நேசம் மறவா நெஞ்சம்-16Nesam Marava Nenjam

Advertisement

muthu pandi

Well-Known Member
அங்கிருந்த அடுத்த ஒரு வாரத்திலும் கயல் கண்ணனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.......மாடியிலும் சென்று படுக்கவும் இல்லை .......பகலில் மாடியேறி தன் பேக்கில் சில பொருட்களை எடுத்தாலும் இரவில் மறந்தும் மாடி ஏறவில்லை............ கண்ண்னும் அவள் மாடிக்கு சென்று வருவதை பார்த்தாலும் எதையும் கேட்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் அவள் அவனை கண்டுக்கொள்ளவில்லை...அவன் வலியபோய் பேச வரும்போதும் அவள் குடுகுடுவென்று ஓடி சாவித்திரியிடம் சென்று அமர்ந்துக் கொண்டாள்........



அந்த ஒருவாரத்தில் கயலின் காயம் ஆறவும் “ஆத்தா கயலு இன்னைக்கு ஊருக்கு கிளம்புங்கத்தா......... இன்னைக்கு நீங்க போகாட்டா........ அப்பத்தா நாளைக்கு இங்க வந்துருவேன்னு சொன்னாங்க............. அது மொறையா இருக்காதுத்தா..........நீங்கதான் போகனும்............ அதுதான் மொறையும் கூட............”

அடுத்த அரைமணி நேரத்தில் கயல் சுடிதார் போட்டு இறங்கிவர..........



“என்னத்தா ஒரு சீலய கட்டிக்கட்டு போகக்கூடாது.”



“இல்லத்த........ இடுப்புல லேசா இன்னும் அந்த சிவப்புமாறல.......... அதான்த்த.........”.



காரை தவிர்த்து கண்ணன் தன் வண்டியில் அவளை அழைத்துச் செல்ல........அவனின் பின் புறம் அமர்ந்திருந்த கயல் அவனை விட்டு எவ்வளவு தள்ளி உக்கார முடியமோ அவ்வளவு தள்ளி உட்கார்ந்து அங்கிருந்த கம்பியை பிடித்திருந்தாள்......



கண்ணனோ காரில் சென்றால் சீக்கிரமாகவே சென்றுவிடலாம் என்பதால்தான் அதை தவிர்த்து.........வண்டியை எடுத்திருந்தான்........வண்டியை ஓட்ட ஆரம்பித்ததிலிருந்து எப்புடி இவகிட்ட பேச்சை ஆரம்பிப்பது........... என்று யோசித்துக் கொண்டிருந்தான்.......இவ வீட்டுக்கு போயிட்டா...... அப்புறம் பேச முடியுமோ என்னமோன்னு தெரியலயே..........எப்புடியாச்சும் எங்கயாவது வண்டிய நிப்பாட்டி இவகிட்ட ஒரு வார்த்தையாவது பேசிரனும்..........



கயலோ................ இந்த முத்துபயலுக்கு அறிவே இல்லை.........நாமெல்லாம் அப்பாத்தாகிட்ட அடிவாங்கும் போது எப்படி குதிச்சு அடி மேலயே விழுகாம எஸ்கேப் ஆகி அடி வாங்குனமாதிரியே அழுது ஊரக் கூட்டுவோம்.............ஆனா இவரு போட்டு இப்புடி மாங்கு மாங்குன்னு அடிக்குறாரு இந்த பய குத்துக்கல்லு மாதிரி அசையாம நிக்குறான்...........ஆனாலும் இவனுக்கு ரொம்ப அழுத்தம்பா........நாம தான் தேவை இல்லாம குறுக்கப் புகுந்துட்டோம்..........முத்துவுக்கு இன்னும் டிரைனிங் பத்தல........ நாம ஊருக்கு போயிட்டு வரவும் அவனுக்கு கொஞ்சம் டிரைனிங். குடுக்கனும்............



