மண்ணில் தோன்றிய வைரம் 41

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அன்று மதியம் அஸ்வின் சாருவை பார்க்க வந்திருந்தான்.......
அப்போதுதான் தூங்கப்போவதாக கண்மூடிய சாரு அவன் வந்தது தெரிந்ததும் தூங்குவது போல் பாசாங்கு செய்தாள்.... அவன் வந்ததும் அவனை சாருவின் துணைக்கு அமர்த்திவிட்டு ஷெண்பா காண்டீன் சென்றார்...
அவள் மருந்தின் வீரியத்தில் உறங்குவதாக நினைத்து அவள் கையை பிடித்து அவளிடம் பேசத்தொடங்கினான் அஸ்வின்...
“ஏன் ஜிலேபி..உன்னை நீயே வருத்திக்கிற???? அப்படி என்ன கஷ்டம் உனக்கு....????
எது உன்னோட மனதை இப்படி கஷ்டப்படுத்துகிறது???
உன்னோட ரௌடிபேபிகிட்ட சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன கஷ்டம்????
உன் ரௌடிபேபி எப்பவும் உனக்காக இருப்பேன்....
நீ சுயநினைவே இல்லாமல் ஜுர வேகத்தில் அனத்திட்டு இருந்ததை பார்த்தப்போ நான் செத்து பிழைச்சிட்டேன்.....
ஜுரம் வருகிற அளவுக்கு நீ ஏன் அழுத??? உன்னை யாரு அப்படி கஷ்டப்படுத்தினா???? ரெண்டு நாளா நீ சுயநினைவு இல்லாம படுத்திருந்தாலும் திடீர் திடீர்னு ஏதோ சொன்ன....
அப்புறம் பேபி என்னை மன்னிச்சிருனு புலம்புன...........
என்னா நடந்திச்சினு தெரியாம நான் திண்டாடிப்போயிட்டேன்.......
எந்த கஷ்டமா இருந்தாலும் அதை நமக்குள்ளே போட்டு புழுங்குவதால எந்த நன்மையும் இல்லை.....
சம்பந்தப்பட்டவங்களோட பேசி அதுக்குரிய முடிவை எடுக்கனும்....
அதை விட்டுட்டு உனக்குள்ளே அதை வைத்துக்கொண்டால் அது உன்னை தான் பலவீனமாக்கும்.... இது ஏன் உனக்கு புரியமாட்டேன்குது ஜிலேபி??????
நீ கஷ்டப்படுறது உனக்கு மட்டும் இல்லை எனக்கும் வலிக்குது......
இந்த இரண்டு நாளா நான் பட்ட அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும்...........
நீ ஏன் ஜிலேபி உன்னோட கஷ்டத்தை என்கிட்ட பகிர்ந்துக்காம இருக்க???? சந்தோஷத்தை பகிர்ந்துக்கொள்வதற்கு மட்டுமா நம்ம உறவு?????
அப்போ உன்னோட கவலையை துக்கத்தை எல்லாம் என்னோட பகிர்ந்துக்க மாட்டியா??? அதற்கான சுதந்திரத்தை உனக்கு நான் கொடுக்கலையா????
அவ்வளவு தரம்கெட்டவனாகவா நான் உன்கிட்ட நடந்துகிட்டேன்??????
இது தான் நான் உன்னை காதலித்த விதமா???? இதுக்கு பேர் காதல் தானா?? என்னை உயிருக்குயிராய் விரும்பிய உன்னை பற்றி கவலைப்படாமல் நீ சந்தோஷமாக இருக்கிறனு நினைச்சது என்னோட தப்பு தான்.....ஆனா இந்த தப்பு இனிமேல் நடக்காது.... உனக்கு நான் இப்போ பிராமிஸ் பண்ணித்தாரேன்... இனிமே உன் மனதை பாதிக்கின்ற மாதிரி எந்த பிரச்சனையும் உன்னை நெருங்க விடமாட்டேன். அது எதுவாக இருந்தாலும்....... நீ எந்த பிரச்சினைக்கு பயந்தும் என்னை விட்டு விலகனும்னு நினைக்கக்கூடாது...... பிரிவு எதற்கும் தீர்வு இல்லை..... அப்படியே நீ என்னை பிரிய நினைச்சா இந்ந அஸ்வினோட இன்னொரு பக்கத்தை நீ பார்ப்ப......” என்றுவிட்டு அவள் தலையை தடவிக்கொடுத்தான் அஸ்வின்... அப்போது சித்ரா வர அவரிடம் சொல்லிக்கொண்டு அஸ்வின் கிளம்பி விட்டான்.......
