அல்வா பேமஸ் திருநெல்வேலி

Advertisement

Itsmeappu

Member
அங்க வீடுகளின் அமைப்பு பிரமிப்பாக இருக்கும்.. அகல வாக்கு வீடுகளை விட, நீள வாக்கில் தான் வீடு இருக்கும்..

1.வெளித்திண்ணை( ஆண்கள் அமர்ந்து பேசுமிடம்)
2. உள்திண்ணை
3. நடை
3.ரேழி
4.நாலாவாசல்
5.குச்சில்( store room)
6.சின்னத்தாவாரம்
7.அடுப்பங்கரை
8. பட்டாசாலை
9. கொட்டில்(மாடு இருக்குமிடம்)
10.கொல்லை
11.மச்சில்.

அந்த காலத்துல மின்சார வசதியில்லாததால், கண்ணாடி பதிச்சிருப்பாங்க சில அறையில், அது வழியா சூரிய வெளிச்சம் வரும். குச்சில் கிட்ட /ரேழியின் மேல் சுவற்றில் ஒரு துவாரமிருக்கும் அது வழியா மச்சில்ல உள்ள குதிர்லிருந்து சேர்த்து வச்சிருக்க அரசி, தேவையானது எடுத்துப்பாங்க..

மச்சில்லயும், உள் மச்சில், வெளி மச்சில்ன்னு ரெண்டு இடமுண்டு.. வெளி மச்சில்ல வெட்ட வெளியாக இருக்கும், உள் மச்சில்ல ஒரு ரூம் மாதிரியே இருக்கும்...
ஏணில மச்சிலுக்கு ஏறுவது தனி சுகமே..
 
ThangaMalar

Well-Known Member
எனக்கு பிடிச்ச எங்க ஊரு நெல்லை தமிழில் சில
அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
ஆச்சி - வயதான பெண்மணி
கொண்டி - தாழ்ப்பாள்
பைய - மெதுவாக
சாரம் - லுங்கி
கோட்டி - மனநிலை சரியில்லாதவர்
வளவு - முடுக்கு,சந்து
வேசடை - தொந்தரவு
சிறை - தொந்தரவு
சேக்காளி - நண்பன்
தொரவா - சாவி
மச்சி - மாடி
கொடை - திருவிழா
கசம் - ஆழமான பகுதி
ஆக்கங்கெட்டது - not constructive (a bad omen)
துஷ்டி - எழவு (funeral)
சவுட்டு - குறைந்த
கிடா - பெரிய ஆடு (male)
செத்த நேரம் - கொஞ்ச நேரம்
குறுக்க சாய்த்தல் - படுத்தல்
பூடம் - பலி பீடம்
அந்தானி - அப்பொழுது
வாரியல் - துடைப்பம்
கூவை - ஆந்தை an owl (bird of bad omen)
இடும்பு - திமிறு (arrogance)
சீக்கு - நோய்
சீனி - சர்க்கரை (Sugar)
ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம்
நொம்பலம் - வலி
கொட்டாரம் - அரண்மனை
திட்டு - மேடு
சிரிப்பாணி - சிரிப்பு
பாட்டம் - குத்தகை
பொறத்தால - பின்னாலே
மாப்பு - மன்னிப்பு
ராத்தல் - அரை கிலோ
சோலி – வேலை
சங்கு – கழுத்து (சங்க அறுதுருவேன்)
செவி – காது
மண்டை – தலை
செவிடு – கன்னம்
சாவி – மணியில்லாத நெல்,பதர்
மூடு – மரத்து அடி
குறுக்கு – முதுகு
வெக்க - சூடு, அனல் காற்று
வேக்காடு - வியர்வை
ஏச்சு- திட்டு
சீனி- சக்கரை
மதினி - அண்ணி
மண்டையிடி - தலை வலி
கூறு கெட்டவன் - அறிவில்லாதவன்
சீமை - வெளிநாடு
பட்டணம் - சென்னை

வரேன், தரேன் அப்படிங்கறத
வாரேன், தாரேன் ன்னு ஒரு ராகமா சொல்லுவாங்க, பாருங்க..
அவ்வளவு அழகா இருக்கும்..
 
