மண்ணில் தோன்றிய வைரம் 44

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
இளைஞர் யுவதிகள் பட்டாளம் மணமக்களை கலாட்ட செய்தவாறு இருக்க மணமக்கள் இருவரும் இரு வேறு மனநிலையில் இருந்தனர்....
சாரு அஸ்வினை தனியாக சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க முயல அஸ்வினோ அதை சமார்த்தியமாக தடுத்தான்... மணமக்கள் இருவரையும் உணவிற்கு அழைக்க ஷெண்பா சாருவிடம் அஸ்வினிற்கு வாஸ்பேசின் இருக்கும் இடத்தை காட்டச்சொல்ல அவனோ கழிவறைக்கு செல்லவேண்டுமென கூறி ரதனிடம் கேட்டுக்கொண்டே அவனுடன் அவ்விடம் விட்டு நழுவினான்... அப்போது அவனிற்கு துவாய் எடுத்துக்கொடுக்க சாரு அறைக்குள் வர சாருவின் கண்ணசைப்பில் வெளியேற முயன்ற ரதனை வெளியேற விடாது கதையளந்து கொண்டிருந்தான் அஸ்வின்...... அவன் தன்னை வேண்டுமென்றே தவிர்க்கிறான் என்று தெரிந்தும் கூட அவளால் சண்டையிட முடியவில்லை..... தவறு அனைத்தும் அவள் மேல் இருக்கையில் அவன் இவ்வளவு தூரம் பொறுமையாய் இருப்பதே பெரிய விடயம்..... இதில் அவளை அவன் தவிர்க்கிறான் என்பதற்காக அவனிடம் சண்டையிட துணிந்தால் அவளிற்கு தர்ம அடி நிச்சயம்...
“ஏன் சாரு நீ எவ்வளவு பெரிய பிஸ்தா நீ இதுக்கெல்லாம் பயப்படலாம???? உன்னோட அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப சகஜமாச்சே..” என்று சாருவின் மைன்ட் வாய்ஸ் ஆரம்பிக்க அவளது மனசாட்சியோ
“பிஸ்தா முந்திரினு நீ தான் மெச்சிக்கனும்.... போர் யோர் கைன்ட் இன்பர்மேஷன் அது அரசியல் வாழ்க்கை.......
இது குடும்ப வாழ்க்கை.... ஊருக்கு எப்படியும் டிமிக்கி காட்டலாம்......ஆனா ரௌடிபேபி கிட்டமட்டும் உன்னால வாலாட்ட முடியாது..... இவ்வளவு நாள் நீ பண்ண அடி முட்டாள் வேளைக்கு வேறு யாராவதா இருந்தா நீ சிங்கப்பூர் போனவுடன் உன் பின்னாலே வந்து நாலு சாத்து சாத்திட்டு நீயும் வேணாம் உன் சங்காத்தமும் வேணாம்னு உன்னை தலை முழுகி இருப்பாங்க.....அஸ்வினா இருக்கப்போக உனக்கு பாவம் பார்த்து இது வரைக்கும் உன்னை ஒன்றும் செய்யாம இருக்கான்.. அதுனால எதுவும் இனி சகஜம் இல்லைனு புரிந்துக்கோ” என்று அடக்கியது.....
இவ்வாறு சாருவின் நிலையிருக்க அங்கிருந்த வானரக்கூட்டம் அவர்கள் இருவரையும் தொடர்ந்து வம்பளந்து கொண்டே இருந்தது..... மதிய உணவிற்கு பின் மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப சாருவிற்கு அஸ்வினோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிட்டாமலே போய்விட்டது..... அவர்கள் கிளம்பும் நேரம் சாரு சஞ்சுவிடம் அஸ்வினோடு தனித்து பேச ஏதாவது வழி செய்யுமாறு
போனில் மெசேஜ் செய்ய அவன் ஷெண்பா காதில் ஏதோ கூற அவரோ
“அம்மாடி சாரு மாப்பிள்ளை ஏதோ உன்கிட்ட கேட்டாருனு சொன்ன???? அது என்னோட ரூமில் தான் இருக்கு... மாப்பிள்ளையை அழைச்சிட்டு போய் அதை எடுத்துக்குடு” என்று கூற அதை அஸ்வின் மறுக்கும் முன் சாரு
“சரி சித்தி.... வாங்க அஸ்வின்” என்றுவிட்டு முன்னே நடக்க அங்கு அனைவரும் கூடியிருந்தபடியால் ஏதும் கூறாது அவளை பின் தொடர்ந்தான் அஸ்வின்....
