என் காதல் தீ 04-A

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

லாஸ்ட் எபி-ஐ படித்து ஆதரவளித்தவர்களுக்கு நன்றி... இதோ அடுத்த எபி. சின்ன பகுதி தான். இந்த பகுதியை மட்டும் இரண்டு எபியாக அளிக்க இருப்பதால் சிறியதாக அளித்திருக்கிறேன். படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்...


HelloGuruPremaKosame.jpg

நாட்கள் அதன் போக்கில் வேகமாக நகர, நிரல்யா கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தது. அன்று சனிக்கிழமையாக இருக்க, நிரல்யா ஷாப்பிங் செல்ல கிளம்பினாள். அவளுக்கென்று தனியாக ஒரு காரும் அதற்கு டிரைவரும் நியமித்திருந்தார் மாணிக்கம்.


நிரல்யா சென்ற மூன்று மணி நேரத்தில் கதிருக்கு டிரைவரிடமிருந்து போன் வந்தது. அதன்பின், கதிரும் விரைந்தான் அவ்விடத்தை நோக்கி.
முக்கால் மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த கதிர் நேராக டிரைவரிடம் விரைந்தான். “எங்க?” என்று கேட்டவன், டிரைவர் இடத்தை காட்டியதும், “நீங்க கிளம்புங்க. நான் கூட்டிவரேன்” என்றவன், அவரிடம் சிலநூறு தாள்களைத் திணித்து, “இத யாரிடமும் சொல்லக்கூடாது” என உத்திரவாதம் வாங்கிவிட்டே அனுப்பிவைத்தான்.



பின், தெரிந்தவர்கள் யாரும் அங்கு இல்லை என்பதனை உறுதிபடுத்திக்கொண்டு அவ்விடத்தின் உள்ளே சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை கோபப்படுத்தியது.

********


அந்த பிரபலமான மாலுக்கு சென்று ஷாப்பிங் முடித்துத் திரும்பியவளின் கண்களில் பட்டது ஒரு உயர்தரமான ஹோட்டல். அதன்முன் இருந்த ஹோர்டிங்கில் ஏதோ பார்த்தவள் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி உள்ளே சென்றுவிட்டாள். முதன்முறை சுவைத்தபின்பு வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தவளுக்கு இன்றுதான் மீண்டும் நாடத் தோன்றியது. தற்பொழுதைய சூழலிலிருந்து தப்பும் வழியாக தெரிந்தது அவளை அழைத்த அந்த பார் மற்றும் பப்.


நிரல்யா சென்று வெகு நேரமாகியும் வராததால் அவள் எங்கே என விசாரித்து என்ன செய்வதென்று தெரியாமல்தான் அவர் கதிரை அழைத்தது. விஷயம் அறிந்ததும் கதிர் விரைந்து வந்து அவரை அனுப்பி வைத்தான்.

********

உள்ளே நுழைந்த கதிர் கண்டது, பார் கவுண்டரின் முன் அமர்ந்து தன் முன் வைக்கப்பட்டிருந்த மர்கரிட்டாவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த நிரல்யாவை. அந்த விசாலமான அறையில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட கண்கள் அவளை மொய்த்ததனை அறியாமல் அமர்ந்திருந்தாள் அவள். இதனைக் கண்டவனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது.


“இங்க என்ன பண்ற? வா போகலாம்” என்று அழைத்தவனை கனல் கக்கும் விழிகளால் எரித்து ஒரே கல்ப்பாக குடித்து முடித்தாள்.


‘ஆத்தாடி… என்னடா இப்படி அடிக்குறா?’ என மிரண்டு போனான் கதிர். “என்னம்மா பிரச்சனை? எதுவா இருந்தாலும் இங்க வைத்து எதுவும் பேச வேணாம்… வீட்டிற்கு போகலாம் வாங்க” என்று குரலை தாழ்த்தி அழைத்தவனை பொருட்படுத்தாது, அருகில் நின்றிருந்த மிக்ஸாலஜிஸ்டிடம் இன்னொரு பெக்கிற்கு ஆர்டரிட்டாள்.


