என் கதை 1

Advertisement

சரண்யா

Writers Team
Tamil Novel Writer
கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டவள் "இன்னைக்கு நாம ரொம்ப அழகா இருக்கோம்! நம்ம கண்ணே பட்டுடிம் போலயே"என திருஷ்டிக் கழித்துக்கொண்டாள் தமிழ்.

செயற்கை வண்ணப்பூச்சு உபயம் அவளின் கன்னங்கள் இரண்டும் ரோஜாப்பூவைப் போல சிவந்திருந்த. அவளையே இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்கள் வழக்கமான அளவை விட இன்று பெரிதாக்கப்பட்டிருந்தது கண்மையினால்.என்றைக்கும் சப்பையாக இருக்கும் மூக்கு இன்று கூர்மையாக செதுக்கப்பட்டிருந்தது.

உதட்டுச்சாயம் கரிய உதடுகளை சிவப்பாக்கிக் காட்டின. ஒடிசலான ஜடை போய் அந்த இடத்தில் அடர்த்தியான ஜடைப் பின்னப்பட்டிருந்தது.சவுரி இவ்வளவு எடை அதிகமா இருந்தாலும் மூடியின் அடர்த்தியை கூட்டிக் காட்டியதால் அதனையும் தொட்டு இரசித்துக்கொண்டாள்.

"போதும் உன்னை நீயே இரசிச்சது.கீழே கல்யாணம் நடக்குமிடம் போய் ஆஜராவோம்" என நினைத்தவள் அறையை விட்டு வெளிவந்தாள்.

படிகளில் இறங்கும் போது ஒட்டியாணத்தை சரிசெய்து கொண்டே வந்தவளைப் பார்த்து" ஏய் யானைக்குட்டி வருது! வழி விடுவீங்கடா" என அவள் வயதுள்ள ஒரு பையன் இவளுக்கு கேட்குமாறு கிண்டலடித்தான்.

அவனை திரும்பிப் பார்த்து முறைத்தவள் மணமேடைக்கு சென்று நின்றாள்."இன்னைக்கு ரொம்ப அழகாக இருக்கடி.ஏன் டி முகம் வாடித் தெரியற கொஞ்சம் சிரிடி. சிரிச்சா இன்னும் அழகா இருப்ப."என்ற தோழியிடம்

"நான் அழகா இருக்கேனா. "என அப்படியும் இப்படியும் திரும்பி பார்த்தவள்

"நீயும் தான் அழகா இருக்க"என்றாள்.

"கெட்டிமேளம்! கெட்டிமேளம்!"என்ற சத்தம் கேட்டதும் இருவரும் திருமண நிகழ்ச்சியில் கவனமானர்கள்.

திருமணம் முடிந்து பந்தி ஆரம்பமாகவும் அங்கே தனது தோழியுடன் சென்று அமர்ந்தவள் "ஐய்!ஜிலேபி!" என்று குதூகலித்தவள் நன்றாக உண்ண ஆரம்பித்தாள்.

அப்போது அங்கே வந்த தமிழரசு "சுதா! எப்படிம்மா இருக்க " என்று விசாரித்தவன் அருகேயிருந்த பூங்குழலியைப் பார்த்தவன்"ஏய் கத்திரிக்கா! எப்படி இருக்க."என்றது தான் மிச்சம்

உடனே இவள் "எதுக்கு என்ன கத்திரிக்காய்னு கூப்பிடுறீங்க.நான் ஒன்னும் கத்திரிக்காய் இல்ல.இனிமே அப்படி கூப்பிட்டா நான் பேச மாட்டேன்."என்றவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

"ஏன்மா சுதா 'கத்திரிக்காய் கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா ' பாட்டு கேட்டு இருக்கயா.எனக்கு அந்த பாட்டுல 'எந்த கடையில நீ அரிசி வாங்குன' ங்கிற வரி வந்தா ஒருத்தங்க ஞாபகம் வரும்."என தமிழ் பூங்குழலியின் பேச்சை சட்டை செய்யாமல் தொடர்ந்து கேலி பேசவும் பூங்குழலியின் கண்களில் குபுக்கென கண்ணீர் பெருக்கெடுத்தது.

பாதி சாப்பாட்டில் எழுந்தவள் விட்டாள்."உட்காருடி.பாதி சாப்பாட்டில் எழுந்திரிக்காத."என சுதா கூறக்கொண்டிருக்கும் போதே அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

"ஏன்அண்ணா அப்படி பேசுனீங்க.பாருங்க கோவிச்சுட்டு பாதிச்சாப்பாட்டில் எழுந்து போயிட்டா"என்ற சுதாவிடம்

"அவ கிடக்குறா. நீ சாப்பிடுமா. நான் அப்புறம் உன்கிட்ட வந்து பேசுறறேன் மா"என்று அவ்விடத்தை விட்டு அகன்றான். பூங்குழலி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகக்குள் வந்தவள் அழ ஆரம்பித்து விட்டாள்.

அந்நேரம் பார்த்து அவளது அம்மா அறைக்குள் நுழையவும் "அம்மா!"என கட்டிக்கொண்டு மேலும் அழுக ஆரம்பித்தாள்.
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "என்
கதை"-ங்கிற அழகான
அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சரண்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நாவல் ஆரம்பத்துலையே
ரொம்பவும் நல்லாயிருக்கு,
சரண்யா டியர்
ஆனால் ரொம்ப சிறிய
அப்டேட்டாக இருக்கேப்பா
ஹீரோயின் பெயர் பூங்குழலியா?
ஹீரோ தமிழரசுவாப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top