அஸ்வினை அவளது அறைக்கு அழைத்து சென்றவள் அவன் ரூமிற்குள் நுழைந்ததும் கதவை மூடிவிட்டு அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்..... அவளது வதனம் அவனது மார்பில் பதிந்திருக்க கைகள் அவனது இடையை அரணிட்டிருந்தது.... ஆனால் அஸ்வினோ எந்த வித உணர்வினையும் வெளிக்காட்டாது கைகளை வெறுமனே வைத்துக்கொண்டு தன்னை எதுவும் பாதிக்கவில்லை என்ற ரீதியில் நின்று கொண்டிருந்தான்.....
“சாரிடா ரௌடி பேபி நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்..... உன்கிட்ட சொல்லாம சிங்கப்பூர் போனது தப்பு தான்... ஆனா என் ஒருத்திக்காக நீ கஷ்டப்படுவதை என்னால் பார்த்திட்டு இருக்க முடியலை..... நீ உங்க அப்பாவை எனக்காக எதிர்ப்பதை நான் விரும்பவில்லை.... உனக்கும் உன்னோட அப்பாவிற்கும் இடையில் ஏற்கனவே கருத்து வேறுபாடு நிறைய இருப்பதாக சித்ரா அம்மா சொல்லி இருக்காங்க.....அப்படி இருக்கும் போது என்னால் நீ உங்க அப்பாவை பகைத்துக்கொள்வது எனக்குள்ளே ஒரு குற்றவுணர்ச்சியை உண்டு பண்ணியது..... கிருஷ்ணன் அப்பாவிற்கு மறுபடியும் நெஞ்சுவலி வர காரணம் நீ உங்க அப்பா சொன்ன பெண்ணை திருமணம் செய்ய மறுத்தது. அதற்கு காரணம் நான் உன்னை நேசித்தது......இப்படி என்னோட காதலுக்காக நீயும் என்னோட குடும்பமும் கஷ்டப்படுவதை என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை.... உன்கிட்ட சொன்னா நீ இதை ஒத்துக்கமாட்ட....... அதுனால தான் நான் உன்கிட்ட சொல்லாம சிங்கப்பூர் போனேன்...... போன பின்பும் உன்னை காண்டக்ட் பண்ணலை.... எங்க உன்னை காண்டக்ட் பண்ணா நீ சிங்கப்பூர் வந்திருவியோனு பயம்...... அப்படி வந்தா நான் உன்கிட்ட எல்லாம் சொல்லியிருப்பேன்...........
எனக்காக மறுபடியும் நீ உன் அப்பாவை எதிர்க்க அதனால கிருஷ்ணன் அப்பாவுக்கு ஏதும் ஆகிருமோனு பயந்தேன்....... என்னால எந்த விபரீதமும் வேணாம்னு தான் சொல்லாம வந்தேன்..... ஆனா இப்போ உன்கிட்ட இதை சொல்லியிருக்கலாமோனு தோணுது..... என்னோட மாமனார் நிச்சயதார்த்தத்திற்கு வந்திருக்காருனா நீ அவரை கன்வின்ஸ் படுத்திட்டனு புரியிது..... நீயாவது உன் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கனும்னு தான் நான் உன்னை விட்டு பிரிய நினைத்தேனே தவிர உன்னை வெறுத்தோ வேணாம்னோ பிரிய நினைக்கவில்லை........ நான் இழந்தவற்றை மீட்டு கொடுத்த என் பேபியிற்கு எந்த இழப்பும் நேரக்கூடாதுனு தான் நான் பிரிவை தேர்ந்தெடுத்தேன்.... ஆனால் அந்த முடிவை நான் என் மனதை கொன்றுவிட்டு தான் எடுத்தேன்....... அதை நினைத்து அழாத நாட்களே இல்லை.. சிங்கப்பூரில் இருக்கும் போது என் பேபியோட நியாபகம் என்னை அணுவணுவாக ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கும்.... அந்த நேரத்தில் என்னுடைய பேபியோட வாய்ஸ்சும் போட்டோசும் நியாபகங்களும் தான் எனக்கு துணையா இருந்தது.... அவை மட்டும் இல்லைனா எனக்கு என்னைக்கோ பைத்தியம் பிடித்திருக்கும்...... இது எல்லாம் உனக்காக மட்டும் தான்....... என்னோட ரௌடிபேபி எப்பவும் சந்தோஷமா இருக்கனும்.... அதுக்காக