அவன் சென்றதும் சாருவிற்கு அஸ்வின் கூறிய ஒவ்வொன்றும் அவளது இதயத்தை வருடிச்சென்றது..... தன்மீது அவன் கொண்ட காதலின் ஆழம் அவளிற்கு அவனது பேச்சில் இருந்து தெரிந்தது....... அவன் எக்காலத்திலும் தன்னை அவனிடம் இருந்து பிரிய விடமாட்டான் என்று புரிந்தது......அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அதை எதிர்க்கவும் துணியமாட்டான்.... ஆனால் அந்த சந்தர்ப்பம் அவனது குடும்பம் மூலம் உருவாக்கப்பட்டால் அவன் தனது குடும்பத்தையும் எதிர்ப்பான்....அவ்வாறு எதிர்க்கும் பட்சத்தில் அவனை அவனது குடும்பத்தில் இருந்து பிரித்த பாவியாகி விடுவேன்...... நான் அவனை விரும்பக் காரணமே அவனது குடும்பம் தான்.... அப்படி இருக்கும் பட்சத்தில் எனது சுயநலக்காதலுக்காக அந்த அன்பான கூட்டில் இருந்து எனது அஸ்வினை பிரிக்க நினைப்பது உசிதம் தானா?????
இல்லை அப்படி நடக்க ஒரு போதும் விட மாட்டேன்..... இந்த சிக்கலுக்கு என்ன முடிவு எடுப்பதென்று எனக்கு தெரியவில்லை.... ஆனால் இந்த சிக்கல் அஸ்வினுடைய வாழ்க்கையை பாதிக்க விடமாட்டேன்....அவன் தன் குடும்பத்தவரின் மகிழ்ச்சிப்படி இருக்கட்டும்.....
இங்கு அவன் கண் முன்னாடி இருப்பது தான் அவனை தொல்லை செய்கிறது.... சில காலத்திற்கு அவனுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தால் அவன் என் மீது கொண்ட காதலை மறக்கச்செய்ய முடியும்.... அந்த இடைவெளியில் அவனது குடும்பத்தினர் அவனை பேசி சரிகட்டி விடுவர்...என்று முடிவெடுத்த சாரு உடனடியாக சஞ்சுவை அழைத்தாள்..........
“சஞ்சு உனக்கு பதிலா இந்த டைம் நான் சிங்கப்பூர் போறேன்.... அதுக்கு வேண்டிய ஏற்பாட்டை பண்ணு.....”
“என்ன சொல்லுற சாரு...??? இப்போ உன்னால எப்படி அங்க போக முடியும்??? இப்போ தான் நீ கொஞ்ச கொஞ்சமா ரெக்கவர் ஆகிட்டு வர்ற.... அதோட இப்போ அங்க போனா குறைந்தது சிக்ஸ் மன்த்ஸ் அங்க இருக்கனும்..... உனக்கு அது சரிப்படாது சாரு.... நீ இதை அஸ்வின் கிட்ட சொல்லிட்டியா???”
“இங்க நான் சார்மன்னா அவர் சார்மன்னா???? நான் எது செய்தாலும் அவர்கிட்ட கேட்டுட்டு தான் செய்யனுமா??? இது என்னோட கம்பனி..... அதோட இது பிசினஸ் ரிலேடட் ட்ரிப்.... அதுக்கு நான் அவர்கிட்ட பர்மிஷன் வாங்கனும்னு எந்த அவசியமும் இல்லை..... நான் இன்னும் ஒன்வீக்கில் புல்லா ரிக்கவர் ஆகிருவேன்.. சோ நான் சிங்கப்பூர் போறதுக்கான் அரேன்ஜ்மன்சை நீ பண்ணு...”
“இல்லை சாரு.....”
“நோ மோர் குவெஸ்ஷன்ஸ் சஞ்சய்...” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள் சாரு......
