member
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-31



கயலுக்கு பரிட்சை ஆரம்பிக்க ஒரு வாரம் இருக்கையில் ஹால்டிக்கெட் கொடுக்கவும் கண்ணன் கயலை கூட்டிச்சென்று வாங்கி வந்தவன்..... அவளை படிக்கட்டும் தான் தொல்லை செய்யக்கூடாது என தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு கயலை விட்டு தள்ளியிருந்தான்......கயலுக்குத்தான் என்னவோ போல இருந்தது....... இவ்வளவுநாள் கண்ணன் கைபிடியிலேயே இருந்துவிட்டு இப்போது தள்ளியிருப்பது கஷ்டமாகவே இருந்தது....... இவரு வேணும்னா கட்டிப்புடுச்சுக்குவாரு.... அப்புறம் தள்ளியிருப்பாரு.... இனிமே கிட்ட வரட்டும் இருக்கு அவருக்கு........கயல் கண்ணன் மேல் கடுப்புடன் இருந்தாள்....



பரிட்சைக்கு கண்ணன் தான் கூட்டிச்சென்று கூட்டிவந்தான்..... கயலும் ஏதும் பேசாமல் இருக்கவும் கண்ணன் படிப்பு டென்சனில் இருப்பதாக நினைத்துக்கொண்டான்..... தேவைக்கு மட்டுமே பேசிக்கொண்டனர்......பரிட்சை அன்றுடன் முடியவும் கண்ணன் காலையில் வண்டியில் கூட்டிச்செல்கையில்...

“ என்னடி.... இன்னையோட பரிட்சை முடியுதா......”என்று சீட்டியடித்தபடி வர.....



“ஆமா மத்தியானம் நீங்க கூப்புட வரவேணாம்.... நான் அமுதாவோட எங்க அம்மாவீட்டுக்கு போறேன்.....”



வண்டியை கீரிச்சிட்டு நிப்பாட்டியவன்......” எதுக்கு .... என்ன விசயமா உங்க அம்மா வீட்டிக்கு போற..... என்கிட்ட கேட்டியா.....”



“அத்தைக்கிட்ட கேட்டுட்டேன்....”

“அத்தைகிட்ட கேட்டியா..... அவுகளா உனக்கு தாலி கட்டியிருக்காக..... நான்தான் தாலிகட்டியிருக்கேன்……”



போய்யா போ.....போ.. இவருக்கு வேலையில்லனா மட்டும் என்னைய கொஞ்சுவராம்... நாம இவரு என்ன சொன்னாலும் கேக்கனுமாம்.... என்று மெதுவாக முணங்கி கொண்டுவர..... கல்லூரிக்கு வந்தவன்....

“.என்ன என்னமோ பேசுற... காதுல கேக்குறமாதிரி பேசு உனக்கு மட்டும் கேக்குறமாதிரி பேசுனா என்ன அர்த்தம்....”



அப்போது பஸ்ஸில் இருந்து அமுதா இறங்கிவர.... கயல் கண்ணனை கண்டுகொள்ளாமலேயே சென்றாள்......



கண்ணனோ... இவ நம்ம மேல கோபமா இருக்காளா.....அடிப்பாவி ஒரு மனுசன் மெனக்கட்டு வேலையை விட்டுப்புட்டு காலேஜ்க்கு கூட்டிட்டு வாரானேன்னு இல்லாம... அம்மா வீட்டுக்கு போறாளாம்ல.... நாம பக்கத்து ஊருல பொண்ணு எடுத்துருக்கவே கூடாது.... அதுதான் இப்புடி பொசுக்கு பொசுக்குன்னு ஊருக்கு போறேன்னு சொல்லுறா.... பாப்போம்டி நீ எப்புடி ஊருக்கு போறன்னு..... என்றபடி கடைக்குச் சென்றவன் பரிட்சை முடியும் நேரத்தில் கரெக்டாக காலேஜ் வாசலில் நின்றான்.....



அமுதாவும் கயலும் பேசிக்கொண்டு வந்தவர்கள்.... கண்ணனை பார்க்கவும் அவன் அருகில் வந்தார்கள்....” என்ணன்ணே இவ என்னோட ஊருக்கு வாரேன்னு சொன்னா.... அப்புறம் ஏன் நீங்க வந்திருக்கிங்க.....”



