Advertisement

கரை காணா காதலே – 12

அவர்கள் அழைக்கும் தோரணையிலேயே, அவர்கள் சீனியர் என்பதை மஹதியும், நிமிஷாவும் அறிந்து கொண்டனர்… உடனே இருவரையும் ஒரு பயம் கலந்த படபடப்பு தொற்றிக் கொண்டது..

அவர்கள் ராகிங் செய்ய தான் அழைத்திருந்தனர்… ராகிங் இன்றளவில் கல்லூரிகளில் தடை செய்யப்பாட்டு இருந்தாலும், ஒரு சில கல்லூரிகளிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன…

விளையாட்டாய் செய்வது சில சமயங்களில் வினையாய் முடிந்து விடுகிறதே…

“ஹேய் மஹதி, அவங்க சீனியர் பசங்கன்னு நினைக்கிறேன், ராகிங் பண்ண தான் கூப்பிடுறாங்கன்னு நினைக்கிறேன், இப்போ என்ன செய்றது, அங்க போகவா?? இல்ல வேணாமா??” சிறிது பயத்துடன் மெல்லிய குரலில் மஹதியிடம் கேட்டாள்..

அவள் கேட்டதும் மஹதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை, “அடிப்பாவி அவங்க கூப்பிட்டதுமே நடக்க ஆரம்பிச்சு பாதி தூரமே வந்தாச்சு இப்போ  போய் இந்த கேள்வியை கேக்குறியே?? என்ன ஆச்சு உனக்கு??? சரி வா.. என்ன தான் பண்ணுவாங்கன்னு பாத்துடலாம்..” சிறிது தைரியத்தை வரவளைத்தவள் அவர்களை நோக்கி முன்னேறினர்..

மஹதி சொன்னதை கேட்டதும் தான் தன் நிலை கருதி, தலையில் அடித்து கொண்டாள் நிமி..

இருவரும் மெல்லிய குரலில் பேசியவாறே சீனியர்ஸ் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்..

“ஹேய் கேர்ள்ஸ் பிரெஷர்ஷா, எந்த டிப்பார்ட்மெண்ட்..” சீனியர் கூட்டத்தில் இருந்த ஒருவன் முதலாய் முந்திக்கொண்டு கேள்வி கேட்டான்..

“எஸ் சீனியர்ஸ், B.E பர்ஸ்ட் இயர் மெக்கானிகல்..”  என்றாள் நிமிஷா..

“மெக்கனிக்கலா…”  சிறிது ஆச்சர்யத்துடன் வினவினர் அக்கூட்டத்தினர்..

“எஸ் சீனியர் மெக் டிபார்ட்மெண்ட் தான்…” என்றாள் மஹதி..

அவள் பதிலை கேட்டதும், அக்கும்பலில் இருந்த அனைவரும் ஓஹ்ஹூ என்று ஆரவாரம் எழுப்பினர்..

அவர்களை மஹதியும், நிமிஷாவும் புரியாத பார்வையை பார்த்து கொண்டிருந்தனர்..

அவர்களின் முகத்தை பார்த்த அக்கூட்டத்தில் இருந்த ஒருவன், “அது ஒண்ணும் இல்ல ஜூனியர்ஸ் நாங்களும் மெக் டிபார்ட்மெண்ட் தான், அண்ட் இத்தனை வருஷத்தில் மெக் டிப்பார்ட்மெண்ட்ல எந்த பொண்ணுங்களும் இல்ல, இந்த இயர்ல இருந்து அந்த குறையும் தீர்ந்து போச்சு…” என்று சிரித்தபடியே சொல்லிக் கொண்டிருந்தான்…

அவனை தொடர்ந்த ஒருவன் “ பின்ன  எத்தனை நாளைக்கு தான் மத்த டிப்பார்ட்மெண்ட் பொண்ணுங்களையே சைட் அடிச்சுட்டு இருக்கிறது, இப்போ தான் சேம் டிப்பார்ட்மெண்ட்ல வந்துட்டிங்கல, அந்த குதூகலம் தான்..” சொன்னவனுடன் மற்றவர்களும் சேர்ந்து ஆர்ப்பரித்தனர்..