எத்தன தரம் மல்லிகாவ இப்புடி புகுந்து அப்பத்தாகிட்ட இருந்து காப்பாத்தி இருக்கோம்....... அப்பத்தா மாதிரி இவரும் லேசா அடிப்பாருன்னு பாத்தா............. அம்மா........... என்ன அடி...........ஒவ்வொரு அடியும் எப்புடி சுளீர் சுளீர்னு விழுகுது............யுவர் ஆனர்……… இனிமே அடிக்கறாதா இருந்தா கை, சின்ன கம்பு, விளக்கமாறு இத மூனுமட்டும் தான் வச்சு அடிக்கனும்னு இவுக ரெண்டு பேருகிட்டயும் ஆர்டர் போடனும்......... இந்த பெல்ட்ட ரிஜெக்ட் ஆக்கனும் ஆனரே.......... என்று கேட்டு வாங்கனும்........ இல்ல அப்புடித்தான் அடிவாங்கனும்னா.........வடிவேல் மாதிரி கூடைய கட்டிக்கணும்பா...................டேய் என்னைய அடிச்சுட்டீல.........உன்னைய பழிவாங்காம விடமாட்டேன்..........இவனை என்ன பண்ணலாம்..........



கண்ணன்....”.உங்கிட்ட கொஞ்சம்.........பேசனும்............”



இவரு யாருகிட்ட பேசுறாரு..........இவள் ஏதும் பேசாமல் இருக்க............



இவள் ஏதும் பேசாமல் வரவும் வண்டியை ஒரு ஓரமாக மரநிழலில் நிப்பாட்டியவன் அவள் புறம் திரும்ப.........அவள் வண்டியிலிருந்து இறங்கி அவனுக்கு முதுகை காட்டி நின்றாள்..........

“உன்கிட்டதான்........பேசனும்.......”..



டேய் போடா உனக்கு என்னோட பேரு தெரியாதா.............



“உங்கிட்டதான் பேசனும்.......... இங்கபாரு......இங்கபாருன்னு சொல்லுறேன்ல.......”என்றபடி அவள் முன்னே வர............

அவள் மீண்டும் திரும்பப் போக கண்ணன் அவன் கையைபிடித்து திரும்பவிடாமல் நிறுத்தியிருந்தான்.........



“இங்கபாரு நீ அன்னைக்கு குறுக்க வந்ததுதப்புதானே.........?.”..



அடப்பாவி இவரு அடிச்சது தப்புல்லயாம்.........நான் குறுக்கால வந்ததுதான் தப்பாம்........டேய் நீ நல்லா வருவடா..........



“அன்னைக்கு நீ குறுக்க வருவேன்னு நான் நினைக்கவேயில்ல.........”



அவ்வளவுதான் கயலுக்கு பொறுக்கமுடியவில்லை........”.குறுக்கவராட்டா.......அந்த அடியும் சேத்துதானே முத்துவுக்கு விழுந்திருக்கும்.....அவன் பாவம்தானே....ஏன் வாயால சொன்னா கேட்டுக்கமாட்டானா.....இப்புடி போட்டு மாட்டடி மலையடியா அடிக்குறீங்க...... அவனுக்கு அப்பா இல்லனுதானே......போட்டு அடிக்குறீங்க........... இனிமே எங்கிட்ட பேசாதீங்க..................”



“அப்ப அவன் பண்ணுனது தப்புல்லயா...........”



“தப்புதான்..........”



“சரி விடு இனிமே .......அடிக்கமாட்டேன்......”



..மேலும் கண்ணன் அன்று அவன் அம்மாயிடமும் தம்பியிடமும் பேசியதையும் இவள் அறைத்தூக்கத்தில் கேட்டு இருந்தாள்........அதனால் அவனை பெரிய மனது பண்ணி மன்னித்திருந்தாள்.......



ஆனா இவனுக்கு தண்டனை கொடுக்கனுமே............” சரி வாங்க போகலாம்.......”



அப்ப இவ இனிமே எங்கிட்ட பேசுவாலா....... ஒன்னுமே சொல்லாம கிளம்பச்சொல்லுறா..........



“அப்ப என்கிட்ட நீ பேசுவியா...........”



