Advertisement

                              கரை காணா  காதலே – 13

அங்கு நடந்து கொண்டிருந்த எதையும் மஹதி கவனிக்கவே இல்லை.. அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வரவே இல்லை… யாரோ அங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வரை தெரிந்திருந்தது.. ஆனால் அது யார் என்ன என்பது அவளுக்கு தெரியவில்லை…

அதை தெரிந்து வைத்திருந்தால் எதிர் வர போகும் பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்து இருக்கலாமோ???

வேதாந்த் பேசி முடித்ததில் இருந்து அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்… கூடவே சஞ்சீவும்… பிரபா ஏதோ நினைவில் இலக்கில்லாமல் எங்கோ வெறித்து கொண்டிருந்தான்…

பேச்சு சத்தம் நின்றுபோனதை உணர்ந்தவள் விழிகளை மேலே நேர் பார்வை பார்த்தாள்..

வேதாந்த் அவளுக்கு சற்று வலப்புறமாக இருந்ததால் அவளால் வேதாந்தை பார்க்க முடியவில்லை…

அவனும் ஏதோ மனநிலையில் அவளையே பார்த்து கொண்டிருந்தான்… என்னவென்று சொல்ல முடியாத இனம் காணா உணர்வு அவனுள் நடைபெற்று கொண்டிருந்தது….

{இது லவ்ன்னு நமக்கு தெரியும்… அவனுக்கு இன்னும் பல்பு எரியலையே…}

மஹதி நேர் பார்வை பார்த்ததும் அவள் பார்வை வட்டத்தில் விழுந்தது என்னவோ சஞ்சீவ் தான்… அவள் தன்னையே பார்ப்பதை பார்த்தவன் சிறகின்றி வானத்தில் பறந்தான்…

ஆனால் மஹதி பார்த்ததென்னவோ இவர்களுக்கு காட்சி பொருளாக இருக்கிறோமோ என்று தான்..

ஆனால் சஞ்சீவ் அதை வேறு மாதிரியாக எடுத்து விட்டான்.. அவள் தன்னை தான் பார்க்கிறாள் என்று….

அதற்கு மேல் அவளால் அங்கே நிற்க முடியாமல், அவர்களுக்கு நன்றி சொல்ல கூட தோன்றாது அவள் ஓடி விட்டாள்.. வேதாந்த் அதை கூட உணர்ந்தான் இல்லை… பிரபா தான் அவள் ஓடுவதை கவனித்து அவர்களிடம் வந்தான்…

வந்தவன் அவர்கள் இருவரையும் பார்த்து “என்னத்தை பாத்து இப்படி நிக்கிறானுங்க ஹ்ம்ம்…”  என்றவாறே  “டேய் சஞ்சு, வேதா என்ன ஆச்சு ???” என்று இருவரிடமும் கேட்டான்..

அப்போது தான் சுய நினைவிற்கு வந்தனர் இருவரும். வேதாந்த் தன்னிலை அடைந்ததும் முதலில் சுதாரிக்க அப்போது தான் புரிந்தது அங்கு  மஹதி இல்லை என்று… வேகமாய் அவன் கண்கள் தேட,

அவன் தேடுவதை பார்த்த பிரபா “யாரை தேடுறாடா.. அந்த பொண்ணா??? அது அப்போவே ஓடி போய்டுச்சு… நீ குடுத்த குடுப்புக்கு பயந்து ஓடி போச்சு போல.. சரி வாங்க நாம போகலாம்..” என்று இயல்பாய் பேசிக்கொண்டே அவர்கள் இருவரையும் அழைத்து சென்றான்…

“ச்சே அவ நம்ம முன்னாடி வந்தும் நாம அன்னிக்கு மாதிரியே இன்னிக்கும் மிஸ் பண்ணிட்டோமே.. இவ எந்த கிளாஸ்ன்னு தெரியலையே ஹ்ம்ம்..” என்று வேதாந்த் மைன்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருந்தான்…

அதே நேரம் இன்னொருவரும் அதையே தான் நினைத்து கொண்டிருந்தான்… வேறு யாரு சஞ்சீவ் தான்…

இருவரும் ஒருவருக்கொருவர் அறியாமல் மஹதியை பற்றியே நினைத்து கொண்டிருந்தனர்… இருவரில் ஒருவராவது வாய் திறந்து பேசி இருக்கலாம்…

வேதாந்த், தான் முதல்முறை அவளை எப்போது சந்தித்தோம் என்றும்….

