Promo 1 - இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends

Will come with the first epi tomorrow.

புள்ளி வைத்து அழகாக கம்பி கோலம் இழுத்து, அதற்கும் பொருத்தமாக வண்ணமிட்டு நிமிர்ந்தவள், தான் வரைந்த கோலத்தை ஒரு நிமிடம் நின்று ரசித்துவிட்டுதான் உள்ளே சென்றாள். சின்ன வேலையாக இருந்தாலும், அதை ரசித்து செய்வதே அவளது குணம்.
சற்று முன் குளித்துவிட்டு தலையில் சுற்றி இருந்த துண்டை அவள் எடுக்க... அதற்குள் அடங்கியிருந்த அவள் கூந்தள், அவள் இடையை தாண்டியும் வழிந்தது.

ஈரம் போக நன்றாக துடைத்து விட்டு வாரி பின்னலிட்ட கருங்கூந்தளில், முன்தினம் தொடுத்து வைத்திருந்த மல்லிகையை சரமாக சூடிக்கொண்டு ஒருமுறை கண்ணாடியில் தன்னை சரி பார்த்தவள், பாக்கு நிற ஆரணி பட்டில் அழகாக இருந்தாள்.

வெள்ளி அர்ச்சனைக் கூடையில் முன்தினமே எடுத்து வைத்திருந்த பூஜைக்கு உரிய பொருட்களை ஒருமுறை சரி பார்த்துவிட்டு எடுத்துக் கொண்டவள், “நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்.” என பொதுவாக குரல் கொடுத்துவிட்டு, தன்னிடமிருந்த சாவியால் வீட்டை பூட்டிக் கொண்டும் சென்று விட்டாள்.
பூஜை அறையில் உட்கார்ந்து சாமி ஸ்லோகங்களை படித்துக் கொண்டிருந்த ஜோதியின் காதிலும் விழுந்தது.
“ஏன் இங்க வந்து சொல்லிட்டு போனா இவ தேஞ்சு போயிடுவாளா..” என நினைத்தாலும், எல்லாம் தன் மகன் கொடுக்கும் இடம்.” என நினைத்தவர், கையில் வைத்திருந்த புத்தகத்தில் ஆழ்ந்தார்.
அதுதான் ஆதிரையின் குணம். தனக்கு தோன்றியதை செய்வாள். சொல்லிவிட்டு செய்வதெல்லாம் அவளுக்கு வராது. அது மாமியாராக இருந்தாலும்.

***************************************************************************************************************
காலையிலலேயே இப்படி புடவையில அம்சமா இருந்தா... நான் வெளிய வேலைக்கு கிளம்பி போறதா இல்லையா என்றவன், அவளை தன் பக்கம் திருப்பி, அவளின் நாணி சிவந்த முகத்தை ரசித்துக் கொண்டு இருந்தான்.
“புடவை கட்டிறது எனக்கு என்ன புதுசா... தினமும் தான் கட்டுறேன்.”
“ஆனா நைட் நைட்டி தான போட்டுகிற?”
“என்ன டிரஸ் போட்டிருந்தாலும், நீங்க...” என்றவள், கண்ணில் மையலை தேக்கி கணவனைப் பார்க்க, “நீங்க...” என அவன் எடுத்துக் கொடுக்க... அவனின் வசீகரமான பார்வையிலும் புன்னகையிலும் மயங்கியவள், அவனின் காதில் ரகசியம் பேச...
“ஏன் டி இப்ப நியாபகப்படுத்துற. எனக்கு இப்ப முக்கியமான வேலை இருக்கு, நான் வெளிய போகணும்.” என்றான்.

********************************************************************************************************************

“இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும். நாளைக்கு பார்ப்போமே.”
“என்னவோ புதுசா கல்யாணம் ஆனவன் மாதிரி வீட்டுக்கு ஓடுற.”
மனைவியின் நினைவில் வெற்றியின் முகம் கனிய, அதை கவனித்த விக்ரம் “வேணா ஆதிரையையும் ஆபீஸ்க்கு கூட்டிட்டு வந்திட வேண்டியது தான...” என்றான்.
“அவ இங்க வந்தா, நாம ரெண்டு பேரும் வெளியப் போக வேண்டியது தான்.”
“என்ன வீட்டைப் போல மில்லையும் அவ கண்ட்ரோலுக்கு கொண்டு வந்திடுவா, அப்படித்தானே...”
****************************************************************************************************************

“அம்மா நாம வெளியப் போறோமா?”
“இல்லையே...”
“நம்ம வீட்டுக்கு யாராவது வர்றாங்களா?”
“இல்லையே... ஏன் டா இப்படி கேள்வியா கேட்கிற?”
“இல்லை நைட் நீங்க நைட்டி தானே போடுவீங்க. இன்னைக்கு ஏன் சேலை கட்டி இருக்கீங்க?”
“இதெல்லாம் நல்லா விபாரமா கேளு... எனக்கு தோனுச்சு கட்டினேன். ஹோம்வொர்க் எழுதிட்டியா நீ? முதல்ல அதை முடி.” என மகனை அதிட்டினாலும், இதெல்லாம் கூட கவனிக்கிறானே என மனதிற்குள் வியந்தாள்.
வீட்டிற்கு வந்த வெற்றியை பார்த்ததும், அவனது மகன் , “அப்பா வந்திட்டாங்க.” என ஓடி வர... மகனை தூக்கியவனின் கண்கள் மனைவியை ஆசையுடன் வருடியது.
எனக்குத் தெரியும் நீ சீக்கிரம் வருவேன்னு என ஆதிரை விழியால் பேச...
நீ மட்டும் என்னவாம் என அவள் கட்டி இருந்த புடவையை சுட்டுக்காட்டும் வகையில், வெற்றியும் அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்து வைத்தான்.
 

Joher

Well-Known Member
:love::love::love:

ரொமான்ஸ் ல ஆரம்பித்து சண்டையில் முடியப்போகுதா???

தனக்கு தோன்றியதை செய்வாள். சொல்லிவிட்டு செய்வதெல்லாம் அவளுக்கு வராது. அது மாமியாராக இருந்தாலும்.......
என்ன வீட்டைப் போல மில்லையும் அவ கண்ட்ரோலுக்கு கொண்டு வந்திடுவா, அப்படித்தானே.....
எல்லாமே ஆதிரை control......
So மாமியார் தான் புள்ளையார் சுழி போடுவாங்க போல பிரச்சனைக்கு.......

“அம்மா நாம வெளியப் போறோமா?”
“இல்லையே...”
“நம்ம வீட்டுக்கு யாராவது வர்றாங்களா?”
“இல்லையே... ஏன் டா இப்படி கேள்வியா கேட்கிற?”
“இல்லை நைட் நீங்க நைட்டி தானே போடுவீங்க. இன்னைக்கு ஏன் சேலை கட்டி இருக்கீங்க?”
பேர் தான் சின்ன புள்ளைங்கன்னு....... observation எல்லார் மாமியார் தோத்துடுவாங்க :p:p:p

Waiting for the Epi Ramya...........
 
Last edited:

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ் :)

எல்லாம் வரிசையா பாப்பா பாடமா வச்சிட்டு இருக்கீங்க :love::love: பாப்பாங்க படிக்கிற கதையா இதெல்லாம் :p;)
 

banumathi jayaraman

Well-Known Member
"பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னை
காதல் வலையில் அடைத்தவளே
அரும்பு மீசை துள்ளி வர அழகு
புன்னகை அள்ளி வர
குறும்பு பார்வை பார்த்தவரே என்னை கூட்டுக் கிளியாய் அடைத்தவரே.........."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top