Ennai mayakum mayavaney -6

Advertisement

Thulasik

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 6

நள்ளிரவு வரை அரட்டை அடித்து கொண்டிருந்து ஒருவழியாக விடிந்ததும் உறங்க தொடங்கினார்கள்...

ராதா மட்டும் உறங்காமல் யோசித்து கொண்டிருந்தாள்... அடுத்து எதிர்காலம் தனக்கு எப்படி அமைய போகிறது என்ற பயம் அவளை உறங்க விடாமல் தடுத்தது...

மெதுவாக தோழிகளை திரும்பி பார்த்தவளுக்கு பொறாமையாக கூட இருந்தது... தனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற எண்ணமே இரு கண்களிலும் கண்ணீரை வர வழைத்தது...

இமை மூடி உறங்க முயன்று தோற்றாள்... மெதுவாக கண்ணீர் கண்களிலிருந்து விழி வழியை நனைத்தது....
ஒருவழியாக அவளுமே உறங்கி போனாள்...

ஏய் எந்திரிடி மணி பதினொன்னு எந்திரி உன் அம்மா கூப்பிடுறாங்க என்று சம்பூ ராதாவை அடித்து எழுப்பி கொண்டிருந்தாள்...

மெதுவாக எழுந்தவள் கத்தாதடி எழுந்துட்டேன் கொஞ்சம் வழி விடு நான் முருகனை பார்க்கனும்டி வழி விடு என்று கண்ணை கசக்கியபடி விழியை முருகனின் மீது பதித்தாள்...


ஆமா முருகன் உன்னை மட்டும் தான் கவனிக்காம இருக்கான் இல்லைன்னா இவ்ளோ கஷ்டம் குடுப்பானா முருகனாம் முருகன் எந்திரிச்சு வா... டைம் ஆச்சு வீட்டுக்கு போணும் என்றாள் சம்பூரணம்...

ஏய் சாமியை தப்பு சொல்லாத போ வரேன் என்று தோழியை அடக்கி
விட்டு போர்வையை மடிக்க தொடங்கினாள் ... இரவின் தூக்கமின்னமையே எழுந்ததும் சலிப்பு தட்டியது...

ஒருவழியாக காலை கடைமைகளை முற்பகலில் முடித்து காலை உணவை மதியம் உண்டார்கள்...

சம்பூவும் ரம்யாவும் அவரவர் வீட்டிற்கு கிளம்ப நாளைக்கு ரிசல்ட்டுடி இப்பவே கொஞ்சம் பயமா இருக்கு எனக்கு என்றாள் சம்பூ...

ரம்யாவுக்குமே பயமாக தான் இருந்தது... இவளை மாதிரி இங்கேயே மாமான கட்டிக்கிற மாதிரி இருந்தா இங்கையே நிம்மதியா இருப்பேன்...

நமக்கு தான் மாமான்னு யாரும் இல்லையே என்று பெருமூச்சு விட்டாள் ரம்யா...
அவ்வளவு கஷ்டப்படுறவ இவ மாமாவையே கட்டிக்கோடி இவளாவது நிம்மதியா இருப்பா... நீயுமே இங்கையே மாடு மேய்க்கலாம் என்றாள் சம்பூ...

ஏண்டி இந்த கொலை வெறி நாலு அடி வேணும்னா அடிச்சுக்கோ... இப்படி எல்லாம் பேச்சுல கூட சொல்லாதடி சகிக்கலை அந்த எரும கூட நானா நினைச்சு பாரு என்றாள் சம்பூ....

அதே தான் சொல்றேன் அவ மட்டும் அவனை கட்டிகணுமா... அவளை நினைச்சு பாரு இப்படி மட்டும் இனி பேசு அவ்ளோ தான் நீ என்று மிரட்டி விட்டு தோழியின் முகத்தை பார்த்தாள்...

கண்கள் கலங்கி இருந்தாலும் ரம்யாவின் பேச்சை கேட்டு தன் நிலைமையை நினைத்து நொந்து கொண்டாள்....
தோழி கலங்கியதை பார்த்து ஷ்ஸ்ஸ்... சும்மா இருடி...

நாளைக்கு ஊட்டிக்கு தான் போகணும் ரிசல்ட் பார்க்க நீங்க இரண்டு பேரும் வருவிங்களா மாட்டிங்களா? நீங்க வந்தா தான் அப்பா என்னையும் அனுப்புவாரு போலாமா வேண்டாமா சொல்லுங்கடி என்றாள் சம்பூ....

போலாம்டி ரிசல்ட் பார்த்துட்டு தான் என்னை வீட்ல சேர்த்துபாங்களா இல்லையானு தெரியும்... என்றாள் ரம்யா.