சஞ்சீவ் தான் பார்த்த நொடி முதல் அவளிடம் காதல் வயபட்டுவிட்டேன் என்றும்… தங்கள் எண்ணங்களில் மூழ்கினர்..

ஆனால் இருவருமே அதை செய்யவே இல்லையே… ஒரு வேளை செய்திருந்தால் மிக பெரிய குழப்பம் ஏற்பட காரணமாக இருந்திருக்காதே…

எதிர்காலத்தில் அப்படி நடக்கலாம், இப்படி நடக்கலாம் என்று சொல்லி விடலாம்… ஆனால் காலம் என்ன தீர்மானிக்கிறதோ அது தானே நடக்கும்… அது நன்மையோ தீமையோ எது நடந்தாலும் ஏற்று கொண்டு தானே ஆக வேண்டும்,..

வேதாந்த் – சஞ்சீவ் – பிரபா மூவருமே இணை பிரியா நண்பர்கள்… வேதாந்த் பற்றி முன்னமே அறிந்தது தானே….

பிரபா அந்த ஊரிலேயே பெயர் சொல்லும் உணவக குழுமங்களின் ஒரே வாரிசு…. ஆனால் அவனுக்கு பிடித்தது என்னவோ இந்த துறை தான் அதனால் தான் இந்த துறையை தேர்ந்தெடுத்து படித்து கொண்டிருந்தான்… அவனுக்கு பெண்கள் என்றால் பிடிக்காது அதற்கு பலமான காரணமும் இருக்கிறது… (சரி கொஞ்ச நாள் பொண்ணுங்க பிடிக்காத மாதிரியே இருந்துட்டு போகட்டுமே!!! எப்படியும் கொஞ்ச நாள்ல ஒரு பொண்ணு கிட்டே தலை குப்புற விழுந்து தானே ஆகணும்)…

சஞ்சீவ் – நடுத்தரமான குடும்பத்தை சார்ந்தவன் தான்.. அவனது தந்தை அரசு ஊழியர்களில் ஒருவர்… தாய் இல்லத்தரசி… இவனுக்கு பின் ஒரு தம்பி, ஒரு தங்கை இருக்கின்றனர்… அவர்களும் படித்து கொண்டிருக்கின்றனர்… நிதிநிலையை பொறுத்தவரை இவனது குடும்பம் கொஞ்சம் பின்தங்கியது தான்… பள்ளி கல்வியில் முதன்மையாய் இருந்ததால் இந்த கல்லூரியில் இடம் கிடைத்தது… இப்பவும் அவன் படிப்பின் முன்னிலை தான்….

இவர்கள் மூவருமே வெவ்வேறு பின்னணியை கொண்டவர்கள் தான்… ஆனால் ஒன்றாய் இணைக்க பட்டனர் நட்பு என்ற ஒற்றை வார்த்தையில்..

மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தவள் யாரிடமும் பேசாமல் நேராய் சென்று அவளது அறைக்குள் அடைந்து கொண்டாள்..

ஹாலில் அமர்ந்திருந்த ப்ரியாவும், கமலாவதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்… “என்னவாம் பேசாம போறா…” என்று பாட்டியிடம் கேட்டாள் ப்ரியா..

“ஏன் டி நானும் உன்கூட தானே இங்க உட்கார்ந்து இருக்கேன்… என்கிட்டே வந்து கேக்குற??? பொறு உங்க அம்மா வர்ற வரைக்கும்…” என்று தமிழிற்காக காத்திருக்க தொடங்கினர்..

