என் கதை 9

Advertisement

சரண்யா

Writers Team
Tamil Novel Writer
'இன்னைக்கு அம்மாவுக்கு சமையல்ல உதவுலாமா சரி இன்ஸ்டாகிராம் போய் நாலு போஸ்ட் போட்டுட்டு அப்புறம் போய் உதவி செய்வோம். ' என நினைத்தவள் அலைபேசியில் மூழ்கிப் போனாள். தமிழ் என்ற வார்த்தை திரையில் ஒளிரவும் எடுத்து பேசியவள் "எதுக்கு கூப்பிட்டீங்க"
"சும்மா தான் கூப்பிட்டேன். என்ன பண்ணிட்டு இருக்க"
"இன்ஸ்டா பார்த்துட்டு இருக்கேன்"
"என்ன பேரு இன்ஸ்டால? Request kodukren Accept Pannu. " என்றான்
"பூங்குழலி தான் இன்ஸ்டாலயும்" என அவள் சொல்ல
"சரி அக்செப்ட் பண்ணு" என்றான்.
"நான் எதுக்கு அக்செப்ட் பண்ணணும். அங்கயும் வந்து என்னை கிண்டல் பண்ணவா? என் ப்ரண்ட்ஸ் க்கு மட்டும் தான் தெரியும் என்னோட ஐடி. உங்களோட ரிக்வஸ்ட் அக்செப்ட் பண்ண மாட்டேன்"
"நான் கிண்டல் பண்ண மாட்டேன்."
"இதை நம்பணுமா. என்னால முடியாது"

"சரி ட்விட்டர்ல இருக்கியா"
"ஆமாம்"
"உன் அக்கவுண்ட் பேரு என்ன"
"Poongulali_speaks"
"Sari request tharen. Accept pannu"
"ம் சரி"
"உனக்கு பிடிச்சது பிடிக்காதது பத்தி சொல்லேன் கேப்போம்"
"எதுக்கு கேட்கறீங்க"
"சும்மா தெரிஞ்சிக்க தான்"
"எனக்கு விஜய்,சிம்ரன்,ஐஸ்கிரீம்,பாட்டு கேட்கிறது, ஃபோட்டோகிராபி, bird watching,trekking இப்படி நிறைய பிடிக்கும். உங்களுக்கு?"
"எனக்கு பிடிக்காததுனு எதுவும் இல்லை"
"ஓஹோ சரி நான் அப்புறம். பேசுறேன். எனக்கு வேலை இருக்கு"
"எனக்கும் தான் வேலை இருக்கு.நேரம் ஒதுக்கி உன்கிட்ட பேசல?! சரி அப்படி என்ன வேலை உனக்கு?"
"நான் சமையல்ல அம்மாவுக்கு உதவ போறேன்"
"உனக்கு முதல்ல சமைக்க தெரியுமா? சமைக்க கத்துக்க போறேன்னு சொல்லு.. நீ உங்கம்மாவுக்கு உதவி செய்ய போறேன்னு சொல்லாத . எனக்கே சிரிப்பு வருது"
"அதெல்லாம் எனக்கு தெரியும். நீங்க உங்க வேலைய பாருங்க" என்றபடி தொலைபேசியை அணைத்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top