Advertisement

                    கரை காணா காதலே – 10
அந்த கல்யாண மண்டபம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளாலும், அலங்காரங்களினாலும், ஜொலித்து கொண்டிருந்தது.. மணமேடையில் இல்லாத பூ வகைகள்களே இல்லை.. அனைத்தும் மேடையை அலங்கரித்து இருந்தது…
ஆம், ரமேஷ் – ப்ரியாவின் திருமண நாள் தான்..
அந்த மண்டபம் முழுவதுமே ஜனத்திரளில் நிறைந்து கொண்டிருந்தது.. ப்ரியா வீட்டில் முதல் கல்யாணம், ரமேஷ் வீட்டினரின் கடைசி கல்யாணம் ஆதலால் இந்த திருமணத்தை மிக விமர்சையாக நடந்து கொண்டிருந்தது..
தமிழ் செல்வியும், கமலாவதியும், அவர்கள் உறவினர்களை வரவேற்று கொண்டிருந்தனர். மஹதி வாயிலில் நின்று வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தாள்..
ரமேஷ் மேடையில் புது மாப்பிளைக்கு உரிய கம்பீர தோரணையில், நண்பர்களின் கேலியில் சிறிது முகம் சிவந்த தோற்றத்தில் அமர்ந்திருந்தான்..
ப்ரியா புது பெண்ணுக்கே உரிய முகம் சிவத்தலிலும், வெட்கத்திலும், சிறிது படபடப்புடனும் இருந்தாள்.. என்னதான் ரமேஷிடம் பேசி பழகி இருந்தாலும், ஏனோ மேடையில் அவனருகில் அமரும்போது சிறிது பயமாகவும், கூச்சமாக இருந்தது அவளுக்கு… ஒருவேளை அத்தனை பேர் முன்னிலையில் அமர்வதால் வந்ததாக கூட இருக்கலாம்!!!!..
திருமணம் என்பது ஒன்றும் அவ்வளவு பயத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் கிடையாது. வாழ்க்கையில் ஏற்படுத்தக் கூடிய ஒரு மாற்றம் மட்டுமே. கண்டிப்பாக தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடந்து வரும் பாதையே இது. திருமணம் என்றாலே ஒரு அர்பணிப்பு உறவுக்குள் அடியெடுத்து வைப்பது தானே.
அதை போல் திருமண பந்தத்தில் பகிர்தல் உணர்வும் மிக அவசியம்… தன் பகிர்தலை, தன் துணையும் பகிர வேண்டும்.. இருவருமே ஒருவருக்கொருவர் வெளிப்படையாக இருக்க வேண்டும்.. அப்போது தான் அந்த திருமண வாழ்வில் வெற்றி பெற முடியும்..
முஹுர்த்த நேரம் நெருங்கி கொண்டிருந்தது.. உறவினர்களும் வந்து கொண்டே இருந்தனர்.. மஹதி எல்லாரையும் வரவேற்றாள், அவளின் பொறுப்பு கடமை உணர்ந்து அனைத்தையும் முன் நின்றே எல்லாம் செய்தாள்.. தங்கையின் திருமணம் என்ற மகிழ்வு மட்டுமே அவள் முகத்தினில் இருக்க, அவளை தான் எல்லோரும் ஆச்சர்ய பார்வை பார்த்தனர்.. அந்த பார்வை தான் அவளை நெக்குறுக செய்து கொண்டிருந்தது..
ஒருமாதிரி உடலையும் உள்ளதையும் துளைக்கும் பார்வை.. அவள் எங்கு சென்றாலும்.. என்ன செய்தாலும்.. அவளின் பாவனைகள், செயல்கள் எல்லாம் ஒவ்வொன்றையும் அனைவருமே ஆராய்ந்துகொண்டு தான் இருந்தனர்….
அந்த ஒருவிசயம் தான் மஹதியின் இயல்பை பாதிக்கச் செய்ய, கொஞ்சம் திணறினாலும் வெளியில் காட்டாமல் இருந்துகொண்டாள்..