அறைக்குள் அடைந்து இருந்தவளுக்கோ “எனக்கு இந்த காலேஜ் வேணாம்ன்னு அம்மா வந்ததும் சொல்லிடனும், என்னால இங்க படிக்க முடியாது.. தினமும் இதே மாதிரி நடந்த ஹப்பா நெனைச்சு கூட பக்க முடியாக..” என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதே தமிழ் அவளது அறைக்கு வந்தார்.. கூடவே ப்ரியாவும், கமாலவதியும்..

“மதிமா என்ன ஆச்சு?? ஏன் காலேஜ்ல இருந்து வந்ததில இருந்து ரூம்லையே இருக்கியாம்??? ஏன்டா என்ன ஆச்சும்மா..” என்று பரிவாய் அவளது தலையை வருடியபடியே கேட்டார்..

அவர் கேட்டதுமே, அடக்கமாட்டாது அன்று காலேஜில் நடந்தவற்றை கொட்டத் தொடங்கினாள்… எல்லாம் சொல்லிய பின் நாளையில் இருந்து காலேஜ் செல்ல மாட்டேன், வேறு காலேஜ் சேர்ந்து கொள்கிறேன் என்று ஒரு குண்டை தூக்கி போட்டாள்..

அவள் சொல்லி முடித்ததும், மூவருக்குமே சிறு அதிர்ச்சியே, ஆனால் அதை முகத்தில் காண்பிக்கவில்லை…

“அட இவ்வளவு தானா..” என்று கேட்ட தமிழை அவள் விநோதமாக பார்த்து வைத்தாள்…

“அம்மா நான் என்ன சொன்னேன்னு புரிஞ்சிகிட்டு தான் பேசுறிங்களா??” என்று முகத்தில் அப்பட்டமாய் கோபத்தை காட்டினாள்..

“புரிஞ்சு தான் பேசுறேன் மதிமா, காலேஜ் டேஸ்ல இது எல்லாம் சகஜம் தான்மா, என்ன உனக்கு கொஞ்சம் வரம்பு மீறி பண்ணிட்டாங்க… அவங்க விளையாட்டா நினைச்சது வினையாக மாறிடுச்சு போல மதி… இன்னும் பாரு அவங்க எதுவும் பண்ண மாட்டாங்கடா… அப்படியே ஏதாவது சொன்ன இன்னிக்கு உனக்காக வந்து பேசினாங்கன்னு சொன்னியே, அவங்க கிட்டே சொல்லிடு மதிமா.. ஓகே வா…இதுக்காக எல்லாம் காலேஜ் வேண்டாம்ன்னு எல்லாம் சொல்ல கூடாதுடா… இதுவும் நன்மைக்கேன்னு கடந்து வாடா..” என்று பேசி பேசி அவளை கரைத்தார்…

“மதி நான் ஒன்னு சொல்லட்டுமா??? உங்க அப்பா இறந்த பின்னாடி நான் நம்ம தொழிலை கைல எடுத்ததும் எனக்கு எவ்வளவு இடைஞ்சல்கள் தெரியுமா??? என்னால இதை சரியா பண்ண முடியாதுன்னு  நம்மளை சுத்தி இருந்தவங்க தான் ஜட்ஜ் பண்ணுனாங்க.. அவங்களாவே முடிவு பண்ணிக்கிட்டாங்க…. ஆனா நான் அதை பார்த்து எல்லாம் கவலை படவே இல்லையே ஏன்னா எனக்கு அப்புறம் நீங்க இருக்கீங்க…

உங்களை வளர்த்து பெரிய ஆளா கொண்டு வரணும்…என்னை சுத்தி இருக்கவங்க முன்னாடி என்னால முடியாதுன்னு சொன்ன விஷயத்தை செஞ்சு காமிக்கனும்னு ஒரு வைராக்கியம் இருந்தது..அதனால தான் நான் எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தயங்காம போராடுறேன்..அதிலே வெற்றியும் நமக்கு கிடைக்குது..

