என் உறவென வந்தவனே 5

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii... Frds & siss... En uravena vandhavane 5 epi pottachu... Padithuvittu comments kodukka marakkadhinga....happy reading:):):):)

அத்தியாயம் - 5

தினமும்...
நம் இருவரும் பார்த்துக்கொண்டாலும்...
மெய்மறந்து பார்க்கும் அந்த ஒரு நிமிடம்...
என் உண்மையான காதலை உணர்கிறேன்...
உனக்கும் உணர்த்துகிறேன்...

ஹேமா படி ஏறி மேலே சென்றவள்... ஜானின் அறை வரவும் அப்படியே நின்று கீழே எட்டிப்பார்த்துவிட்டு மெதுவாக கதவை திறந்து உள்ளே சென்றாள்... "ம்ம்ம்... மாமா ரூம் நல்லாத்தான் வச்சிருக்கார்..." என்று நினைத்துக்கொண்டே சுற்றி பார்த்தவள்... டேபிளின் மேல் இருந்த ஜானின் போட்டோவை எடுத்து பார்த்துவிட்டு கீழே வைக்கப்போனவள்... அங்கே இருந்த டைரியில் ஒரு பெண்ணின் புகைப்படம் பாதி தெரிந்தும் தெரியாமலும் இருக்க... அதை எடுக்கப் போனவளை "ஹேமா... இன்னும் என்னபன்ற... எங்க இருக்குன்னு தெரியலனா... விடுமா நான் எடுத்து தரேன்... நீ வந்து காஃபி குடிடா..." என்று சகுந்தலா சொல்லவும்... உடனே ஜானின் ரூமைவிட்டு வெளியே வந்தவள் "அத்த... நீங்களே வந்து எடுத்துக்கொடுங்க... எனக்கு தெரியல..." என்று சொல்லிக்கொண்டே கீழே வந்துவிட்டாள்... ( எங்கே அவர் மேலே வந்துவிடுவாரோ... என்று)

மாலை நேரம் சாய துவங்கிய வேலையில் கண் விழித்த தனுவிற்கு ஒன்றும் புரியவில்லை... மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்தவள் ஜன்னலின் அருகில் நின்று தோட்டத்தைப்பார்க்க... அங்கே காலை நடந்த நிகழ்வை நினைத்தவள்... சிரித்துக்கொண்டாள்... "அவ்ளோ லவ்வா... என்மேல.. ம்ம்ம்... நானும் முடிவு பன்னிடேண்டா... இனிமே எனக்கு எல்லாமே நீதான்னு... நான்கூட நினைச்சிருக்கேன் பார்த்த செகண்ட்ல எப்படிடா லவ் வரும்னு... இப்போ புரிஞ்சிடுச்சி..." என்று எப்பவும்போல் மனதில் நினைத்துக்கொண்டு அழகாக சிரித்துக்கொண்டாள்...

இதுவரை நடந்ததை பார்த்துக்கொண்டுருந்த பானு "என்னடா இவ... எழுந்தா.. ஜன்னல்கிட்டப்போனா... சிரிக்கவேற செய்யறா... ம்ம்ம்... யாரங்க இருக்கா..." என்று அவளும் அங்கே சென்று எட்டிப்பார்க்க... "யாரும் இல்லை... தனு.. அங்க யாருடி இருக்கா.. இப்படி சிரிச்சிகிட்டு நிக்கற..." என்று பானு கேட்க... தனது சிரிப்பை நிறுத்தியவள் "அங்க பாரு.. ஒரு குட்டிப்பாப்பா... என்னப்பார்த்து எவ்ளோ அழகா சிரிக்கிறா..." என்று தனு சொல்ல... "ம்ம்ம்.. என் கண்ணுக்கு யாரும் தெரியலையேடி..." என்று பார்க்க சொல்ல... "ம்ம்ம்.. பொய்சொல்லாதடி... பாய்டா குட்டி.." என்று தோட்டத்தை பார்த்து சொன்ன தனு... திரும்பி சிரித்துக்கொண்டே படுக்கையில் சென்று அமர்ந்தாள்... பானு அங்கேயே நின்று அவளை திரும்பி பார்க்க.. தனு சிரிப்பதை கண்டவள்... "உன்ன... ச்சப்போடி.. நானே கொஞ்ச நேரத்துல.. பேயோன்னு பயந்துட்டேன்..." என்று தனுவின் முதுகில் ஒரு அடி வைத்தாள்...