சரியாய் முஹுர்த்த நேரத்திற்கு முன் பத்து நிமிட இடைவெளியில் வேதாந்த் வந்து சேர்ந்தான்..
அவனை பொறுத்த வரையிலும் இதுவே லேட்.. பின்னே சீக்கிரமாய்  வந்திருந்தால் அவளை கிளம்பும் நேரம் வரை சைட் அடித்து கொண்டிருக்கலாமே!!!
அவளின் அப்பா, அம்மா கிளம்பவே லேட்.. அதனாலயே இவனும் லேட்..
ஒரு வேளை  லேட்டா பிக் அப் பண்ணினாலும், லேட்டஸ்ட்டா பிக் அப் பண்ணுவனா இருக்கும்!!!
அவள் வாயிலில் நின்று வரவேற்று கொண்டிருப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை…
அவன் செலக்ட் செய்த அந்த மயில் கழுத்து நிற புடவையில், சிங்கிள்  ப்ளீட் முறையில் விட்டிருந்தாள், அதற்கேற்றார் போல் நகைகளுடன், தேறி சமந்தா ஹேர் ஸ்டைலில், தலை நிறைய மணம் கமழும் மல்லிகையை சூடி இருந்தவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு…
அவனுமே, அவள் இந்த சேலை தான் அணிவாள் என்று நினைத்து அதற்க்கு மேட்ச்சாக அதே நிறத்தில் ஷர்ட் அணிந்திருந்தான்… இப்போது அவளை கண்டதும் அவனுள் ஒரு மலர்ச்சி..
குடும்பம் முழுவதும் உள்ளே நுழைந்தனர்.. மஹதி இவர்களை எதிர்பார்க்கவே இல்லை என்று அவள் முகத்திலிருந்தே தெரிந்தது…
ரமேஷும் அழைத்திருப்பான், தன் விட்டில் இருந்தும் அழைத்திருப்பார்கள் என்றும் தெரியும்.. ஆனாலும் ஏனோ அவனை கண்டதும் பயம், படபடப்பு… ஒரு திடுக்கிடல்…
அவர்கள் அருகில் வரவுமே அவள் பார்வையை வேறு புறம் திருப்பினாள், அவள் பார்க்க மாட்டாளா என்று நினைத்த இரு ஜீவன்களில்  ஒன்று வேதாந்த் என்றால், இன்னொன்று சத்யா..
ஆம், சத்யாவும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தார்.. அவர்களை பார்ப்பாள் என்று எதிர்பார்த்தவர் அவள் பார்வை வேறு புறம் திரும்பியதை கண்டு பேரு மூச்சு ஒன்றை வெளியிட்டார்…
வேதாந்திற்கு தான் பெரும் வேதனையாகி போய்விட்டது… எப்போதும் போல் எதாவது கோவமாக வாய் கொடுத்தால் கூட பதில் பேசும் முறையில் பேசிவிடலாம், ஆனால் அவள் இப்படி ஒதுங்குவது கண்டு அவனுள் தான் வேதனையில் இதயம் பொங்கியது…
அவளை பார்த்தபடியே அவனும் சென்று விட்டான்.. அவளும் முஹுர்த்த நேரம் நெருங்குவதை உணர்ந்து மணமேடை அருகே சென்றாள்..
திருமணத்திற்க்காண சடங்குகளை செய்து கொண்டிருந்தனர் ரமேஷும் ப்ரியாவும்..
அந்த நேரத்தில் மஹதி அங்கே வரவும், அங்கிருந்த உறவினர்களில் ஒரு சிலர் முகம் சுளித்தனர்.. அதை தமிழ் செல்வி, கமலாவதி, ப்ரியா மூவருமே கண்டு கொண்டனர்..
“ஏன் மஹதி, இங்க என்ன பண்ற??? கீழே  போய் வந்திருக்கவன்களுக்கு என்ன வேணும்ன்னு கவனிக்கலாமே??” என்று அவளை அங்கிருந்து அப்புற படுத்த நினைத்தனர்.
“அதுக்கு எல்லாம் ஆளுங்க இருக்காங்க, அவ எங்கேயும் போக மாட்டா, கல்யாணம் முடியற வரை இங்கே தான் இருப்பா…” என்று படாரென்று பதில் கொடுத்தவள் ப்ரியா தான்..