இதை எல்லாம் விட ஒரு ஆண் துணை இல்லாம உங்களை வளர்த்து,  யாரும் எந்த தவறும்  உங்க மேல சுட்டி காட்ட கூடாதுன்னு முடிவு பண்ணி அதே மாதிரி தான் இப்போ வரைக்கும் வளர்த்துட்டு இருக்கேன் மதிமா..”

மஹதிக்கும் புரிந்தது, அவள் அப்பா இல்லாமல் தமிழ் அவர்களை வளர்க்க எவ்வளவு கஷ்ட பட்டர் என மேலும் கமலாவதியும், தமிழும் இவர்கள் இருவரையுமே கஷ்ட, நஷ்டங்கள் , வெளி ஆட்களிடம் பழகும் விதம் என எல்லாவற்றையும் சொல்லி கொடுத்து வளர்த்தனர்…

பின் இவளை இப்படி பேசி சமாதனம் செய்யாவிட்டாள், காலேஜ் போக மாட்டேன்னு என்று அடம் செய்வாளே!!!!!

இவளுக்கு கிடைத்திருக்கும் கல்லூரி மாநிலத்திலேயே சிறந்த கல்லூரி என்று பெயர் வாங்கியது… கொஞ்சம் பெரிய பதவியில் இருக்கும் அதிகாரிகள் எல்லோரும் இந்த கல்லூரியில் படித்தவர்களே…. இன்னும் பல பெருமைகளை உள்ளடக்கியது இந்த கல்லூரி…

அதுவரை அமைதியாய் இருந்த ப்ரியா “மதி உனக்கு ஹெல்ப் பண்ணினாங்கன்னு சொன்னியே அவங்களுக்கு தேங்க்ஸ், சொன்னியா…. அவங்க எந்த கிளாஸ் என்னனு தெரியுமா???” என்று அதி முக்கியமாக அந்த கேள்வியை கேட்டாள்..

அப்போது தான் மஹதிக்கும் மண்டையில் உரைத்தது… தனக்கு உதவியவர்களை சிறிதும் கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கும் போதே அவளுக்கு வெட்கியது… அவள் முழித்த முழியிலேயே அவர்களுக்கு புரிந்தது..

“வருத்த படாதே மதிமா.. நாளைக்கு முதல் வேளையா போனதும் தேங்க்ஸ் சொல்லிடுடா…” என்று அவள் முகத்தை பார்த்தே கண்டறிந்து அவள்  கவலையை போக்கினர்…

அவளுக்கு தைரியம் சொல்லி, அவள் தெளிவாகி விட்டதை அவள் முகம் கட்டி கொடுத்தது…. அதில் திருப்தியான தமிழும், கமலாவதியும் அவள் அறையை விட்டு வெளியே வந்தனர்…

ப்ரியா மட்டும் அவளிடம் பேசிக்கொண்டிருந்தாள்..

“மதி, மதி அக்கா,..”

“என்ன ப்ரி சொல்லு…”

“இல்ல உனக்காக சப்போர்ட் பண்ணாங்கன்னு சொன்னியே உன் சீனியர்ஸ், எப்படி இருப்பாங்க???”

அவள் கேள்வியில், அவளை பார்த்து புரியாத பாஷையில் கேள்வி கேட்டா மாதிரி பார்த்து வைத்தாள் மஹதி…

“இப்போ எதுக்கு இந்த லுக் குடுக்கிற…. உன் சீனியர்ஸ் எப்படி இருந்தாங்கன்னு தானே கேட்டேன் ???

“நான் அவங்களை சரியா பாக்கலையே ப்ரி… ஈவன் நாளைக்கு அவங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்ல போறேன்னு கூட தெரியல..” என்றவளது முகத்தில் சிறிது யோசனையின் சாயலே…

“ஹ்ம்ம் விளங்கிடும்..” என்ற ப்ரியா அவளுக்கு கேட்காத வண்ணம் புலம்பினாள்..

“ஹே என்னடி நீயா பேசிட்டு இருக்க??”