எல்லாம் ஒழுங்கா தான் எழுதியிருக்கோம் நல்லதாவே நினைப்போம் பேசாம வா கிளம்பலாம் இப்பவே லேட் ஆச்சு கிளம்பு என்று ரம்யாவை விரட்டி கொண்டிருந்தாள் சம்பூரணம்...
தோழிகள் இருவரும் பாய் சொல்லி அவரவர் வீட்டிற்கு சென்றனர்...

வீட்டிற்குள் திரும்பிய ராதாவிற்கு பின் வாசல் வழியாக ரகு வருவதை பார்த்ததும் வேகமாக இடத்தை விட்டு ஒடினாள்...

இவளுங்க எப்படா போவாங்க இவளை ஒருவழி பண்ணனும்னு இருந்த கோதையும் அவன் பின்னே வந்தாள்...

ராதாவிற்கு இதயம் தொண்டைகுழியில் வந்து துடித்து கொண்டிருந்தது... இவங்க கிட்ட இருந்து எனக்கு விடுதலையே கிடையாதா கடவுளே என்று அந்த கிருஷ்ணனை ஏறிட்டாள்...

அவன் அப்போதும் அவளைப் பார்த்து தனது மாயபுன்னகையை புரிந்து கொண்டிருந்தான் அந்த மாயவன்...
அண்ணா எனக்கு கொஞ்சம் கஷ்டாம இருக்கு அண்ணா... இந்த வருஷம் நீ கல்யாணம் பண்ணி உன் பொண்ணை என் வீட்டுக்கு அனுப்புற மாதிரி தெரியலை...

உனக்கும் வயசாகிட்டு வேற போகுது நீயே ஏழு வருஷம் கழிச்சு பெத்துருக்க... உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நாளைக்கு நாங்க தானே உன் பொண்ணை பார்த்துக்கனும்...

அவ அந்த போலிஸ்காரன் பொண்ணு சொல்றது எல்லாம் கேட்காத அண்ணா... இந்த வருஷம் கண்டிப்பா கல்யாணம பண்ணிடலாம்... வயசு பொண்ணு எல்லாம் வீட்ல வெச்சுக்க கூடாதுண்ணா....

அதில்லாம எப்ப யாருக்கு என்ன நடக்கும்னு தெரியாதுண்ணா... இவன் போலிஸ் ஆகுறதுக்குள்ள கல்யாணம் பண்ணி இவனோட இருக்கட்டும்...
அப்புறம் எங்க வீட்டுக்கு அனுப்புங்க என்று கோதை ஆவலே வடிவாக தனது அண்ணனின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்...

உள்ளிருந்த ராதாவிற்கு அழுகையும் கோபமும் வந்துக் கொண்டிருந்தது... இந்த அத்தை ஏன் இப்படி எல்லாம் சொல்றாங்க நான் இதெல்லாம் கேட்டுட்டு இப்படி இருக்கேனே சம்பூ சொல்ற மாதிரி நமக்கு தையிரியமே இல்ல தான் என்று தன்னை எண்ணி நொந்து கொண்டாள்...

அடுத்து கேட்ட வார்த்தை இன்னும் ஆத்திரத்தையும் அழுகையையும் வரவழைத்து...

அடுத்த வாரமே இரண்டு நாள் நல்ல நாளா இருக்கு என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க என்று அதே நிலையில் நின்றாள் கோதை...
ஏய் என்னடி உன் அப்பா தான் உன்னை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி தரனும்னு நீ பிறந்த அப்பவே சொல்லிட்டாரு....

இப்ப வேண்டாம்னு சொன்னா உன்னை என்ன பண்றது... அண்ணா எனக்கு தெரியாது நீ தான் சொல்லிருக்க உன் பொண்ணு கட்டி தரேன்னு இவ பேச்சு கேட்டுட்டு வேண்டாம் சொல்லாதே... ஊருக்குள்ள உன் பொண்ண தான் தப்பு சொல்லிடுவாங்க பார்த்துக்கோங்க என்றாள்...

அப்பா கல்யாணம் வேணாம் சொல்லலைப்பா கொஞ்ச நாள் போட்டும்பா மாமா அவர் போலிஸ் ஆகட்டும்பா கல்யாணம் பண்ணிக்கிறேன் பிளீஸ்பா என்றாள்...
இப்ப என்னால ஒன்னும் சொல்ல முடியலைம்மா... நாளைக்கு ரிசல்ட் வருது பார்த்துட்டு முடிவு பண்ணலாம்
என்று யோசனையில் ஆழ்ந்தார்...
நாளைய பொழுது எப்படி விடியப் போகிறது என்று ராதாவிற்கு மலைப்பாக இருந்தது.....

நாமும் மயங்குவோம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top