இதை கேட்ட அந்த ஆறு ஜோடி கண்களும் ஆச்சர்யத்தில் விரிந்தன… நம் ப்ரியாவா இது!!!!.. அவளா இந்த பதிலை சொன்னாள்.. இன்னுமுமே தமிழ், மஹதி, கமலாவதி மூவருக்கும் ஆச்சர்யம் போகவில்லை…
பின்னே அக்கா, தங்கை உறவு என்ன அவ்வளவு எளிதா என்ன???
தோள் கொடுக்கும் தோழியாய், மெய் அன்பு கொடுக்கும் தாயாய் இருந்தவள் தானே.. அவள் தவறுகள் செய்தாலும் தண்டனைகள் தராமல், தரமான  போதனைகளை வழங்கியவள் தானே..
நிலவொளியின் நிறம் சிறிது மாறுவது போல, அவள் மீது இருந்த அன்பு சிறிது மாறி விட்டது.. ஆனால் அது நீண்டு கொண்டேவா சென்று விடும்… முழு நிலவானால் எப்படி  ஜொலிக்குமோ அப்படியே ஒரு நாளும் அவள் அன்பு ஜொலிக்கத்தானே போகிறது..
இதை எல்லாத்தையும் விட தான் என்ன வேண்டுமானாலும் சொல்லி கொள்ளலாம் தன் அக்காவை, ஆனால் மற்றவர்கள் அவமதிக்க அவள் எப்படி அனுமதிக்க முடியும்.. அதுவும் அவள் திருமணத்தில்..
அவள் பதில் மஹதியின் விழிகளில் நீர் திரண்டது.. பெண் பார்க்கும் சம்பவத்திலேயே அவ்வாறு சொன்னவள், இதில் என்ன சொல்ல போகிறாளோ என்று நினைத்து கொண்டே தான் இருந்தாள். சொல்ல போனால் தமிழ் மற்றும் கமலாவதிக்குமே இந்த கவலை மனதை அரித்து கொண்டு தான் இருந்தது…
எப்போது ப்ரியாவே அவளை விட்டு கொடுக்க வில்லையோ, அப்போதே அவர்களுக்கும் இந்த கவலை மனதை விட்டு அகன்றது..
அதற்குள் முஹுர்த்த நேரம் வந்து விட, ரமேஷும் ப்ரியாவின் கழுத்தில் பொன் மங்கள நான் கட்டினான்…
இருவரது மனமும், செயலிலும், வாக்கிலும், ஒன்றுபட்டு  இருப்பதற்காக மூன்று முடிச்சிட்டான்…
அடுத்து ஹோமத்தை சுற்றி வர அவளின் கையை பற்றினான்.. அப்போது  “நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப்பிடிகிறேன்…” என்று உறுதியாய் கூறி அவளை பார்த்திருந்தான்.. அதில் தான் அத்துனை காதல் நிறைந்திருந்தது..
அதில் தான் அவள் முகத்தில் வெட்கத்தின், காதலின் என்று வானவில்லின் நிறங்கள் போல அத்தனை நிறங்களில் இருந்தது…
தாலி கட்டி முடித்ததும் பந்தி ஆரம்பிக்க பட்டது… சில பேர் அந்த பக்கம் நகர, மணமேடையில் மேலும் சடங்குகள் தொடர்ந்து கொண்டிருந்தது…
குடத்தில் மோதிரம் போட்டு எடுக்கும் சடங்கு நடந்து கொண்டிருந்தது… அதில் ப்ரியா ரமேஷிற்கு விட்டு கொடுப்பதும், அவன் இவளுக்கு விட்டு கொடுப்பதுமாய் இருந்தனர்.. ஆனால் ஒருவர் கூட அதை வெளியில் எடுக்கவில்லை..