“இல்ல பர்ஸ்ட் டே காலேஜ் போய் இருக்க, கலர் கலரா பசங்க வந்து இருப்பாங்க சரி எதாவது சைட் அடிச்சு இருப்ப, இல்ல யாராவது லவ் ப்ரோபோஸ் பண்ணி இருப்பாங்கன்னு சொல்லுவேன்னு நினைச்சா, இங்க வந்து ராகிங் பண்ணுனாங்கன்னு சொல்லிட்டு கண்ணை கசக்கிட்டு இருக்க..ப்ளடி சின்ன பிள்ளையாமா நீ ??” என்று மஹதியை காலாய்த்து கொண்டிருந்தாள்…

மஹதியோ “அவளா நீ..” என்ற ரீதியில் அவளை முறைத்தாள்…

“அவள் முறைப்பை பார்த்ததும் அது இல்ல மதிகா, என் பிரண்ட்ஸ் எல்லாம் அவங்க அக்கா, அண்ணா காலேஜ் கூத்து எல்லாம் ஷேர் பண்ணுவாங்களா, சோ நானும் நாளைக்கு  போய் சொல்லணும்ல தான் கேட்டேன்” என்றவாறே சிரித்தாள்…

“மரியாதையா ஓடிரு..” என்று சொல்லியவள் அவளை அடிக்க தலையணையை தேடியவளை,

“ஒய் என்ன இதையா தேடுர, குடுக்க மாட்டேனே , குடுக்க மாட்டேனே..” என்று பாட்டு பாடியவள் அவள் தலையணை எடுத்து கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி விட்டாள்… அவளை பிடிப்பதற்காக இவள் செல்ல அங்க ஒரே ஓட்ட போட்டியே நடைபெற்றது…

அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே கிளம்பியவளை, தமிழின் குரல் தடுத்தது…

“மதிம்மா அம்மா சொன்னது எல்லாம் யாபகம் இருக்கு தானே???”

பளிரென புன்னைகைத்தவள் எல்லாம் இருக்குமா, அப்பறம் நேத்து ஹெல்ப் பண்ணினவங்களுக்கும் தேங்க்ஸ் சொல்லிடுறேன்..” என்றவாறே அவளது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்…

“மதி நான் சொன்னதும் யாபகம் இருக்கு தானே என்று இதழை பிரிக்காமல், சிரிக்காமல் வினவினால் ப்ரியா..

அவளின் கேள்வியில் உக்கிரமான மஹதி, “இருடி உன்னை வந்து வச்சுக்கிறேன்…” என்று திட்டி விட்டு கிளம்பினாள்…

கல்லூரிக்கு வந்தவள் முதலில் தேடியது நிமிஷாவைத்தான்…

“நேத்து நடந்த கலவரத்தில அவளை எப்படி மறந்தேன், ச்சே..” என்று அவளை தேடியவாறே அவள் கிளாஸ் ரூம் வந்திருந்தாள்..

நிமிஷாவும் இதை தான் நினைத்து கொண்டிருந்தாள்… சொல்ல போனால் மஹதிக்காக காத்திருந்தாள்…

தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் தான் நிம்மதி பேரு மூச்சு விட்டனர்… சிரித்தபடியே அவள் அருகினில் அமர்ந்தாள் மஹதி..

“ஹே சாரி நிமி, நான் நேத்து உன்கிட்டே சொல்லாம போயிட்டேன்..” என்று சொல்ல ஆரம்பித்தவளை தடுத்த நிமிஷா,

“இரு மஹதி நான் சொல்லி முடிச்சுடுறேன், நானும் தான் உன்கிட்டே சொல்லாம போயிட்டேன்.. ஏன்னு தெரியுமா??” என்று ஆரம்பித்தவள் சீனியர் ராகிங் பண்ண ஆரம்பித்தது முதல் பிரபா அவளை அடித்தது வரை எல்லாம் சொல்லி முடித்தாள்…

அதை கேட்டு மஹதி அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள்…

“நாம நமக்கு தான் ரொம்ப ராகிங் பண்ணினங்கன்னு நினைச்சா சீனியர்ஸ் எல்லாருக்குமே அப்படி தான் பண்ணி இருக்காங்க… இனிமே எதாவது பண்ணட்டும் பிரின்சிபால் கிட்டே கம்ப்ளைன்ட் பண்ணிட வேண்டியது தான்..??” என்று முடிவெடுத்தவள்,