அவர்கள் சொன்னதை கேட்ட இருவரும், கல்லாய் சமைந்து நின்றிருந்தனர், முகத்திலும் சிறிது கலவரமே!!!!!

பெண்கள் என்றாலே பொறியியலில் கணினி சார்ந்த  படிப்பு சுலபம் என்று ஆரம்ப காலத்தில் இருந்தது.. மெக்கனிக்கல் துறை என்பது  பெண்களுக்கான கடினமான துறையாக பார்க்கப்படுகிறது… மெஷின்ஸ் உடன் போராடுவது ஆண்களுக்கு மட்டுமே சரிப்படும் என்ற நிலை மாறி இப்போது பெண்களும் இந்த மாதிரி கடினமான துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர்..

மஹதி தமிழ்செல்விக்கு தொழில் உதவியாக இருக்கும்  என்று இந்த துறையை தேர்ந்தெடுத்தாள்… தமிழ், கமலாவதி கூட வேறு துறை எடுத்து படி என்று சொன்ன போது கூட இவள் தான் பிடிவாதமாக இந்த துறை தான் வேண்டும் என்று எடுத்திருந்தாள்…

அதே போல் நிமிஷாவும் அவளது குடும்ப தொழிலும் மேசினேரி எக்ஸ்போர்ட்ஸ் தான்…அவளது அப்பா, அண்ணன் என அனைவரும் இந்த தொழில் இருப்பதால் இவளும் அதற்காகவே தேர்ந்தெடுத்து இருந்தாள்…

ஆனால் இவர்களை கண்டதும் அந்த சீனியர் மாணவர்கள்  சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் சிறிது பயம் வந்ததென்னவோ உண்மை தான்..

தூரத்தில் பிரின்சிபல் வருவதை பார்த்த அந்த மாணவர்கள் இருவரையும் நோக்கி “ஓகே ஈவ்னிங் ப்ரெஷ்ஷர்ஷ் பார்ட்டில பாக்கலாம், நவ் யூ மே கோ..” என்று சொல்லி விட்டு இவர்களின் பதிலுக்கு காத்திராமல் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஓடி விட்டனர்…

பின்னே பிரின்சிபல் வந்தால் இந்த பெண்கள் முன்னாடி மண்டகப்படி வாங்க வேண்டுமே!!! அதான் இந்த ஓட்டம்…

“இப்போ பண்ணினது பத்தாதுன்னு இன்னும் ப்ரெஷ்ஷர்ஷ் பார்ட்டில வேற இருக்கோ, கடவுளே முடியலை..”  என்று நிமிஷா வாய் விட்டே புலம்பிவிட்டாள்…

“பச் என்ன தான் நடக்கும்ன்னு பத்திரலாம் நிமி… நீ வா கிளாஸ்க்கு டைம் ஆச்சு போகலாம்..” என்று  இருவரும் அவர்களது கிளாஸ் ரூம் சென்றனர்…

ப்ரெஷ்ஷர்ஷ் பார்ட்டியில் நடக்க போகும் விபரீதம் தெரியாமல் வாய் விட்டு விட்டாள் மஹதி!!!!!

இருவரும் கிளாஸ் ரூம் சென்றதும் அங்கும் அதிர்ச்சியே….

ஆம், அவர்கள் கிளாஸில் மொத்தம் ஐந்து பெண்களும், அறுபத்தி ஐந்து ஆண்களும் இருந்தனர்..

மஹதியும், நிமிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்…

சீனியர்ஸ் சொன்னதன் அர்த்தம் இப்போது தான் விளங்கியது…

அன்றைய முதல் நாள் கிளாஸ் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் அறிமுகம் மட்டும் செய்து கொண்டு சென்று விட்டனர்… மதிய உணவு இடைவேளைக்கு பின் ப்ரெஷ்ஷர்ஷ் பார்ட்டி தொடங்கியது…

முதலில் லெக்சரர் , பிரின்சிபல் அறிமுகவுரை கொடுக்கப்பட்டது.. அதை தொடர்ந்து கல்லூரியின் விதிகள் சொல்லப்பட்டது.. இப்படியாக ஓரளவு கல்லுரியை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டதும் பிரின்சிபல், லெக்சரர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்..