உடன் இருந்த நண்பர்கள் பட்டாளம் தான் இவர்கள் கண்ணாமூச்சி ஆட்டம் தாங்கமால் “அட யாரவது ஒருத்தர் எடுத்து குடுக்கப்பா” எம்புட்டு நேரம் தான் நாங்களும் தெரியாத மாதிரியே நடிக்கிறது…” என்று கிண்டலில் இறங்கியிருந்தனர்…
அதை கேட்ட இருவர் முகத்திலுமே செம்மை படர்ந்திருந்தது… ஆனாலும் ரமேஷ் விட்டு கொடுத்தான், ப்ரியா வாங்கவே இல்லை.. ஒரு வழியாய் ரமேஷ் தான் அதை வெளியே எடுத்திருந்தான். அதை கண்டதும் அவன் பக்கத்து பட்டாளங்கள் கூச்சலில் மண்பத்தில் இருந்த அத்தனை பேரின் பார்வையும் அங்கேயே…
பின் மெதுவாய் “இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது நம்  வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதர்க்காகதானே இந்த விளையாட்டு… அதே போல் நானும் இருப்பேன்..” என்று அவளும் உறுதிமொழி கொடுத்தாள்..
அதை கேட்டவன், யாரையும் கவனத்தில் கொள்ளாது, அவளின் காலடியில் குனிந்து, முட்டிக்கு கீழே  கை கொடுத்து தூக்கி சுற்றினான்… அதில் தான் இருவருக்கும் எவ்வளவு சந்தோசம், காதல்… இது என்ன உணர்வென்று வரையறுக்க முடியா நிலை..
அதை பார்த்த பெற்றோர், உற்றோர் முகத்திலும் சந்தோசத்தின் சாயல்… இதை விட வேறு என்ன வேண்டும் பெற்றவர்களுக்கு.. அவர்கள் மக்களின் சந்தோசத்தை தவிர…
மஹதியும் விரிந்த புன்னகையுடன், மிகுந்த மகிழ்ச்சியுடனே பார்த்திருந்தாள்..
அதே நேரத்தில் வேதாந்தும் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
இந்த புன்னகையையும், மகிழ்ச்சியையும் பார்த்து எத்தனை நாட்கள் ஆகி விட்டது.. கல்லூரி காலத்தில் பார்த்தது..
தன்னால் தானே அந்த புன்னகையும், மகிழ்ச்சியும் இருக்கும் இடம் தெரியாமல் போனது என்று நினைக்க நினைக்க அவனுக்கு, அவன் மேலே கோவமும், ஆத்திரமும் வந்தது.. இதே வேறு யாரும் இதை செய்திருந்தால் அவன் சும்மா இருந்திருப்பனா???
ஆனால் தன்னையே தான் எதுவும் செய்ய முடியாதே.. பின் அவளை யார் தேற்றுவது???
அவளிடம் யார் மன்னிப்பு கேட்பது???
அவள் மீது தவறு இல்லை என்று, அவளை பற்றி தப்பாக நினைப்பவர்களுக்கு யார் சொல்வது..
மொத்தத்தில் அவளை திகட்ட திகட்ட யார் காதல் செய்வது, இந்த மகிழ்ச்சியை யார் நிரந்தரம் ஆக்குவது  என்று பலதரப்பட்ட யார் ஒளிந்திருந்தது…
இதற்க்கு எல்லாம் விடை…. அவன் மட்டுமே!!!!!!
மேடையில் நடந்து கொண்டிருந்தவை எல்லாம் பார்த்து கொண்டிருந்த சத்யா- குணா தம்பதிகளின் முகத்தில் சிறிது வேதனையின் சாயலே…
ரமேஷ் அவர்களுக்கு மகன் போலவே தான்… அவனுக்கு திருமணம் என்பதும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான்.. ஆனால் அதே வயதுடைய தங்கள் மகனுக்கு இன்னும் இது போல எந்த ஒரு நல்ல காரியமும் நடக்கவில்லையே என்ற வேதனையே….
சத்யா மஹதியையே பார்த்து கொண்டிருந்தார்..
முதல் முறையாய் அவளை வேண்டாம் என்று ஒதுக்கியதை தவறோ என்று நினைத்து கொண்டிருந்தார்!!!!!..