"என்ன தனு விஷயம்... உன் முகத்துல இப்படி ஒரு சந்தோஷத்த இப்பதான் பார்க்கறேன்..." என்று பானு கேட்க... "அதெல்லாம் ஒன்னும் இல்லை..." என்று தனு ஏதோ சொல்லி சமாளிக்க... "ம்ம்ம்... சொல்ல விருப்பம் இல்லனா சொல்லவேண்டாம்... உனக்கு எப்பதோனுதோ அப்ப சொல்லு... ஆனா... ஒன்னு சில விஷயங்கல அப்போவே மனசுவிட்டு சொல்லிடனும்... இல்ல அது பின்னாடி பெரிய பிரச்சனைய கொண்டு வந்து விட்ரும்.. சொல்லிட்டேன்..." என்று பானு நீளமாகப் பேச... "ம்ம்ம்... சரி கல்யாணப்பொண்ணு... இப்போ நீங்க கீழவந்து மருதாணி போட்டுப்பிங்களாம்... நாளைக்கு காலையில கல்யாணம்..." என்று இரண்டு கைகளிலும் மருதாணிக்கோனை தூக்கி ஆட்டிக்கொண்டே கேட்டாள் தனு... பின் இருவரும் கீழே இறங்கி சென்றனர்....

ஹேமாவுக்கு ஒரே டென்ஷனாக இருந்தாள் "ச்ச.. அந்த போட்டோவ பார்க்கம வந்தது தப்பாப்போச்சு... ஒரு வேல மாமா... யாரையாவது லவ் பன்றாரோ... ம்ம்ம்.. எப்படி இருந்தாலும்... நான் தான் உங்க வைப்..." என்று தனக்குத்தானே.. சமாதானம் செய்து கொண்டாலும்... உள்ளுக்குள் அந்த போட்டோவை நினைத்து பயம் இருந்துகொண்டிருந்து...

கீழே இறங்கிய தனு இவ்வளவு கூட்டத்தைக்கண்டு மலைத்துப்போனாள்... "என்னடி இங்க.. நடக்குது..." என்று பானுவிடம் கேட்க... "எல்லாம் உறவுக்காரங்கதான்டி..." என்று சொல்லிவிட்டு நடக்க... "அப்போ எனக்கும் இப்படிதான் நடக்குமா... இல்ல.. இல்ல... அவர் பேர் ஜான்.. அப்போ கிறிஸ்டின் முறைப்படிதான் நடக்கும்..." என்று முகம் சிவந்தவள்... சுற்றி அவனைத்தேட... கிடைக்கவில்லை.. "ச்ச.. எங்க பேனாற்னு தெரியலையே... மத்த நேரத்துலாம் பின்னாடியே சுத்துவார்..." என்று அவனை மனதில் திட்டிக்கொண்டே... பானுவிற்கு மருதாணிப்போட அமர்ந்தாள்...

ஜான்.. எதர்ச்சையாக அங்கே வர... வந்தவன் நேராக தனுவைதான் பார்த்தான்... "ம்ம்ம்.. இன்னைக்கு என்ன.. இவ்ளோ பளிச்சுனு இருக்காளே..." என்று அவளையே பார்த்துக்கொண்டே நிற்க... ஏதோ ஒரு உணர்வில் நிமிர்ந்துபார்த்தாள் தனு... இருவரும் பார்த்துக்கொண்டே இருக்க... முதலில் சுயநினைவிற்கு வந்த ஜான் அதிர்ச்சியாகிவிட்டான்...
"என்னடா.. இது நம்ம தனுதானா.. இப்படி பார்த்துவைக்கறா நம்மள..." என்று நினைத்தவன்... அவளைப்பார்த்து கண்ணடிக்க... அப்போதுதான் நினைவுவந்தவளாக... அவனை பார்த்து முறைக்க... "அய்யோ... மலையேறிட்டா... எஸ்கேப்டா ஜான்..." என்று தனது அறைக்கு சென்றான்... ( ஓடினான்)...