அதற்குள் சீனியர் மாணவர்கள் தத்தமது டிபார்ட்மெண்ட் மாணவர்களுக்கு  வெல்கம் சாங் பாடி ஆரவாரமாய் வரவேற்றனர்…

அனைத்து டிப்பார்ட்மெண்ட் மாணவர்களும் இணைந்து சிறிதாய் ராக்கிங் செய்கிறோம் என்ற பெயரில் கலாட்டா செய்ய ஆரம்பித்திருந்தனர்..

அதாவது ஒரு பௌலில் சாங் படுவது, டான்ஸ் ஆடுவது, கிரௌண்ட் சுற்றி ஓடுவது, லவ் ப்ரொபோஸ் செய்வது, ரோஜா கொடுப்பது என்று பல விதமான பல செயல்களை விளையாட்டு என்று எழுதி போட்டு இருந்தனர்..

அதில் உள்ளவைகளை அந்த அந்த பேப்பர் எடுத்தவர்கள் செய்ய வேண்டும்.. அதே போலவே ஒவ்வொருவராய் செய்து கொண்டே வர நிமிஷா முறையும் வந்தது..

அதில் ‘சீனியர் ஒருவருக்கு ரோஜா கொடுத்து காதலை சொல்ல வேண்டும்..’ என்று வந்திருந்தது.. அதை கண்டதும் அதிர்ந்தவள்

“இல்ல சீனியர் என்னால பண்ண முடியாது, இது வேணமே வேற ஏதாவது ஆப்ஷன் பண்றேனே..”  என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்..

அதை கேட்ட சீனியர் மாணவர்களோ யார் யாருக்கோ என்ன வருகிறதோ, அதை மட்டுமே செய்ய வேண்டும், அதுவே விதிமுறை என்று இல்லாத சட்டம் பேசி அவளை செய்ய சொல்லி  கத்திக்கொண்டிருந்தனர்…

அதில் கோவமுற்றவள் ‘ச்சை’ என்றவாறே, சுற்றிலும்  பார்த்தாள், குடுக்கிறது தான் குடுக்க போறோம், ஒரு நல்ல பிகர்க்கு குடுக்கலாமே!!! என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த தேடல்…

சுற்றிலும் பார்த்தவள் சிறிது தூரமாய் அமர்ந்து, காற்றில் கலைந்த கேசங்களை தன் கைகளால் ஒதுக்கி கொண்டே சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டிருந்த பிரபா என்ற பிரபாகரன் அவள் கண்களில் பட்டான்..

“ஹப்பா என்ன பிகர்டா சாமி..” என்று விழி விரித்தவள் அவனை நோக்கி நடந்தாள்…

அவள் அவனை நோக்கி நடந்து செல்கையிலேயே, பிரபாவை நோக்கி தான் செல்கிறாள் என்று அறிந்ததும் அந்த கூட்டத்திலேயே அப்படி ஒரு அமைதி நிறைந்திருந்தது…. கூடவே அனைவரின் கண்களிலும் பயம்….

அதில் இருந்த ஒருவன் “டேய் அவ அந்த மூவரணிக்கு தான்டா போறா… ஆனா ஒரு நல்ல விஷயம்  அவனுங்க ரெண்டு பேரும் இங்க இல்ல, ஆனா பிரபா இதை எப்படி எடுத்துப்பான்ன்னு தெரியலையேடா??? சீக்கிரமா அவளை கூப்பிடுடா..” என்று  சிறிது பதற்றத்துடனே அவன் நண்பனிடம் சொல்லி கொண்டிருந்தான்..

ஆனால் அதற்குள்ளாகவே நிமிஷா, பிரபா இருந்த இடத்திற்கு வந்திருந்தாள்… அவன் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு  கொண்டிருந்ததால் அவளை கவனிக்கவில்லை… ஆனால் அவன் நண்பர்கள் பிரபா அருகில் ஒரு பெண் வந்ததும் எல்லோருடைய கண்களும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தன.. அதை கவனித்த பிரபா “அப்படி என்னத்ததான் பாத்துட்டு இருக்கானுங்க என்றவாறே திரும்பி பார்த்தான்….”