சில பல கலாட்டாக்கள் முடிந்து போட்டோ செஷன் ஆரம்பம் ஆகிருந்தது… மஹதி ப்ரியா அருகிலேயே இருந்தாள்..
வேதாந்த் தன் குடும்பத்தினரோடு மேடை ஏறினான்..
“வாங்கமா, வாங்கப்பா” என்று அவர்களை வரவேற்ற ரமேஷ், அவர்களில் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர் தம்பதிகள் இருவரும்… வேதாந்த் தன் அணைப்பின் மூலம் தன் வாழ்த்துக்களை தெரிவித்தான்..
“அடேய் இப்போ தான் எங்களை கண்ணுக்கு தெரிஞ்சதா??? இவ்வளவு நேரமும் ப்ரியா மட்டும் தானே உன் கண்ணுக்கு தெரிஞ்சு இருப்பா…” என்று அவனை கிண்டலடிக்கும் வேலையில் இறங்கி இருந்தான்…
“ஹா ஹா பாஸ், இது எல்லாம் வாழ்க்கைல ஒரு முறை வர்றது, சோ இந்த மொமென்ட்டை ஹாப்பியா கொண்டு போகலைனா நாளைக்கு வரலாறு என்னை தப்பா பேசாது???” என்று ரமேஷும் கிண்டல் தொனியிலேயே பதிலளித்தான்…
“சரி சரி இந்தா  என் கிப்ட்…” என்று அவள் கைகளில் ஒரு கவரை திணித்தான், வேதாந்த்..
அதை அப்போதே பிரித்து பார்த்த, ரமேஷின் விழிகளிலும் லேசாக கண்ணீர் படலம்…
“பாஸ்….!!!!” என்று சொல்லி அவனை இறுக அணைத்திருந்தான்…
வேதாந்த், ரமேஷிற்காய் ஒரு புதிய தொழிற்சாலையை உருவாக்கி கொடுத்திருந்தான்.. அதுவும் அவனுக்கு பிடித்தமான துறையிலேயே.. மேலும் அவர்கள் இருவரும் தேனிலவு செல்லவென்று  மாலத்தீவிற்கான விமான டிக்கெட்கள்.
இந்த மனம் எத்தனை பேருக்கு வரும்… தன் கம்பெனி விட்டு அவன் சென்றால் ஒரு நல்ல நண்பன், தொழிலாளி அவனை விட்டு செல்வான் தான், ஆனால் அவனின் கனவு அப்படியே நின்று விடுமே…
ரமேஷிற்கு ரொம்ப நாட்களாய் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை தான், ஆனால் அதற்காக வேதாந்தை விட்டு செல்ல வேண்டுமே… அதனால் அந்த நினைப்பையே ஒத்தி வைத்திருந்தான்..
அதனாலையே இந்த முடிவு எடுத்திருந்தான் வேதாந்த்.. அதாவது அந்த தொழிற்சாலை இவனுடையது தான் ஆனால் அதனின் மேனேஜின்க் டைரக்டர் ரமேஷ்.. அது போல செய்து இருந்தான்…
அந்த நட்பில் தான் துளி கலக்கமும் இல்லை..
மேலும் சில பல பேச்சுக்களுக்கு பிறகு போட்டோ எடுக்க நின்றனர்.. அதில் ரமேஷிற்கு அருகில் சத்யா, குணா, வேதாந்த் மூவரும் நின்றனர் ஆனால் போட்டோ கிராபரோ,
“சார் பிரேம் சரியா வரல, சோ நீங்க இங்க பொண்ணுகிட்டே நில்லுங்க…”  என்று சொன்னார்..
அவரை எரிப்பது போன்ற பார்வை பார்த்தாள் மஹதி.. ஏனென்றால் அவள் தானே ப்ரியா அருகில் அவள் உதவிக்காக இருந்தாள். ப்ரியாவின் வேறு சில தோழிகள் சாப்பிட, அரட்டை அடிக்க என்று சென்று விட்டனர்…
இதை கேட்ட வேதாந்த், ரெக்கை இன்றி வானில் பறந்தான்.. அவன் மட்டும் நகர்ந்து மஹதி பக்கத்தில் நின்றான்.. அவன் வருவதை கண்ட மஹதி வேகமாய்  கீழே இறங்க நினைக்க, அதற்குள் அந்த போட்டோ கிராபர்,
“அட ஒரு இடத்துல நில்லுங்க மேடம், இப்போதான் பிரேம் செட் ஆகி இருக்கு..” என்று சிடுசிடுத்தார்..
