சென்னா மசாலா

Advertisement

ThangaMalar

Well-Known Member
சென்னா இரவே ஊற வைக்கனும்.
காலைல ஒரு ஸ்பூன் உப்பு போட்டு வேக வச்சிக்கனும்.
சின்ன வெங்காயம் 10 உரிச்சு வச்சிக்கனும்.
பெரிய வெங்காயம் ரெண்டு பொடியா நறுக்கி வச்சிக்கனும்.
கொஞ்சமா புளி நனைய போடனும்.

ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், பிரியாணி இலை, ரெண்டு ஏலக்காய் போட்டு வதக்கி பெரிய வெங்காயம், ஒரு கீறின பச்சை மிளகாய் போட்டு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கனும்.

சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து அதையும் சேர்த்து வதக்கனும்.
ரெண்டு பெரிய தக்காளியும் மிக்ஸியில் அரைச்சி அதையும் சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து ( உப்பு மசாலாக்கு மட்டும்) கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கனும் .
எண்ணெய் பிரிந்து வரும் போது வேக வைத்த சென்னாவை வேக வைத்த தண்ணீருடன் கொதிக்க விடனும்.

தண்ணீர் வற்றியதும் புளியை கெட்டியா கரைச்சி ஊற்றி சிம்மில் வைத்து கொதிக்க வைக்கனும். ( புளிக்கு பதில் எலுமிச்சை சாறு கூட சேர்க்கலாம். ஆனால் உடனே இறக்கிடனும்).
கெட்டியானதும் சீரகப்பொடி போட்டு ஒரு கிளறு கிளறி, கொத்தமல்லி சேர்த்தால் சுவையான சென்னா மசாலா தயார்.
பூரிக்கு தொட்டு சாப்பிட இது தான் பெஸ்ட்:):)
 

fathima.ar

Well-Known Member
சென்னா வேக வைக்கும் போது ஒரு உருளைக்கிழங்கு சேர்த்து வேகவைச்சு..
வெங்காயம் தக்காளி மசாலால இதையும் மசிச்சு சேர்த்தால் கொஞ்சம் திக்கா இருக்கும்
 

ThangaMalar

Well-Known Member
சென்னா வேக வைக்கும் போது ஒரு உருளைக்கிழங்கு சேர்த்து வேகவைச்சு..
வெங்காயம் தக்காளி மசாலால இதையும் மசிச்சு சேர்த்தால் கொஞ்சம் திக்கா இருக்கும்
சுவை மாறிடும் பாத்தி.. :confused:
இது தனி சுவை ;)
 

fathima.ar

Well-Known Member
Dear..தங்க மலர்... உங்கள் ஆபத்துதவி தக்காளி தொக்கு °அடுத்த நிமிடம் காலி° எங்கள் வீட்டில்... இதில் சன்னா பறக்கும்...

ஆபத்துக்கு உதவிக்கு பதிலாக நிமிடத்தில் காலின்னு. போட்ருக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top