இதற்கும் மேல் அங்கிருப்பது சரிவராது என்று தோன்றிட, இத்தனை நாட்களில் சிறிதளவு நட்பு இருவருக்குள்ளும் ஏற்பட்டிருக்க, அந்த தைரியத்தில் நிரல்யாவின் மறுப்பை சட்டை செய்யாது அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான்.

**********


“விடு மேன்… என்னை ஏன் கூட்டிட்டு வந்தே? எங்கே கூட்டிட்டு போற?” என்று கதிரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் நிரல்யா.


அவளை கவனத்தில் கொள்ளாமல் காரோட்டியவனை தன்புறம் திருப்பும் பொருட்டு ஸ்டியரிங்கை வளைக்க ஆரம்பித்துவிட்டாள். உடனே கதிர் வாகனத்தை ஒடித்து திருப்பி ரோட்டோரத்தில் நிறுத்த வேண்டியதாயிற்று. நல்லவேளை! நகரத்தைத் தாண்டி ஊருக்கு அருகில் வந்து விட்டாயிற்று!
நிரல்யாவை என்ன செய்வதென்று அறியாமல் திருதிருத்துக்கொண்டிருந்தான் கதிர். குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் கணவனை வெண்சாமரம் வீசி வரவேற்கும்! (அடிங்க) பெண்களைப் பார்த்து வளர்ந்தவனுக்கு இது முற்றிலும் புதிது. இவ்வாறு போதை தெளியாமல் அழைத்துச் செல்வதும் பல பிரச்சனைகளை வரவழைக்கும். என்ன செய்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க, ‘நீ என்ன வேணா பண்ணு… நான் உன்னுடன் வரமாட்டேன்’ என்று நிரல்யா காரை விட்டு இறங்கி ஓடிவிட்டாள்.



கதிரிடம் இருந்து தப்பித்தவள் அருகில் செடிகளும் புதர்களும் மண்டியிருக்க, அதனுள் சென்று ஒளிந்துகொண்டாள். வெகு அருகிலேயே நீர் சலசலக்கும் ஓசை கேட்டவள் திரும்பியவுடன் கண்டது, இரு கரைகளையும் இணைத்து ஓடிக்கொண்டிருந்த ஆற்றினை. ஒருகரையில் பனை மரங்களும் அவள் இருந்த கரையில் செடிகளும், அதனை தாண்டி சாலையும் என காண்போரை சுண்டியிழுக்கும் வகையில் இருந்தது. செய்யுளுக்கு அணி அழகு! பசுமைக்கு மழை அழகு!! வெகு நேரம் சோவெனப் பெய்த மழை தற்போது தூரலாக மாறியிருக்க, அந்த இடமே பேரழகுடன் காட்சியளித்தது.


நீரினுள் விளையாட ஆசைவந்திட, கதிரைத் திரும்பி பார்த்தவள் அவன் இன்னும் யோசனையிலேயே இருக்க, எதையும் யோசிக்காமல் ஆற்றில் இறங்கிவிட்டாள்.


நீச்சல் குளத்தில் நீச்சல் பயின்றவளுக்கு இங்கு சிறிது நேரத்தில் நீரின் ஓட்டம் பிடிபட, ஆற்றின் குறுக்கே நடப்பதற்கு இருந்த பாதையின் வழியே தண்ணீர் கீழே விழ, அதன் அருகே செல்வதற்கு மெல்ல நீந்தினாள். அதுவே அவள் செய்த தவறாகிப்போனது!


கால் எதிலோ சிக்கிக்கொள்ள, அதனை இழுத்துப் பார்த்தவளுக்கு முடியவில்லை. முற்றிலும் போதை தெளியாதவளால் பழக்கமில்லாத இடத்தில் எதுவென்றே அறியாத, புலப்படாத ஒன்றினை எதிர்த்து போராட முடியவில்லை. தன் பலம் கொண்டமட்டும் போராடிப் பார்த்தவள் இறுதியாக அழைத்தே விட்டாள்! “கதிர்!!!”


பெண்ணவளின் உயிரைக் காக்க அவன் வருவானா?


தொடரும்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top