“ஆமாத்தா அவ ஊருக்கு போகட்டும்... நான் பாக்க வந்தது உன்னையதான்.... உங்க வீட்ல மாப்புள பாத்துட்டாங்களாம்ல..... ஞாதகம் எல்லாம் பொருத்தமா இருந்துச்சுன்னு கேள்விபட்டேன்.... மாப்புளய புடிச்சிருக்கா....”

“ம்ம்ம்..... அம்மா அப்பாவுக்கு புடிச்சா போதும்ணே......”

“நீ இப்புடி சொல்லுற... ஆனா உன்னைய பொண்ணு பாத்துட்டு போயிட்டு உன்னோட வாயால சம்மதத்தை சொன்னாதான் ஆச்சுன்னு ஒருத்தன் என்னைய தொந்தரவு செஞ்சுகிட்டு இருக்கான்மா.....”



“அவரு உங்களுக்கு தெரிஞ்சவராண்ணே.....”



“ம்ம்ம் அவர கயலுக்கும் தெரியும்தா....”

கயல்...திருதிருவென விழித்தபடி இருந்தாள்... இவரு எப்ப நம்மகிட்ட சொன்னாரு... இவுக ரெண்டுபேரும் என்ன பேசுராங்கன்னே தெரியலயே......



“அவனும் என்னோட ப்ரண்ட் தாம்மா....” போன் பண்ணி வரச்சொல்ல... அந்த டைரக்டர்தான் மாப்பிள்ளையே......அமுதா வெட்கப்பட்டுக்கொண்டே கீழே குனிய.....



“வாங்க ரோட்டுல நின்னுகிட்டு பேச வேணாம் ஏதாச்சும் ஒரு ஹோட்டலுக்கு போவோம்...”.என்றபடி பக்கத்திலிருந்த ஹோட்டலுக்கு சென்றார்கள்... ஆண்கள் இருவரும் வண்டியில் செல்ல பெண்கள் நடந்தே வந்தார்கள்.....நால்வரும் வர கண்ணன் தன் பக்கத்தில் இருந்த சேரில் கயலை அமர வைக்க.... அமுதாவும் கண்ணனின் நண்பனும் அருகில் அமர்ந்தார்கள்.......அமுதாவிடம் சம்மதத்தை வாங்குவதற்காக மெதுவாக பேச ஆரம்பிக்க...

.கண்ணன் மெதுவாக கயலை பிடித்தவன்...” வா......நாம அங்கிட்டு போயி உக்காருவோம்” என்றபடி வேறிடம் கூட்டிச்சென்றவன்.... தன் நண்பனிடம் கண்ணை காட்டிவிட்டு செல்ல..... அமுதாவுக்கு சற்று தள்ளி அவளுக்கு முதுகை காட்டியபடி கயல் அமர.... கண்ணன் அவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான்...... கண்ணன் கயலை பார்த்தபடி ஒன்றும் சொல்லாமல் இருக்க......கயலுக்கு வாய் பேசாமல் இருக்கவும் சுற்றிமுற்றி பார்த்தவளுக்கு தூக்கம் சுழற்றியது...... இவரு ஏன் பேசாம இருக்காரு..... இந்த அமுதா கொரங்கு வீட்ல மாப்ளே பாத்திருக்குன்னு சொல்லவேயில்லயே.... இருடி மகளே பஸ்ல வருவீல உன்னைய பாத்துக்குறேன்... என்று மனசுக்குள் கறுவியவள்.....பேசாமல் அந்த சமோசாவை எடுத்து சாப்பிட்டாள்..... பத்து நிமிடம் கழித்து பஸ்ஸுக்கு நேரம் ஆகவும் அமுதாவை திரும்பி பார்க்க அவர்கள் இருந்த மேஜை காலியாக இருக்கவும் படக்கென்று எழுந்தவள் அமுதாவுக்கு போன் பண்ன போக....



“இப்ப யாருக்கு போன் பண்ண போற.....”



“இந்த அமுதா கொரங்குக்குதான்..... சேந்து ஊருக்கு போலாமுன்னு சொன்னேன்.... பஸ்ஸு வரப்போகுது.......அவள ஆளக்காணோமே.....”



“அவ அப்பவே போயிட்டா.... உங்க ஊரு பஸ்ஸுல எம்ப்ரண்ட் இந்நேரம் ஏத்திவிட்டுருப்பான்.... வா நாம நம்ம வீட்டுக்கு போவோம்.....”என்றபடி வண்டியை கிளப்ப....
lovely novel
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top