அடர் ரோஜா வண்ண அனார்கலி சுடிதாரில், தோல் வரை உள்ள கூந்தலை ப்ரீ ஹேர் ஸ்டைலில் விட்டிருந்தாள்… மாசு மறுவற்ற  பால்வண்ண நிறத்தில் தன் பக்கத்தில் நின்று இருந்த பெண்ணை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்தவனின் கண்கள் அவள் கையில் இருந்த ரோஜாவிற்கு சென்றது…

அதை கண்டவனது முகம் செந்தணலில் வாட்டி எடுத்தது போல சிவந்தது… மேலும் அவளை எரித்து விடுவது போல பார்த்து கொண்டிருந்தான்…

“என்னது இது ??”

எச்சில் கூட்டி விழுங்கிய நிமிஷா, அவனிடத்தில் எதுவும் சொல்லாமல் “சீனியர்  ஐ லவ் யூ” என்று சொல்லி முடிக்கும் முன்பே அவனின் கரங்கள் அவளது கன்னத்தில் இறங்கியது…

ஒரு நிமிடம் மூளை கலங்கினார் போல உணர்ந்தாள் நிமிஷா… அவன் கரங்களில் அடி வாங்கியதை விட இப்படி அனைவரின் முன்னிலையில் அடி வாங்கியது அவளுக்கு மிகுந்த அவமானமாக உணர்ந்தாள்… வேறு எதையும் யோசிக்க அவளது மனம் இடம் கொடுக்கவில்லை…. முகத்தை மூடிக்கொண்டு ஓடி விட்டாள்…

இதை எதையும் அறியாத மஹதி அப்போது தான் அந்த அரங்கிற்குள் வந்திருந்தாள்…

அவள் லெக்சரர், பிரின்சிபல் அறிமுகம் முடிந்தவுடைனையே தன் கல்லூரி பீஸ் சம்பந்தமாக கல்லூரி வளாகத்திலேயே அமைந்து இருந்த வங்கிக்கு சென்று இருந்ததால் இங்கு நடைபெற்ற விஷயம் அவளுக்கு தெரியவே இல்லை….

பிரபாவும் அங்கு இருந்த சீனியர் பசங்களை முறைத்து விட்டு, அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான்…

நடந்தது எதுவும் போதாது என்பது போல, மறுபடியும் அவர்களது விளையாட்டை ஆரம்பித்திருந்தனர்…

அவர்களை பொறுத்தவரை இது ஒரு விளையாட்டு அவ்வளவே!!!!! ஏனென்றால் நிமிஷாவை  யாருக்கு வேண்டுமாலும் ரோஜா கொடுக்கலாம் என்று சொன்னோம் ஆனால் அவள் பிரபாவை தேடி சென்று கொடுத்து அடி வாங்கியதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும் என்றவாறே அவர்களது எண்ணம் இருந்தது…

சில நிமிடங்கள் அமைதியாய் கழிந்தது, மறுபடியும் அதே ஆரவாரம் நடைபெற துவங்கிவிட்டது…இந்த முறையும் அதே போலவே கிண்டல்,கேலியாய் நகர்ந்து கொண்டிருந்த விளையாட்டு கடைசியில் மஹதியிடம் வந்து நின்றது வினையாய்…

அவளது முறை வந்ததும், அவசரமாய்  அவளுக்கு என்ன ஆக்டிவிட்டி என்பதை பார்த்தவளது மனம் சுணங்கி போயிற்று..

அங்கு வைக்கப்பட்டிருந்த டீ / காபியை அனைவருக்கும் செர்வ் செய்ய வேண்டும் என்பதே… அதையும் கூவி கூவி ஏதோ டீ விற்பவர் மாதிரி கொடுக்க வேண்டும்..

அதை பார்த்ததுமே அவளுக்கு கண் சிறிதாய் கலங்கியது.. இது வரை வீட்டில் கூட அவள் இந்த மாதிரி வேலைகள் செய்தது இல்ல.. சரி சும்மா டீ குடுக்கிறது தானே என்று குடுத்தாலும் அது செல்லாது என்று கூவி கூவி தான் குடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டனர்…

அவள் அமைதியாய் அங்கு காலியாய் இருந்த கப்புகளை நிறைக்க ஆரம்பித்தாள்….

