உன் கண்ணில் என்னை கண்டேன் epi 7

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
7
காலை 9 மணி ஸ்கூல் பெல் சத்தம் கேட்டது அனைத்து பிள்ளைகளும் தத்தமது வகுப்பறைக்கு விரைகின்றனர். 12A வகுப்பில் அனைவரும் ஜாலியாக பேப்பர் தூக்கி போட்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். ஆனால் நம் சித்தார்த் மட்டும் டேபிளில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தான்.
வர்ணா அப்போது தான் வகுப்பறைக்குள் வேகமாக நுழைகிறாள். தனியாக பெஞ்சில் தலை சாய்த்து உறங்கிக்கொண்டு இருக்கும் சித்தார்த்தை பார்த்து சிரித்துவிட்டு அவனுக்கு பின் இருக்கும் கேர்ள்ஸ் பெஞ்ச்சில் அமர்கிறாள்.
சிறிது நேரத்தில் அவர்களின் வகுப்பாசிரியர், பிரவீன் வகுப்பில் நுழைகிறார். சார் பார்க்கக்கூடாது என்பதற்காக தன் புத்தகம் ஒன்றை எடுத்து சித்தார்த் முகத்தை மறைகிறாள். பிரவீனும் அதை கவனிக்காமல் மாணவர்களிடம் பேசத்தொடங்குகிறார்.
பிரவீன், “பப்ளிக் எக்ஸாம் வரப்போகுது, எல்லோரும் ஒழுங்கா படிங்க. இன்னையில் இருந்து ரிவிஸன் ஸ்டார்ட் பண்ணலாம். எல்லோரும் மேத்ஸ் புக் எடுத்து முதல் சாப்டர் ஓபன் பண்ணுங்க.” என கூறிவிட்டு போர்டில் ப்ரோபிளத்தை சால்வ் பண்ண தொடங்குகிறார். இவ்வளவு சத்தத்திலும் நம் சித்தார்த் தூங்கிக்கொண்டு தான் இருக்கிறான். எழுதி முடித்துவிட்டு திரும்பும் போது சித்தார்த் இன்னும் முகத்தை மறைத்தவாறே இருப்பதை பார்த்துவிட்டு “சித்தார்த்” என்று சத்தமாக அழைக்கிறார். அந்த சத்தத்தில் பதறியடித்து எழுந்த சித்தார்த், தன் பின்னால் இருந்த வர்ணாவின் புறம் மெதுவாக சரிந்து, “என்ன கேட்டார்” என கேட்கிறான்.
ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு வர்ணா, “சார் போர்ட கிளீன் பண்ண சொன்னார்.” என கூறுகிறாள்.
சித்தார்த்தை எழுப்பிவிட்ட பிரவீன் திரும்பவும் கிளாஸ் எடுக்க ஆரம்பித்து விட்டார். வர்ணா கூறியதை கேட்ட சித்தார்த் வேகமாக சென்று போர்டை அழிக்க ஆரம்பித்தான். கிளாஸ் எடுத்துக்கொண்டே திரும்பி பார்த்த பிரவீன், சித்தார்த் போர்ட் அழிப்பதை பார்த்து “சித்தார்த்” என்று திரும்பவும் கத்த ஆரம்பித்தார்.
பிரவீன், “உன்ன யார் இப்போ போர்ட அழிக்க சொன்னது. கிளாஸ் கவனிக்க சொல்ல தான் கூப்பிட்டேன். போர்ட் அழிக்க இல்லை. எதையும் கவனிக்கறதில்ல. போ போய் கிளாஸ் முடியற வரை வெளியவே நில்லு.” என்று கத்திவிட்டு திரும்பவும் எழுத ஆரம்பித்தார்.
சித்தார்த் வர்ணாவை முறைத்துகொண்டே கிளாசில் இருந்து வெளியில் சென்று நிற்கிறான். வர்ணா ஒன்றும் தெரியாதது போல் கிளாஸ் கவனிக்கிறாள்.
ஒரு வழியாக வகுப்பை முடித்த ப்ரவீனும், “ஓகே ஸ்டுடென்ஸ் பிரஸ்ட் சாப்டர் ஓவர்
எல்லாரும் நாளைக்கு வரும்போது கொடுத்திருக்க ப்ராப்லம்ஸ முடிச்சுட்டு வாங்க.” என கூறிவிட்டு கிளம்பி வெளியில் வருகிறார். வெளியில் வந்து சித்தார்த்தை பார்த்த பிரவீன், “இனிமேலாவது கிளாசை ஒழுங்கா கவனி.” என்று கூறி கிளம்பிவிட்டார்.
சித்தார்த் மிகவும் கோவத்தோடு உள்ளே நுழைகிறான். இவன் வருவதை பார்த்த வர்ணா பெஞ்சை சுத்தி வந்து எடுத்தாள் ஓட்டம். நின்ற இடத்தில் இருந்தே சித்தார்த், “வர்ணா, நாம பெட் வெக்கலாமா?” என கத்துகிறான். உடனே நின்ற வர்ணா, “என்ன கேம்?” என்ற கேட்கிறாள். யார் பலமானவங்கனு பார்க்கலாம் வா” என்று அழைக்கிறான். உடனே அனைவரும் எல்லா பென்சையும் நகர்த்திவிட்டு ஒரு டெஸ்க்கை மட்டும் நடுவில் போடுகிறார்கள். இவர்கள் இருவரும் இரு புறமும் நின்று தன் வலது கையை வைத்து பலத்தை சோதிக்கிறார்கள். மற்ற அனைத்து மாணவர்களும் ஜட்ஜ் ஆகிறார்கள். இருவரும் தன் முழு பலத்தை கொண்டு விளையாடுகிறார்கள். (So sad) சிறிது நேரத்தில் சித்தார்த் ஜெயிக்கிறான்.
வர்ணா, “ஓகே நான் என்ன செய்யணும்?” என்று விறைப்பாக கேட்கிறாள்.
சித்தார்த், “வெயிட் பண்ணு நாளைக்கு யோசித்து சொல்றேன்.” என்று தெனாவட்டாக கூறிவிட்டு கிளம்பி செல்கிறான்.
Screenshot_20201017-125200_01.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top