Last edited:

அழகா சொல்லிட்டீங்க
திருநேலி போகற ஆசைய தூண்டிட்டீங்க..
 
Sasideera

Enakum inga pesara tamil romba pidikum... Super ah soli irukanga...
 
Manimegalai

Well-Known Member
அங்க வீடுகளின் அமைப்பு பிரமிப்பாக இருக்கும்.. அகல வாக்கு வீடுகளை விட, நீள வாக்கில் தான் வீடு இருக்கும்..

1.வெளித்திண்ணை( ஆண்கள் அமர்ந்து பேசுமிடம்)
2. உள்திண்ணை
3. நடை
3.ரேழி
4.நாலாவாசல்
5.குச்சில்( store room)
6.சின்னத்தாவாரம்
7.அடுப்பங்கரை
8. பட்டாசாலை
9. கொட்டில்(மாடு இருக்குமிடம்)
10.கொல்லை
11.மச்சில்.

அந்த காலத்துல மின்சார வசதியில்லாததால், கண்ணாடி பதிச்சிருப்பாங்க சில அறையில், அது வழியா சூரிய வெளிச்சம் வரும். குச்சில் கிட்ட /ரேழியின் மேல் சுவற்றில் ஒரு துவாரமிருக்கும் அது வழியா மச்சில்ல உள்ள குதிர்லிருந்து சேர்த்து வச்சிருக்க அரசி, தேவையானது எடுத்துப்பாங்க..

மச்சில்லயும், உள் மச்சில், வெளி மச்சில்ன்னு ரெண்டு இடமுண்டு.. வெளி மச்சில்ல வெட்ட வெளியாக இருக்கும், உள் மச்சில்ல ஒரு ரூம் மாதிரியே இருக்கும்...
ஏணில மச்சிலுக்கு ஏறுவது தனி சுகமே..
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க:love:
நிறைய வார்த்தைகள் புதுசா கத்துக்கிட்டேன்.
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நெல்லை.... இதுவரைக்கும் போனதில்ல... ஆனா போகனும்னு ரொம்ப நாளா ஆசை இருக்கு....:love::love::love::love::love::love:

திருநெல்வேலின்னு சொன்னா பொதுவா எல்லாருக்கும் அல்வா நியாபகத்திற்கு வரும்.... ஆனா எனக்கு முதல்ல நியாபகம் வரது நெல்லை தமிழ்:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:... அல்வாவ விட அந்த தமிழ் அவ்ளோ பிடிக்கும். :love::love:

அந்த லே... போட்டு பேசும் போது கேட்கவே அவ்ளோ நல்லா இருக்கும்...

அடுத்தது நெல்லையப்பர் கோவில்... அதோட வரலாறு படிச்ச யாராலும் கட்டாயம் தரிசிக்காம இருக்க முடியாது...

சாயங்கால நேரமா... சாமிய தரிசிச்சிட்டு அப்படியே அல்வாவ வாங்கிட்டு வந்து அந்த பிரஹாரத்துல உட்கார்ந்து சாப்பிட்டு பாருங்க... அந்த feel........ வேற.... அப்படின்னு அனுபவிச்ச ஒருத்தர் சொல்லிருக்காரு... சீக்கிரம் வந்து பார்த்து feel பண்ணனும்:love::love::love::love::love:
 
Saroja

Well-Known Member
அருமையான நெல்லையப்பர் காந்திமதி அம்மன்
கூடவே கருவறை பக்கத்தில் பள்ளி கொண்ட பெருமாள்
ஹரியும் சிவனும் ஒன்று என்று தத்துவத்தை
விளக்க
சங்கீத ஸ்வரங்கள் கேட்கும் சங்கீததூண்கள்
பல வருடங்களாக பார்க்க முடியாமல்
போன வருசம் பார்த்து பரவசம் ஆனேன்
 
Lakshmimurugan

Well-Known Member
திருநெல்வேலி ஊருக்கு உள்ள சிறப்புக்கள் சொல்லிலடங்கா..அதுலையும் அந்த ஊர் தமிழ் அவ்வளவு அழகா இருக்கும்..