சஞ்சுவை சமாளிக்க முடிந்த சாருவால் அஸ்வினை சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை..... பார்வையாலே அவளை கண்டுகொள்ளும் அவனை சமாளிப்பது முடியாத காரியம்... ஆனால் அவனை சமாளிக்காவிட்டால் தான் நினைத்தது நடவாது..... அந்த ஒரு வாரத்தில் சாரு ஷெண்பாவின் கவனிப்பால் நன்றாக தேறிவிட்டாள்.... இடையில் அவளை பார்க்க வந்த அஸ்வினோடு அவள் முகம் கொடுத்து கூட பேசவில்லை..... அவனும் அதை பெரிது படுத்தாது அவளை நலம் விசாரித்துவிட்டு சென்றுவிட்டான்..... சித்ராவும் கவியும் சாருவை பார்க்க வந்தனர்... அஸ்வினிடம் முகம் திருப்பிய சாருவால் அவர்களிடம் அதே போல் நடந்துகொள்ளமுடியவில்லை..... அஸ்வினை மட்டுமே தன் வாழ்வில் இருந்து விலக்க வேண்டுமென நினைத்தாளே தவிர மற்ற அனைவரும் அவள் குடும்பத்தினராகவே எண்ணினாள்.....
சித்ராவிடம் கிருஷ்ணர் பற்றி விசாரிக்க அவர் இப்போது நலமாக இருப்பதாகவும் அவரிற்கு அதீத அதிர்ச்சி தரக்கூடிய எந்த விடயத்தையும் அவரிடம் தெரியப்படுத்த வேண்டாம் என்று டாக்டர் அறிவுறுத்தியதாகவும் சித்ரா கூறினார்.... சித்ரா கூறியதை கேட்ட சாரு தன் முடிவு சரி தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்...
அதன் பின் நாட்கள் பறக்க சாரு சிங்கப்பூரிற்கு பறந்தாள்....
பிளைட்டில் ஏறி அமர்ந்த சாருவிற்கு சஞ்சு பேசியவை அனைத்தும் மனதில் ஓடியது.....
“இப்போ நீ சிங்கப்பூர் டிரிப் போவதற்கு என்ன அவசியம் நான் போவதாக தானே இரண்டு பேரும் முடிவு பண்ணி இருந்தோம்.... இப்போ எதுக்கு திடீர்னு பிளானை மாத்தின???
யாருக்கு பயந்து இப்போ நீ சிங்கப்பூரிற்கு ஓடுற???? அஸ்வினுக்கு பயந்தா இல்ல உன் மனசாட்சிக்கு பயந்தா??” என்ற சஞ்சுவின் கேள்வியில் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சாரு...
“என்ன அப்படி பார்க்குற???? எனக்கு உன்னை பற்றியும் தெரியும். இந்த காதல் மனுஷனை படுத்திற பாட்டையும் தெரியும்.... இப்போ எதுக்கு சிங்கப்பூர் போறதுல பிடிவாதமாக இருக்க??
முதல்ல கேட்டப்போ முடியாதுனு சொன்ன நீ இப்போ போறேனு பிடிவாதம் பிடிக்கிறேனா அதுக்கு காரணம் நிச்சயம் அஸ்வினா மட்டும் தான் இருக்கும்......ஆனா அஸ்வின் கிட்ட மறைமுகமா விசாரிச்சப்போ அவர் அப்படி ஒன்றும் சொல்லலை... சோ பிரச்சனை உன் சைடில் தான்..... நீ சிங்கப்பூர் போறதுக்கு முடிவெடுத்த காரணத்தை நீ எனக்கு சொல்லியே ஆகனும்.... ஏதும் சொல்லி மழுப்பலாம்னு நினைக்காத.......என்னைப்பற்றி உனக்கு நல்லாவே தெரியும்..... நான் கோபம் வந்தா அஸ்வின் மாதிரி உன்னை கொஞ்சிட்டு இருக்க மாட்டேன்...சொல்லிட்டேன்...”
“இல்ல சஞ்சு அப்படிலாம் ஒன்றும் இல்லை கொஞ்ச நாளைக்கு எங்கேயாவது இடம்மாறி இருக்கலாம்னு தோணுச்சி...அதான் இந்த டிரீப்பை யூஸ் பண்ணிக்கலாம்னு நினைத்தேன்”
“சாரு உனக்கு முதலிலேயே சொல்லிட்டேன். என்னை பொய் சொல்லி சமாளிக்க நினைக்காத... சொல்லு எந்த விஷயம் உன்னை டிஸ்டப் பண்ணுது.....???” என்று சஞ்சய் கேட்க இதற்கு மேல் அவனிடம் மறைக்கமுடியாது என்று எண்ணி தான் சிங்கப்பூர் செல்ல முடிவெடுத்ததற்கான காரணத்தை கூறினாள்....
அதை முழுவதும் கேட்ட சஞ்சு அவளை தாறுமாறாக திட்ட தொடங்கினான்...