“உனக்குமா நிமி எனக்கும் என்ன நடந்துச்சு தெரியுமா..??” என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்…

“மஹதி அப்போ எனக்கு அறை விழுந்ததுக்கு அப்பறமா தான் நீ வந்து இருக்கேன்னு நெனைக்கிறேன்” என்று முகத்தை சோகமாக வைத்து சொன்னாள்…

“ஹே நிமி நீ இனிமே பீல் பண்ணாதே, இன்னும் எதாவது ராகிங் பண்ணினாங்கன்னா நாம நேத்து என்னை ராகிங் பண்ணினப்ப வந்து சப்போர்ட் பண்ணின சீனியர்ஸ் கிட்டே சொல்லிடலாம் என்ன..”  என்று பிரச்னை ஆரம்பித்தவனையே சொல்லி சமாதானம் செய்தாள் மஹதி…

 

“நிமி நம்ம பிரேக்ல நேத்து எனக்காக ஹெல்ப் பண்ண வந்த சீனியர்ஸ்க்கு தேங்க்ஸ் சொல்லணும்டி…. அவங்களை எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு தான் தெரியலை”..

“அது என்ன பெரிய கஷ்டமா, நேத்து அங்க இருந்த நம்ம கிளாஸ் பாய்ஸ் கிட்டே சொல்லிட போறாங்க… விடு அப்பறமா விசாரிச்சுட்டு போய் தேங்க்ஸ் சொல்லிட்டு வந்திடுவோம்”  என்று அவளை அடித்தவனை நேருக்கு நேராய் பார்க்க போவதை பற்றி தெரியாமல் பெசிக்கொண்டிருதாள்…

அதே நேரம் சஞ்சீவ் மற்றும் பிரபா இருவரும் வேதாந்த் வரவிற்காக காத்து கொண்டிருந்தனர்…

“டேய் பிரபா நேத்து அந்த பொண்ணு பாவம்ல…”

“ஆமாடா சஞ்சு… சட்டுன்னு அடிச்சுட்டேன்…” என்றான் வருத்தம் நிறைந்த குரலில்…

“நாம என்ன சொன்னா இவன் என்ன சொல்றான்..” என்று அவனை பார்த்து “டேய் என்னடா சொல்ற??

“டேய் அதான் நேத்து அந்த பொண்ணை அடிச்சுட்டேன்ல அதை சொன்னேன்…..”

இதை கேட்டதும், பிரபாவை விழிகள் தெரித்து விடும் அளவு பார்த்தவன்

“டேய் நீயாடா இது….” என்றான் ஆச்சர்யம் நிறைந்த குரலில்….

“ஹே சும்மா கிண்டல் பண்ணாதே… நான் ஏதோ கோவத்திலே அடிச்சுட்டேன்… அந்த டைம்ல ராகிங்ன்னு எல்லாம் ஞாபகம் வரலடா..” உண்மையான வருத்தத்துடனே சொன்னான்…

அவனின் வருத்தத்தை புரிந்து கொண்ட சஞ்சீவ், “சரி விடுடா தெரிஞ்சா பண்ணுன இல்லல, அவங்க யாருன்னு பார்த்து சாரி சொல்லிடலாம்.. நோ வொர்ரீஸ்டா…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தூரத்தில் வேதாந்த் ஒரு துள்ளலுடனே வந்து கொண்டிருந்தான்.. அதே நேரத்தில் மஹதியும், நிமிஷாவும் அவர்களை தேடி வந்து கொண்டிருந்தனர்..

நிமிஷா பிரபாவை பார்த்தாள் என்ன செய்வாள் ???

சஞ்சீவின் கண்களில் இருக்கும் சுவாரசியத்தை மஹதி அறிந்து கொள்வாளா????

வேதாந்த் மஹதியை பார்த்ததும் என்ன செய்ய போகிறான்???

 

 

 

 

Advertisement