கண்ணீர் விழிகளை திரை இட்டு இருந்ததால், டீ நிறைந்தது கூட தெரியாமல் பிடித்து கொண்டிருந்தாள்.. சட்டென சூடு பட்டதும் தான் நினைவில் வந்தது போல கையில் இருந்த கப்பை எறிந்தாள்…

அவள் எதிர்பாராமல் எரிந்ததில், அங்கே நின்றிருந்த சீனியர் ஒரு அடாவடி பையனின் முகத்திலேயே தெரித்தது….

சூடுபட்டதில் அவனுமே  கத்தி இருந்தான்…. அவனுக்கு முகத்தில் பட்டதுமே அருகில் இருந்தவர்கள் அவன் முகம் கழுவ தண்ணீர் கொடுத்தனர்…. முகத்தினில் தண்ணீர் பட்டது சிறிது ஆசுவாசமாக உணர்ந்தான் அவன்…. ஆனால் அவனுக்குள்ளும் கோபம் வெறியை இருந்தது…

“எவ்வளோ தைரியம் இருந்தா என் மேலயே டீ கொட்டுவ”

“ஹய்யோ இல்ல நான் வேணும்ன்னு செய்ய சீனியர், தீடிரென டீ என் கைல கொட்டிடிடுச்சு அதனால தான் தெரியாம நான் வீசிட்டேன், அது உங்க முகத்தில விழுந்திடிச்சு…. இதை நான் வேணும்ன்னு செய்யவே இல்ல சீனியர்..” தடுமாறிய குரலில், பயம் நிறைந்த முகத்துடனே அவனிடம் சொல்லி முடித்தாள்..

ஆனால் அவளின் சமாதான பேச்சை அவன் காது கொடுத்து கேட்க வேண்டுமே!!!!!
அவன் தன் பக்கத்தில் இருந்தவனிடம்  “டேய் போய் டீ எடுத்திட்டு வா…”

“டேய் ப்ரெஷ்ஷர்ஷ் பார்ட்டில பிரச்னை வேணாமே ..”

“நான் சொன்னதை மட்டும் செய்..” அவனது இந்த குரலில் நீ  செய்யா விட்டால் நானே செய்வேன் என்ற அறிவிப்பும் ஒளிந்திருந்தது…

இவ்வளவு சொல்லியும் அவன் செய்யாமல் இருக்க அவன் என்ன முட்டாளா ????

அவன் சொன்ன மாதிரியே, டீயை பிடித்து அவன் கைகளில் கொடுத்திருந்தான்…

“இப்போ நான் என்ன செய்ய போறேன் தெரியுமா ???? இந்த டீயை உன் முகத்திலே கொட்ட போறேன்..அப்போ தானே உனக்கு அந்த வழி  தெரியும்..அப்போ தானே இந்த மாதிரி அலட்சியமா இருக்க மாட்ட??? என்றவனது குரலில் ரௌத்திரம் தெரித்தது….

அவன் சொன்னதை கேட்டதுமே, அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது…. மஹதிக்கு கூடுதலாக பயத்தில் கண்ணீர் வழிந்தது….

அவள் பயத்தில் செய்வது அறியாது நின்று கொண்டே இருக்க….

இவனோ சடாரென, அவள் மேல் கொட்டுவதற்காக கையை உயர்த்தினான்..

அப்போது தான் அங்கே அந்த மூவரணி வந்து சேர்ந்தது…

வேதாந்த் – சஞ்சீவ் – பிரபா

அவர்களை கண்டதும் அவன் கை அவனை கேட்காமலேயே கீழே விழுந்தது….

வேதாந்த் – அவனே அந்த கல்லூரியின் ரேப்ரன்செடிவ்..

ஏற்கனவே பிரபா வந்து “அங்கே ராகிங் அளவுக்கு மீறி நடந்துட்டு இருக்கு, நானே கோவத்திலே ஒரு பொன்னை அறைஞ்சிட்டேன்..” என்றதுமே அவனுக்கு கண்முன் தெரியாமல் கோவம் வந்தது…

“ஏன்டா அவனுங்க தான் ராகிங் பண்றாங்கன்னு தெரியுது இல்ல.. பின்னே ஏன் அந்த பொண்ணை அறைஞ்சு இருக்க….” என்றவன் கோவத்தில்,

