Varum mun kaapom.... Home made

Advertisement

malar02

Well-Known Member
Nanum 6months varai thanni kodukala...yeppovachum than koduthen....
Useful tips
நோ பிராப்லெம் தாய் பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமெனும் அவசியமில்லையென்றுதான் சொல்லுவார்கள், அதிகம் தேவைப்படாது .உணவு குடுக்க ஆரம்பித்தால் தண்ணிரை கண்டிப்பாய் சிறிது புகட்ட வேண்டும்
 

Joher

Well-Known Member
From Web............
உடலில் தேங்கியுள்ள சளியை நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு விரட்ட எளிய வழி!



நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதனை உப்புடன் சேர்த்து பயன்படுத்தும் போது, உடலினுள் உள்ள தொற்றுக்களை சரிசெய்து மற்றும் தொண்டை புண்ணை போக்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, தினமும் 4 முறை குடித்து வர சளி உருகி, தொண்டையில் கபம் தேங்குவது குறையும்.

அடிக்கடி தூதுவளை கீரையை துவையல் செய்து மதிய நேரத்தில் சாப்பிட்டு வர சளியினால் ஏற்படும் தொந்தரவு தீரும்.

சளியினால் ஏற்படும் இருமலை போக்க அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். அரை டம்ளர் ஆனவுடன் இறக்கி வடிகட்டி சூடாக பருகவும். இவ்வாறு குடிப்பதால் இருமல் நிற்பதோடு சளி தொல்லையும் குறையும்.

இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இஞ்சி உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான சளியை வெளியேற்றும். முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து சாப்பிட்டு வர சளி விரைவில் வெளியேறும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top