“நான் சொல்லுறத மட்டும் கேளுங்க.......இப்ப வண்டிய எடுங்க........”.



என்னடா இவ நமக்கே ஆர்டர் போடுறா............ நம்மகிட்ட பேசுவாளா......மாட்டாளா....... என்று மனதிற்குள் நினைத்தபடி............ வண்டியை கிளப்பினான்............சிறிது தூரம் சென்றவுடன்.............



“நிப்பாட்டுங்க......... நிப்பாட்டுங்க...........”. என்றவள் ஒரு ஐஸ்கிரீம் கடையில் நிப்பாட்டச் சொல்ல..................



“என்ன ஒனக்கு ஐஸ்கிரீம் வேணுமா............”



“ஆமா.......”.



“எத்தனை வாங்கித் தர..............ஒன்னா ரெண்டா............”.



தன் ஐந்து விரலை கைகாட்டினாள்..........



“என்ன அஞ்சு வேணுமா............ உடம்புக்கு ஆகுமா................”டேய் அவ இப்பதான் பேச ஆரம்பிக்குறா......... எப்புடியாச்சும்.....பேச்ச வளத்துரு.......

“இல்ல எனக்கு அஞ்சு பெரிய பேமிலி பேக் வேணும்...............”



“ஏய் ஒன்னொன்னும் 500 .......1000........இருக்குமே........?.”.



“எனக்கு வேணும் ………..”என்று அடம்பிடிக்க..............இவ அடங்கமாட்டா போலயிருக்கே...... என்று நினைத்து வாங்கிக் கொடுத்து..................

“சரி சாப்புடு............”

“இல்ல இல்ல........... வீட்டுக்கு போயிறளாம்......”

“சரி வா “என்று வண்டியில் ஏறிக் கிளம்ப..........

எப்புடி கஞ்சபிசுனாரிய............காசு செலவழிக்க வச்சுட்டனா............. என்று மனதிற்குள் குதூகலித்தபடி வண்டியில் ஏறி உட்கார்ந்தவள்.................... இப்போது இரு கையிலும் ஐஸ்கிரீம் இருந்ததால் காலை இருபுறமும் போட்டு உட்கார்ந்திருந்தாள்........



வண்டி சிறிது தூரம் சென்றதும்...............மெதுவாக அந்த ஐஸ்கிரீம் பாக்சை எடுத்து அவன் முதுகில் வைக்க............

“ஸ்ஸ்ஸ்......ஏஏஏஏ...... என்ன பண்ணுற............குளுறுது...........”



“குளுறுதா..........நல்லா....குளுறட்டும்...........உங்களுக்கு நல்லா வேணும் “என்று சிரித்தவள்.............. கொஞ்ச தூரம் சென்றதும்............மெல்ல ....ரெண்டு ஐஸ்கிரீம் பாக்சை அவன் முன் தொடையில் அவன் வேட்டியின் மீது வைக்க............



“ஏய்............”.என்று வண்டியை நிப்பாட்டியவன்........... அவளை திரும்பிபார்க்க...........”. ஏய் என்ன பண்ணுற...........”



“எப்புடி......... என்னோட........தண்டனை..........”என்று சிரிக்க..............



பெல்டால் அடித்த தனக்கு........... இப்புடி ஒரு தண்டனையா................இவளின் இந்த சிறுபிள்ளைத்தனத்தில் கண்ணனின் கண்ணும் மனமும் நிறைந்தது................அவன் உள்ளார்ந்த சிரிப்போடு அவள் முன் நெற்றியில் முட்டி சிரிக்க...........



“ஸ்ஸ்ஸ்..........” என்று அவள் முன் நெற்றியை தேய்த்துவிட்டு சிரிக்க...................



இவர்களின் சிரிப்பு..................நிலைக்குமா....................?

தொடரும்...................
nice
 

Banupathal

Well-Known Member
lovelyyyy ud sissyyy........but romba short ah mudichitingale....kayal mind voice sema.....kayal kannan lovely pair.....eagerly waiting for nxt ud sissy....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top