அதில் மேலும் எரிச்சலுற்றவலாய் முகத்தை கடுமையாக்கி கொண்டே நின்றாள், மஹதி..
“மஹா கொஞ்சம் சிரியேன், ப்ளீஸ்…” என்று கிசுகிசுத்தது வேறு யாரு வேதாந்த் தான்.
அதில் அவனை ஒரு முறை முறைத்தவள், அவனை வெறுப்பேத்துவதற்க்காகாவே “இப்படி சிரிக்கடுமா..” என்று தன் முப்பத்தி இரண்டு பல்லும் தெரியுமாறு சிரித்து வைத்தாள்..
அதிலும் தான் அத்தனை அழகு அவள்…
மேடையை  பார்த்திருந்த அனைவருக்குமே, இரு ஜோடிகள் இருக்கிறார்கள் என்ற தோற்றத்தையே கொடுத்தது… ஏனெனில் மஹதி – வேதாந்த் ஜோடி பொருத்தம் அப்படி…
இவற்றை  சத்யா குணா தம்பதிகளின் பார்த்திருந்தனர்..
ஒரு வழியாய் போட்டோ ஷூட் முடிந்து, மணமக்களிடம் விடை பெற்றனர்.. போகும்  போது அந்த போட்டோ கிராபர் காதில் எதோ சொல்லி சென்றான் வேதாந்த்..
என்னவாக இருக்கும் ?????
எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்தால், விதிக்கு என்ன வேலை இருக்கும் ???
சத்யாவும், குணாவும் சாப்பிட செல்ல,  வேதாந்தை  அழைக்கவும் கொஞ்ச நேரம் போகட்டும் என கூறி இருந்தான்..
அவனுக்கு தான் அதை விட முக்கியமான வேலை இருந்ததே!!!!!
வேறு என்ன???
மஹதியை சைட் அடிப்பது தான்..
அவன் கீழே அமர்ந்து, மேடையில் இருந்த அவளை ரசித்து கொண்டிருந்தான்…
ப்ரியா தோழிகள் சிலர் மேடை ஏறி வரவும், இவள் கீழே இறங்கி வந்தாள்.. வந்தவள் தன் பாட்டி கமலாவதி பக்கத்தில் அமர்ந்தாள்..
“பாட்டி, சாப்பிட்டீங்களா?? அம்மா எங்கே, அவங்க சாப்பிட்டாங்களா?, அத்தை, மாமா எல்லாம் எங்கே???” என்று மூச்சு விடாமல் கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்..
“மதிமா பொறுமை, பொறுமை என்ன அவசரம் மெதுவா கேளு, கல்யாணம்னா சும்மாவா, அங்க உங்க அம்மா வந்தவங்களை கவனிக்க வேணாமா, அதான் உங்க அத்தை, மாமா கூட சேர்ந்து வந்தவங்களை எல்லாம் கவனிச்சுட்டு இருக்கா, அப்பறம் நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் நீ தான் இன்னும் சாப்பிடலை, போ  போய் சாப்பிடு..” என்று அவளையே விரட்டினார்..
தனி ஆளாய் ஒரு கல்யாண வேலையை எடுத்து செய்வதில் எவ்வளவு சிரமம்.. தன் தாயை நினைத்து சிறிது கஷ்டமாகவும் இருந்தது அவளுக்கு.. அவள் சாப்பிட சென்றதும், பின்னுடே வேதாந்தும் சென்றான்..
அவனை நினைத்து அவனுக்கே சிரிப்பு, கல்லூரி காலத்தில் செய்ய வேண்டியது எல்லாம் இப்போது செய்து கொண்டிருக்கிறான்… அவனின் மனட்சாட்சி கேள்வி எழுப்பி விட…
“காதல்ல இது எல்லாம் சாதாரணமப்பா..” என்று அதை தட்டி விட்டு சென்றான்..