என்ன‌ ரொம்ப பிரமிக்க வச்சது பூ கணக்குக் தான். முளம் போட்டு பூ தர மாட்டாங்க, எண்ணிக்கையில தான், 100 பூ ன்னு கிடுகிடுன்னு எண்ணற அழகிருக்கே..அடடா..

குடிசை தொழில்ன்னு அங்க பீடி சுத்து வாங்க, எவ்வளவு பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிப்பாங்க..

எனக்கு பிடிச்ச எங்க ஊரு நெல்லை தமிழில் சில

அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
ஆச்சி - வயதான பெண்மணி
கொண்டி - தாழ்ப்பாள்
பைய - மெதுவாக
சாரம் - லுங்கி
கோட்டி - மனநிலை சரியில்லாதவர்
வளவு - முடுக்கு,சந்து
வேசடை - தொந்தரவு
சிறை - தொந்தரவு
சேக்காளி - நண்பன்
தொரவா - சாவி
மச்சி - மாடி
கொடை - திருவிழா
கசம் - ஆழமான பகுதி
ஆக்கங்கெட்டது - not constructive (a bad omen)
துஷ்டி - எழவு (funeral)
சவுட்டு - குறைந்த
கிடா - பெரிய ஆடு (male)
செத்த நேரம் - கொஞ்ச நேரம்
குறுக்க சாய்த்தல் - படுத்தல்
பூடம் - பலி பீடம்
அந்தானி - அப்பொழுது
வாரியல் - துடைப்பம்
கூவை - ஆந்தை an owl (bird of bad omen)
இடும்பு - திமிறு (arrogance)
சீக்கு - நோய்
சீனி - சர்க்கரை (Sugar)
ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம்
நொம்பலம் - வலி
கொட்டாரம் - அரண்மனை
திட்டு - மேடு
சிரிப்பாணி - சிரிப்பு
பாட்டம் - குத்தகை
பொறத்தால - பின்னாலே
மாப்பு - மன்னிப்பு
ராத்தல் - அரை கிலோ
சோலி – வேலை
சங்கு – கழுத்து (சங்க அறுதுருவேன்)
செவி – காது
மண்டை – தலை
செவிடு – கன்னம்
சாவி – மணியில்லாத நெல்,பதர்
மூடு – மரத்து அடி
குறுக்கு – முதுகு
வெக்க - சூடு, அனல் காற்று
வேக்காடு - வியர்வை
ஏச்சு- திட்டு
சீனி- சக்கரை
மதினி - அண்ணி
உள்ளி - வெங்காயம்
வத்தல் - வரமிளகாய்
மல்லி - தனியா
 
Sasikala srinivasan

Well-Known Member
திருநெல்வேலினா எனக்கு ஞாபகத்திற்கு வருவது நெல்லையப்பர் கோவில்
நான் குற்றாலம் போகும் போதெல்லாம் என் வீட்டுகார்கிட்ட கேட்பேன் ஆனால் இன்னும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை
 
pons

Active Member
மண்டையிடி - தலை வலி
கூறு கெட்டவன் - அறிவில்லாதவன்
சீமை - வெளிநாடு
பட்டணம் - சென்னை

வரேன், தரேன் அப்படிங்கறத
வாரேன், தாரேன் ன்னு ஒரு ராகமா சொல்லுவாங்க, பாருங்க..
அவ்வளவு அழகா இருக்கும்..
முக்கியமான...'ஏலே' விட்டுட்டீங்களே.
அன்பும் உரிமையும் தரும் சொல்...எங்கள் சிறப்பு...ஏம்லே விடு சோளியை பார்ப்போம் ...ஆறுதலுக்கு ஈடு என்ன....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top