அவனின் செய்கையை கண்டவள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்...
பானுவிற்கு மருதாணி வைத்து முடித்தவள்.. அங்கே சுற்றி அமர்ந்திருந்த குழந்தைகளும் மருதாணி வைக்கவேண்டும் என்று கேட்க... வைத்துவிட்டாள் தனு.. அப்போது பெரயவர் ஒருவர் வந்து "எல்லாரும் சாப்பிட்டுத்தூங்குங்க... காலையில சீக்கிரம் எழுந்துக்கனும்..." என்று சொல்ல அனைவரும் கலைந்து சென்றனர்...

பானு முதலில் சாப்பிட்டுவிட்டு மேலே சென்றாள்.. பிறகு ரவியும் ஜானும் அமர... அவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்த ரவியின் அம்மா... "தனு நீயும் வந்து சாப்டுப்போய் படுமா.." என்று அவர் சொல்ல... சமயலறையில் இருந்து வெளியே வந்தவள் ஜானின் எதிர் இருக்கையில் வந்து அமர... எதுவும் பேசாமல் சாப்பிட... "எல்லாருக்கும் மருதாணி வச்சா.. இவ கைல வச்சுக்கலயா..." என்று முக்கியமான திங்க்கிங்கில் இருந்த ஜானை பார்த்த ரவி ஏதோ கேட்க போக பின்.. "வேண்டாம்... அப்புறம் நமக்கே ரிவென்ஞ் கொடுப்பான்..." என்று வாயை மூடிக்கொண்டான்... அனைவரும் சாப்பிட்டு தூங்கச்செல்ல... "ரவியண்ணா குட்நைட்.." என்று தனு சொல்ல... "குட்நைட்மா..." என்று அவனும் சொல்லிவிட்டு செல்ல... "உங்.. உங்களுக்கும் குட்நைட்..." என்று ஜானிற்க்கும் சொல்ல.. மீண்டும் அதிர்ச்சியானவன்... "குட்நைட்.." என்று சொன்னான்...

ஜான் அவள் பின்னாடியே சென்றவன் அவள் அறை வந்ததும் "ஒரு நிமிஷம்.. தனு.." என்று அவன் சொல்ல திரும்பிப்பார்த்தவள்... "ம்ம்ம்.. சொல்லுங்க..." என்று சொல்ல.. "அது.. நீ ஏன் மருதாணி வச்சிக்கல.." என்று கேட்க... இதென்ன கேள்வி.. என்று மனதில் நினைத்தாலும் "அது.. லேட்டாயிடுச்சு... கொஞ்சம் கைவலி அதான்.." என்று அவள் சொல்ல... "சரி... இனிமே யாருக்கும் நீ வச்சிவிடக்கூடாது... உனக்கு வேணும்னா... நானே உனக்கு வச்சிவிடறேன்,.. புரிஞ்சுதா..." என்று அவன் முகம் இறுக சொல்லிவிட்டு "பின்ன இத்தனபேருக்கு.. வச்சிவிட்டா வலிக்காத.." என்று புலம்பிக்கொண்டே சென்றவனை இப்போதே அவனை கட்டிக்கொண்டு தனது காதலை சொல்லிவிடலாம்... போல தோன்றியது தனுவிற்கு...

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட ரவியின் அம்மாவிற்கு சந்தோஷமாக இருந்தது.. தனுவிற்கு மருதாணி வைத்துவிட வந்தவர்... ஜானின் பின்னாடியேப்போக "இவன் எதுக்கு இவ பின்னாடி போறான்..." என்று நினைத்தவருக்கு அவனின் பேச்சில் இப்பெண்ணிற்கு நல்ல வாழ்கை அமைந்துவிடும்... என்று நினைத்தார்...

- தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top