“வா அந்த பொண்ணுகிட்டே சாரி கேளு, என்று சொல்லியே அவனை அழைத்து வந்திருந்தான்…

இங்கே வந்து பார்த்தால், பிரபா சொன்னதை விட அதிகமாய் போய் கொண்டிருந்தது ராகிங்…

எல்லோரையும் கோவத்துடனே பார்த்தவன், சற்றும் அதில் குறையாமல் “ப்ரெஷ்ஷர்ஷ் பார்ட்டி நாங்க சாதாரணமா தான் ராகிங் பண்ணுவோம்ன்னு சொல்லி, என்னை ப்ரின்சி கிட்டே பேச சொல்லி பர்மிசன் வாங்கி குடுக்க சொன்னிங்கன்னு வாங்கி குடுத்தா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க????

அவங்க எவ்வளவு கனவுகளோட இன்னிக்கு இந்த காலேஜ்க்கு அடியெடுத்து வச்சு இருப்பாங்க.. ஆனா நீங்க ஒரு வரைமுறை இல்லாம ராகிங் என்ற பேர்ல எவ்வளவு சீப்பா நடந்துட்டு இருக்கீங்க???

நாளைக்கே அவங்க மனசொடைஞ்சு ஏதாவது பண்ணிட்டங்கன்னா யார் பதில் சொல்லுவா???

நீங்க விளையாட்டா பண்ணிட்டு இருக்க ஒவ்வொரு விஷயத்திற்கும் நான் தான் கை கட்டி நின்னு பதில் சொல்லிட்டு இருக்கேன்….நான் நினைச்சா எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்..ஆனா அப்படி செய்ய முடியுறது இல்ல…ஏன்னா உங்க எதிர்காலத்தை நினைச்சு தான்…ஆனா உங்களுக்கு நான் குடுக்கிற சுதந்திரத்தை நீங்க ரொம்பவே அட்வான்டேஜா எடுத்துகிரிங்க….

இனிமே இந்த மாதிரி எந்த விஷயத்திற்கும் என்கிட்டே பெர்மிஷன் கேட்டு தர சொல்லி வராதீங்க….நவ் ஆல் ஆப் யூ கோ டூ யுவர் கிளாஸஸ்..” கண்மண் தெரியாத கோவத்தில் அனைவரையும் திட்டி கொண்டிருந்தான்…

அவன் பேசியதிலிருந்தே அவனது கோவத்தின் அளவு புரிந்திருந்தது அங்கு இருந்த அனைவருக்கும்….அதனால் யாரும் எதுவும் சொல்லாமல் தலையை தொங்க போட்ட படியே அவ்வரங்கத்தை விட்டு நகர்ந்தனர்…

வேதாந்த் மஹதிக்கு முன்புறமாக, அவளுக்கு முதுகை காட்டியபடி நின்றிருந்ததால் அவன் இன்னும் மஹதியை பார்க்கவில்லை….

பிரபாவும் எதோ சிந்தனையில் இருந்ததால் அவளை பார்க்கவில்லை..

ஆனால் சஞ்சீவ் மட்டும் அவளையே பார்த்து கொண்டிருந்தான்… கண்களில் சிறிது சுவாரசியம்…. வேதாந்த் பிரபாவை திட்டுவதற்காக திரும்பியவன் அப்போது தான் கவனித்தான் மஹதியை….

அவளது கண்ணீர் நிரம்பிய விழிகளை கண்டதுமே அவனுள் ஓர் அதிர்ச்சி…

ஒரு வேலை இது அவளாக  இருக்குமோ??????

இதே போன்ற ஒரு தோற்றத்தில் தானே அவளை முதல் முறையாக பார்த்தேன்….ஆனால் இரட்டை ஜடை போட்டு, முகத்தை ஸ்கார்ப்பால் மறைத்து விழிகள் மட்டும் தெரியுமாறு வைத்திருந்தாள்….

அன்று இதே விழிகளில்….இன்று நிரம்பிய அதே கண்ணீர்….

அதே விழிகள் தான் தான்….

இது அவளே தான்…

தனக்குள்ளாகவே முடிவெடுத்து கொண்டான்…

கண்களில் காதலை நிரப்பிய வேதாந்த்…..

பார்த்த முதல் பார்வையிலேயே சுவாரசியம் பொங்க பார்க்கும் சஞ்சீவ்….

 

Advertisement