மஹதி சாப்பிட சென்ற போது , கணிசமான கூட்டம் இருந்தது.. அதனால் அவள் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்தாள்.. அவளின் பின் புறத்தில் அவளுடைய உறவினர்களே அமர்ந்திருந்தனர்.. அவர்களின் பேச்சு கல்யாணத்தை சுற்றியே வந்தது.. அப்படியே மஹதியை பற்றியும்…
“இவங்களுக்கு இந்த கல்யாண பொண்ணு ரெண்டாவது பொண்ணு தானே, அப்போ முதல் பொண்ணு எங்கே??”
“அந்த பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே, அதுவுமில்லாம அவளுக்கு எப்படி கல்யாணம் எல்லாம் நடக்கும்” என்று இகழ்ச்சியாய் ஒருவர் மற்றவரிடம் சொல்ல,
“ஏன்..என்னாச்சு??” என்ற கேள்வி அடுத்து பிறந்தது..
“அவள் தான் காலேஜ் படிக்கும் போது, ஒரு கொலை செஞ்சவ தானே?? அப்பறம் எப்படி கல்யாணம் நடக்கும்??? எந்த மாப்பிளை தான் ஜெயில்க்கு போன பொண்ணை கல்யாணம் பண்ணிப்பானாம்???”
“என்ன சொல்ற நீ?” அந்த பெண்மணி நம்ப முடியாமல் திகைத்து கேட்டார்..
“அட ஆமாம், என்ன விஷயம் ஏதுன்னு எல்லாம் தெரியாது, ஆனா அந்த பெரிய பொண்ணு படிக்கும் போது கொலை பண்ணிருக்கு, ஜெயில்க்கு போய் இருக்குன்னு சொன்னங்க” என்று  அலட்சியமாய் சொல்லிக் கொண்டிருந்தாள்..
இது என்ன மாதிரியான குணம்… ஒருவரை பற்றி தெரியாமல், அவர்கள் மீது தவறு இருக்கிறதா, இல்லையா என்று தெரியாமல் கண்மூடித்தனமாக அடுத்தவர் சொல்வதை அப்படியே பரப்புவது…
இதில் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று தெரியவில்லை..
இதில் ஒரு வகை சுகம் இருக்கிறதோ என்னமோ?? அதனாலையே யாரும் முகத்திற்கு முன் பேசாமல், முதுகிற்கு பின் பேசுகிறார்களோ???
ஆனால் முதுகா பதில் சொல்ல போகிறது??
முகம் தானே பதில் சொல்லி ஆக வேண்டும்??..
இவர்கள் பேசுவதை கேட்ட இரண்டு ஜீவன்களுமே உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தனர்…
மஹதி அவர்களின் பின் புறத்தில் இருந்தாள் என்றாள், வேதாந்த் அவர்கள் அருகில் இருந்தான்.. அதனாலையே இருவரும் பேசுவது இவர்களுக்கு தெளிவாக கேட்டது…
அவள் சாப்பிட ஆரம்பித்த போது தான் அவர்கள் பேச்சு  ஆரம்பித்திருந்தது.. ஆனால் அவர்கள் பேச பேச ஒரு பருக்கை உணவு கூட உள்ளே இறங்கவில்லை… கண்களில் கண்ணீர் செந்நீராய் மாறி பொழிந்து கொண்டிருந்தது..
வேதாந்த்திற்கும் அவர்களை அடித்து துவம்சம் செய்யும் ஆத்திரம் தான்..ஆனால் என்ன செய்ய???
இந்த விஷயத்திற்கு பிள்ளையார் சுழி இட்டவனே இவன் தானே???
அதுவும் இந்த நிலையில் எதுவும் செய்யவும் முடியாதே???
மஹதி தன் துக்கம் தாளாமல் அங்கிருந்து ஓடி சென்றாள்.. அவனுமே அவளையே பார்த்து கொண்டிருந்தததால் அவள் பின்னே சென்றான்…
இருவரையும் பார்த்த தமிழுக்குள் ஒரு பதற்றம்..
