வீட்ல_சும்மா_தான_இருக்க என்பதன் அர்த்தம் !

Advertisement

Saroja

Well-Known Member
சின்ன பிள்ளைகள் சொன்னால் பரவாயில்லை
பெரியவர்கள் சொல்லும் போது மனம் வழிக்கும்
 

Rajesh Lingadurai

Active Member
சும்மா என்பதன் அர்த்தம் !

வீட்ல_சும்மா_தான_இருக்க என்ற வார்த்தையில் இருக்கும் உண்மை அர்த்தம் இதோ !

எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..

நீ சும்மா தான மா இருக்க.இது செஞ்சி குடுத்திடு மா

'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு.

வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க.
அனைவருக்கும் தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து வீட்டேன்.

இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் என்று பாப்போம்.

மாலை கணவரும், பசங்களும் வீட்டிற்கு திரும்பினார்கள்.

அம்மா பசிக்குது மா.எதாவது எடுத்துட்டு வா மா

எனக்கும் தலைவலிக்குது ஒரு காபி போட்டு தாடி", என்று சொல்லிக் கொண்டே உள்ள நுழைந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

வாசல் முழுவதும் குப்பையால் நிறைந்து இருக்கிறது.

வீட்டின் உள்ளே சென்றால் காலையில் செல்லும் பொழுது இரைத்த பொருட்கள் அனைத்தும் கீழே இருக்கின்றன.

காலையில் துடைத்த ஈரமான துண்டுகள் அனைத்தும் நாற்காலியில் இருக்கின்றன.

ஷுபாலிஷ் செய்யும் டப்பா திறந்தே இருக்கு.
தலைக்கு தடவும் ஜெல்லும் ஓபன் பன்னி இருக்கு.

பசங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.அவர்கள் புத்தகங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.

விளையாட்டு பொருட்கள் இரைந்து கிடக்கின்றன.
சீருடைகள் தேய்க்காமல் அப்படி ியே போடப்பட்ட இடத்தில் இருக்கின்றன.

இவ எங்க தா் போனான்னு சமையல் அறைக்குள் சென்று பார்த்தால், பாத்திரங்கள் கழுவாமல் அப்படியே இருக்கிறது

'எங்க தான் போனாலோ.. உடம்பு சரி இல்லையோ?

ரூமிற்கு சென்றால், இரவு உபயோகபடுத்திய தலையணை,போர்வை எல்லாம் மடித்து வைக்காமல் இரைந்து கிடக்கின்றன.

'சரி பாத்ரூமில் இருப்பாள் கதவு தட்டி பாக்கலாம்'னு திறந்தா, காலையில் போட்ட சோப் டப்பா முழுவதும் தண்ணீரில் முழுகிக் கரைந்து போய் தரை முழுவதும் கொழ கொழனு ஆகிடுச்சு.

அழுக்கு துணிகள் அசிங்கமாய் தொங்கி கொண்டு இருந்தன.

ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் மாடியில் உள்ள அறைக்குள் சென்றார்கள்.

கையில் ஒரு நாவல் புத்தகம் ஒன்றுடன், நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்தாள்.

"என்னடி ஆச்சு உனக்கு ? வீடு என் இப்படி இருக்கு? அம்மா என்ன ஆச்சு மா உனக்கு?

"நீங்க எல்லோரும் தான் சொல்லிட்டு போனீங்க, 'வீட்ல சும்மா தான இருக்க'ன்னு.

அதான் சும்மா இருக்கலாம்னு!!
கணவனுக்கு தன் தவறு உணர்ந்தது.
இந்த வார்த்தையை சொல்வது தவறு.

அவ எதுவும் செய்யவில்லை என்றால் வீடு வீடாகவே இருக்காது.

"என்னை மன்னித்து விடு" என்று கூறினார்.

பிள்ளைகளும் தம் தவறை உணர்ந்து "அம்மா மன்னிச்சிடு மா.இனி அப்படி சொல்ல மாட்டோம். நீ இல்லைனா வீடு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகிட்டோம்."

நான் சொல்வதால் தான் என் பசங்களும் இந்த வார்த்தையை அவ கிட்ட சொல்லி கஷ்டபடுத்தறாங்கனு அவருக்கு புரிந்தது.

இனி எப்பொழுதும் தன் மனைவியை பிள்ளைகளிடமோ, வெளி ஆட்களிடமூம் தாழ்த்தி பேசமாட்டேன் என்று மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தார்.

நீ இங்கயே இரு நா போய் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன் கணவர் கிளம்பினார்.

பசங்களும் "நாங்க உனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரோம் மா நீங்க வெயிட் பண்ணுங்க மா".

யாரும் எதுவும் செய்ய வேண்டாம். எல்லோரும் போய் டிவி பாருங்க. நான் பத்து நிமிடத்தில் உங்களுக்கு கேசரி செய்து தரேன் சாப்பிடுங்க" என்றாள்.

யாரும் எதுவும் செய்ய வேண்டாம். எல்லோரும் போய் டிவி பாருங்க. நான் பத்து நிமிடத்தில் உங்களுக்கு கேசரி செய்து தரேன் சாப்பிடுங்க" என்றாள்.

மனதில் சந்தோஷத்துடன் சமையல் அறைக்கு சென்றாள். இது தான்_அம்மாவின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌குணம்.!

அம்மா என்ற ஆணிவேர் இல்லாமல் குடும்பம் என்ற ஆலமரம் தழைக்காது. விழுதுகள் வேரூன்றும் வரை கண்ணுக்குத் தெரியாத அந்த வேரின் பங்களிப்பில்தான் மரம் வாழும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top