Saththamindri Mutthamidu 24

Advertisement

Harishan

Well-Known Member
இவ்வளவு காதலையும் எப்படி தான் 13 வருடமா ஒளித்து வைத்தான்... இந்த திரு தானா துளசி முகம் பார்க்காமல் காபி வாங்கியவன்...
 

Sainandhu

Well-Known Member
காலையில் எழுந்ததும்....துளசிக்கு குழந்தை பிறந்த
செய்தியை என் உறவுகளுக்கு சொல்ல வேண்டும்
என்ற உணர்வை ஏற்படுத்திய,கதையோட
ஒன்ற வைத்த பதிவு......
கண் முன்னால் காட்சிகள் விரிந்தது....
துளசியின் இயல்பை போலவே
அமைதியான முறையில் அவள் குழந்தையின் வரவு....


புதுவரவை கையில் ஏந்தும் போது...
மீனுவின் பிறப்பை தவற விட்ட திருவின் ஏக்கம்...
காலமும் நேரமும் யாருக்காவும் காத்திருப்பதில்லை...
தவற விட்ட நொடிகள் திரும்புவதில்லை
என்பதை உணர்த்துகிறது....


மனைவியை தூங்க வைக்கிறான்.....
மகளையும் தூங்க வைக்கிறான்.....
இப்ப மகனும் வந்தாச்சு....
நன்றாக தூங்கணும் என்ற உன் தீர்மானம்
என்ன ஆச்சு திருநீர்வண்ணா....?


“ பூவிலே மேடைக் கட்டி....”..
இத்தனை வேலை பளுவின் இடையில்....
முத்து முத்தா மனதை வருடும் பாடல்களைத் தேடி,தேடி .....
பொருத்தமாக கொடுக்க உன்னால் மட்டுமே முடியும்.....
உன்னால் எனக்கு அருமையான பாடல்களின் அறிமுகமும் கூட...
நன்றி மல்லி......


மனதிற்கு நிறைவை தந்த பதிவு......
 

Priya Prasath

Well-Known Member
எந்த எதிர்பார்ப்பும் அற்ற துளசியின் காதலுக்கு கிடைத்த (வெற்றி என்று சொல்லுவதை விட) வரம் தான் துளசியின் அன்பு ததும்பும் வாழ்க்கை .வன்முறையை விட அன்பு/அமைதி வழியே சாலச் சிறந்தது என்பதை துளசி மூலம் மல்லி நமக்கு உணர்த்தியுள்ளார்.துளசியின் அன்பு பொறுமை ஷோபனாவிற்கும் நல்ல வழிகாட்டுதலை அளித்துள்ளது..THANK A LOT FOR YOUR LOVELY STORY MALLI MAM...
 

Priya Prasath

Well-Known Member
எழமுடியாமல் அமிழ்த்துவது காதல் மட்டும் அல்ல
மல்லிகா மணிவண்ணனின் அழகான கதைகளும் தான் ...
மீளமுடியாத
அல்ல
மீளப்பிடிக்காத போதை
என்று கூட சொல்லுவேன்
மல்லிகாவின் கதைகளை
 

Suvitha

Well-Known Member
Thank you malli mam.......

No words to say......
அய்யோ ரொம்ப நெகிழ்ச்சியான தருணம்........,
ஒண்ணுமே சொல்ல முடியல......,
கொஞ்சம் பயமா வேற இருக்கு......, labour pain ஐ நெனச்சா......,
இதுக்கு மேல தூக்கமே வராது போலவே.......,
பயப்படாதே சகோதரி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top