“சாரு நீ எப்போ இவளோ முட்டாள் ஆன??? உன்னை பற்றி நான் எவ்வளவு உயர்வா நினைத்திருந்தேன்....நீ ரொம்ப போல்ட் கேரெக்டர்.... எந்த சிட்டுவேஷனையும் ரொம்ப ஸ்மார்ட்டா ஹாண்டில் பண்ணுவ....... நீ எப்பவும் எதுக்காகவும் வொரி பண்ணாம எல்லாத்தையும் இறங்கி செய்வனு நினைச்சிருந்தேன்..... ஆனா நீ இப்படி கேனத்தனமா யோசிப்பனு நான் கனவுல கூட யோசிக்கலை.....நீ இதை அஸ்வின் கிட்ட சொன்னியா???”
“இல்லை..சொல்ல எனக்கு தைரியம் இல்லை.....”
“சொல்லிறாத.... பயபுள்ள உன்னை துரத்தி துரத்தி அடிப்பான்...... உனக்கு அஸ்வினை பற்றி எவ்வளவு தூரத்திற்கு தெரியும்னு எனக்கு தெரியாது..... அவன் ஏதாவது டிசைட் பண்ணிட்டான அவனை கன்வின்ஸ் பண்ணுறது ரொம்ப கஷ்டம்.... அவனுக்கு எப்பவும் தன்னோட முடிவு சரியா தான் இருக்கும்னு கான்பிடன் அதிகம்.... அதே மாதிரி அவனோட டிசிஷன்ஸ் கரெக்ட்டா தான் நான் பார்த்தவரையில் இருந்திருக்கு..... சோ அவ்வளவு சீக்கிரம் உன்னை ஓடி ஒழிய விடமாட்டான்.... அதே மாதிரி உன்னை எப்படி சரி பண்ணுறதுனு அவனுக்கு தெரியும்.... அதனால உன்னோட இந்த டிசிஷனை ரீகன்சிடர் பண்ணுறது உனக்கு நல்லது.... இல்லைனா உன் பக்கம் தான் அடி பலமா இருக்கும்...பிறகு நீ ஒரு வார்த்தை சொல்லலைனு என்கிட்ட சொல்லக்கூடாது..... அதோடு என்னால அஸ்வின்கிட்ட அடி வாங்க முடியாது சொல்லிட்டேன்......”
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பேசிட்டு இருக்க..... நான் சிங்கப்பூர் போகத்தான் போறேன்.... நான் நினைத்தபடி அஸ்வின் அவங்க வீட்டினர் விருப்பப்படி கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கட்டும்... அது தான் எனக்கு சந்தோஷம்.....”
“எனக்கு என்னமோ உன்னோட எண்ணம் உல்டா ஆகப்போகுதுனு தோனுது..... எனிவே ஆல் த பெஸ்ட்...” என்று சஞ்சு கூறியது அவளது மனத்திரையில் ஓடியது.....
சஞ்சுவிற்கு அஸ்வினை பற்றி தெரிந்த அளவு கூட ஏன் சாருவிற்கு அவனைப்பற்றி தெரியவில்லை.... சாருவை எப்போதும் அஸ்வின் தாங்குவதால் அவனது இன்னொரு பக்கத்தை அறியத் தவறினாளா சாரு??
 

banumathi jayaraman

Well-Known Member
மூச்சு விடாம அஸ்வின் பய
புள்ள முன்னூறு பேச்சு
பேசியும், காது கொடுத்து
அம்புட்டு பேச்சையும்
தூங்குறா மேனிக்கு
கேட்டுக்கினு இருந்த, சாரு
அஸ்வினுக்கு டாட்டா
காண்பிச்சுட்டு பறந்துட்டாளே,
அனு டியர்?
"அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே"-ன்னு
தேஜஸ்வினைப் புலம்பி
பாட வைச்சுட்டாளேப்பா?

இப்போ அஸ்வின் என்ன
பண்ணப் போறான்?
"நீ முன்னாடி போனா
நான் பின்னாடி வாறேன்
என்னாடி முனியம்மா
உன் கண்ணுல மைய்யி?
யாரு வைச்ச மைய்யி?
இது நான் வைச்ச மைய்யி......"ன்னு
பாடிக்கிட்டே சாரூணீ பின்னாடி
அஸ்வினும் பிளேனுல பறந்து
போவானா?
இல்லை, "போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே......."ன்னு
பாடிக்கிட்டு கம்முனு வூட்டுல
இருந்துருவானா, அனு டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top