எதுவும் செய்ய நான் தயார்... எதையும் இழக்கவும் நான் தயார்.. அது என்னோட வாழ்க்கையோ என்னோட உயிரோ எனக்கு கவலையில்லை நீ நல்லா இருக்கனும்” என்று சாரு கூற அவ்வளவு நேரம் ஒரு இறுக்கத்தோடு இருந்த அஸ்வின் சாருவை அவளது எலும்புகள் நொருங்கும் அளவிற்கு இறுக்கி அணைத்தான்.. பெண்ணவளின் கண்ணீர் தகித்துக்கொண்டிருந்த கோபத்தை சற்று குறைத்தாலும் அவள் மீதிருந்த வருத்தம் அஸ்வினிற்கு குறையவில்லை....... அவள் தனக்காகவே அவன் உட்பட அனைத்தையும் இழக்க துணிந்தது தெரிந்தாலும் ஏனோ அவள் பிரிவு அவன் மீது அவளுக்கிருந்த நம்பிக்கையின்மையால் தான் நிகழ்ந்ததாக எண்ணினான்...... தன் காதலை இன்னும் அவள் சரியாக புரிந்து கொள்ளாமையே அவள் பிரிவு எனும் தவறான முடிவை எடுத்ததாக கண்டுகொண்டான்......
அதனால் தன் காதலை அவள் உணர வேண்டுமெனின் தன் மௌனம் தான் சரியான ஆயுதம் என்று முடிவெடுத்து அதை பிரயோகிக்க முடிவெடுத்தான்...
இறுக்கி அணைத்திருந்த சாருவை தன்னிடம் இருந்து விலக்கியவன் ஏதும் கூறாது அங்கிருந்து சென்றான்.....
அவனது அணைப்பில் நெகிழ்ந்திருந்தவள் திடீரென அவன் விலகிச் செல்லவும் அவனது மனநிலை என்னவென்று அறியமுடியாது குழம்பி நின்றாள். அப்போது அங்கு வந்த கவி, சித்ரா மற்றும் சில உறவினர்கள் அவளிடம் கூறிவிட்டு விடைப்பெற்றனர்....
அவர்கள் விடைபெற்று சென்றதும் சஞ்சு அங்கு வர அவளது முகத்தை வைத்தே அங்கு நடந்திருக்க கூடியதையும் அவளது மனநிலையையும் யூகித்து
“சாரு எது நடக்கனும்னு இருந்ததோ அது நடந்து முடிந்துவிட்டது... இனி அதை நினைத்து வருதப்படுவதில் எந்த யூசும் இல்லை...... இனி நடக்கப்போற நிகழ்வுகளில் சரி நம்மோட பங்களிப்பு சரியானதா இருக்கனும்.... அது நம்ம நடந்துக்கிறதுல தான் இருக்கு.... அஸ்வினிக்கு உன் மேல கோபம் இருக்க தான் செய்யும்... ஏன்னா நீ செய்த வேலை அப்படிபட்டது.... அஸ்வின் இவ்வளவு தூரம் அமைதியா இருப்பதே பெரிது..... எந்த ஆண்மகனும் தன்னோட காதலியோ மனைவியோ தன்னோட காதலை நம்பனும்னு தான் விரும்புவான்...... ஆனா உன்னோட செயல் அவனுக்கு மனவருத்தத்தை கொடுத்திருக்கும்.... அதை நீ உன்னோட காதலால் தான் நீக்கனும்..... அதுனால சின்ன விஷயத்திற்கு எல்லாம் சிணுங்கிட்டு கவலைபட்டுட்டு இருக்காம அவனது எப்படி கன்வின்ஸ் பண்ணலாம்னு யோசி... .. நான் சொன்னது உனக்கு புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.... ஓகே பாய்.....நான் இப்போ கிளம்புறேன்” என்றுவிட்டு சஞ்சுவும் விடைபெற சாரு சஞ்சு கூறியவற்றை யோசிக்கத்தொடங்கினாள்.....
 
மிக மிக அருமை
 
Gomathianand

Well-Known Member
Udane samathaanam agura maathiri thappa saaru panni irukka ...aswin oda viewla irunthu paartha avanai nambi irunthaal avan ellaraiyum convince panni iruppane...
Sollamal vittutu pona ellam sari agiduma...
Saaru aswinkaga seithu irunthalum avan kobam kuraiya avanidam aval kollum kathalal thaan mudiyum....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top