இது யாரழுத கண்ணீர்??

Advertisement

Santhiya s

Active Member
ஈழ மண்ணில் வாழ்ந்த மூத்த கவிஞர்.. கவிஞர். இளந்தேவன் அவர்களின் கவிதையொன்று.. தமிழ் பேசும் மக்களின் பார்வைக்காக.. அவருடைய வரிகள் ரொம்ப ரத்தினச் சுருக்கம் தான்.. இருப்பினும் இலங்கையைப் பற்றி வர்ணித்திருக்குமாறு.. ஒரு வாசகியாக என்னை "வாவ்" போட வைக்குது..
இலங்கையின் வடிவத்தை ஓர் கண்ணீர்த்துளிக்கு ஒப்புவமையாக்கும் கவிஞர்.. அது யார் வடித்த கண்ணீர்ன்னு சொல்ற இடம் ஆஸம்னு தான் சொல்லத் தோணுது.. இருந்தாலும் கடைசி வரியில்.. ஈழத்தமிழர் வடித்த கண்ணீர்னு பூடக வார்த்தையால் சொல்லும் போது.. அதை உணரும் யார் மனதும் கனக்கும்.


*********************************************************************************
z7ibuwhy.png


கண்ணீர்த் துளி வடிவில்
கடல் நடுவே நிலம் மிதக்கும்.
என்ன இதன் பெயரென்றால்
"இலங்கை" எனச் சொல்லுகிறார்!
பாரழுத கண்ணீர்
பனிக்கடலாகக் கிடக்க, இது
யாரழுத கண்ணீர்?
அகிலம் நடுவே மிதக்கிறது!
இது, அந்தச் சீதை அழுததென
செப்பியது ராம கதை
தமிழென்னும் கோதை அழுததெனக்
கூறவில்லை பூமி இதை?
Yeah..it is very touching...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top