“மதி, மதி…” என்று மகளை அழைக்க..
அது அவள் காதில் விழுந்தால் தானே?? ஆனால் அதை கவனித்த வேதாந்தோ,
“நான் பாத்துக்கிறேன் ஆன்ட்டி, நீங்க இங்க பாருங்க…” என்று அங்கிருந்தவர்களை கவனிக்க சொன்னான்..
மஹதி, வேகமாய் அங்கிருந்த தனி அறைக்குள் சென்று முட்டியில் முகம் புதைத்து அழுது கரைந்தாள்..
அவள் பின்னே வந்த வேதாந்த், அந்த அறைக்குள் நுழைந்திருந்தான்… வந்த வேகத்தில் கதவை தாளிட்டான்…
அந்த சத்தத்தில், நிமிர்ந்த மஹதி, அவனை கண்டதும் ஆத்திரமாய் முறைத்தாள்.
“ மஹா!!!!”
அவன் பேசுவதை தடுக்க நிறுத்தவென்று கையை தூக்கி அவன் முன் பேசாதே என்று நிறுத்தியவள்..’
“போதுமா? இதுக்கு தானே ஆசை பட்ட, அது நடந்திடுச்சு இல்ல, இன்னும் என்ன பண்ண போற?? இதுக்கு நீ ஒரேடியாய் என்னை  அப்போவே கொன்னு இருக்கலாமே??? இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் என்னை ஏன் சித்திரவதை பண்ற?? என்னிக்கு உன் கண்ல பட்டேனோ அப்போ இருந்தே என் லைப்ல நிம்மதி போச்சு.. இன்னும் என்ன வேணும்ன்னு என் பின்னாடியே வர்ற??” என்று சரமாரியாய் அவனை கேள்வி கேட்டவள், தன் தலையில் அடித்து கொண்டே அழுகையை தொடர்ந்தாள்..
அவள் வேதனையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. ஆனால் அதை ஆனால் அதை வாங்கிக் கொள்ள முடியாதே..
அவன் அறிவீனமாய் செய்த செயல், முழுதாய்  எதுவுமே தெரியாமல் செய்த தவறு இந்த அளவிற்கு அவளுக்கு துன்பம் தருகிறதே… அவனையும் வதைத்து கொண்டிருக்கிறதே!!!!!! அவளின் அழுகையை பொறுக்க முடியாமல்,
“ மஹா.. இங்க பாரு…” என்று சொன்னவன் மேலும் என்ன சொல்லி அவளை சமாதனம் செய்வது என்று தெரியவில்லை..
“என்ன இன்னும் என்ன சொல்லி என்னை சித்ரவதை பண்ண போற?? என்ன பண்ணனும்ன்னு நினைக்கிறியோ பண்ணு?? நான் எதுவும் சொல்ல மாட்டேன்.. ஏன்னா சொல்லத்தான் என்கிட்டே வார்த்தைகள் இல்லை, வலிகள் மட்டும் தானே இருக்கு??” என்றவாறே முகத்தை மூடி அழுதாள்..
அவனின் அந்நிலை மென்மேலும் அவன் ஆத்திரத்தை கிளப்பியது.. கண்களையும், கைகளையும் மூடி அதை அடக்கியவன் தோற்று தான் போனான்..
வேகமாய் அவன் அருகில் போனவன், அவளை இறுக அணைத்திருந்தான்…
அவனில் அணைப்பை உணர்ந்தவள் விலக முயன்றாள்..
ஆனால் அவனின் அணைப்போ, விட்டால் விலகி விடுவாளோ என்று பயத்தில் இன்னும் இறுக்கமாய், அவளின் எலும்புகள் நொறுங்கி விட கூடுமோ என்ற விதத்தில் அணைத்திருந்தான்…
அவனின் அணைப்பில் இருந்தவள் விலக முயன்றவள், விலக முடியாமல் அவனில் அணைப்பிலேயே இருந்தாள்.
 
 

Advertisement